விசுவாசமுள்ளவனாயிரு Chicago, Illinois, USA 61-0427 1...?... தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், ஆகவே நாம் ஒன்றாக கர்த்தராகிய இயேசுவை சேவிக்கலாம். பாருங்கள், அப்படியே... ஓ, நான் இன்று மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். தனிப்பட்ட பேட்டிகளில் கர்த்தர் எவ்வளவாக சில மகத்தான காரி யங்களைச் செய்தார்! நான் அதைக் குறித்து மிகவும் நன்றியுள்ள வனாயிருக்கிறேன். மேலும் இப்பொழுது, நாளை இரவு... நாளை வெள்ளிக் கிழமை. நாளை சனிக்கிழமை என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். நாம் விரும்புகிறோம் - இங்கே நடைபெறும் வியாபார புருஷர்களின் காலை உணவுக் கூட்டத்தை குறித்து மறந்து போக விரும்பவில்லை, அது இந்தப் பள்ளிக் கூடத்தில் என்று நம்புகிறேன். அவர்களுக்காக நுழைவுச் சீட்டுகளை அல்லது ஏதோவொன்றை விற்றார்கள் என்று ஊகிக்கிறேன், இல்லையா? காலை உணவுக்கான அந்த நுழைவுச் சீட்டுகளையும் மற்றவைகளையும் எவ்வாறு பெற்றுக் கொள்வது என்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்று ஊகிக்கிறேன். 22.நீங்கள் வந்து பார்க்கக் கூடுமானால் - நீங்கள் வரும் படியாக வழிநடத்தப்படுவதை உணர்ந்தால், நாங்கள் மகிழ்ச்சியா யிருப்போம். இப்பொழுது, பில்லி எப்போதுமே என்னிடம் கூறு கிறான், அவன், 'அப்பா, நீங்கள் செய்கிற ஒரு காரியம் என்ன வெனில், ஜனங்களைக் களைப்படையச் செய்வது தான். அவர் கள் எப்படியாயினும் களைப்படைந்து விடுகின்றனர். அவர்கள் அங்கே மணிக்கணக்காக உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நீர் நீண்ட நேரமாகப் பிரசங்கம் பண்ணுகிறீர்' என்று கூறுகிறான். நான், 'நல்லது, மகனே, நான் சிகாகோ கூட்டத்தில் அதைச் செய்ய முயற்சிக்கப் போகிறேன். நான் என்னுடைய கைக்கடி காரத்தில் ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் அலாரம் வைத்து, பிறகு அது மணியடிக்கும் போது, நான் நிறுத்தி விட்டு, ஜெப வரிசையை அழைக்கப் போகிறேன்' என்றேன். அவன், 'நீர் நன்றாக அலாரம் வைக்காமல் போகலாம், ஏனெனில் அது அப்படியிருக்கப் போவதில்லை...' என்றான். அது இரண்டு அல்லது மூன்று தடவைகள் ஒலியெழுப்பினது என்று உங்களுக்குத் தெரியும், அது அலார மணியடித்தது, நான் அதை ஒருபோதும் அறியவேயில்லை. நான் இங்கே மிக அதிக மாகச் சத்தமெழுப்பிக் கொண்டிருக்கிறேன், ஏன், அது ஒலியெ ழுப்பின போது, அதை நான் கேட்கக் கூட இல்லை, எனவே நான் அப்படியே... நான் உங்களை சலிப்படையச் செய்யவில்லை என்று நம்புகிறேன், உங்களுக்குத் தெரியும். நான் - நான் அதற்காக இங்கு வருவதில்லை. நான் - நான் வருகிறேன், நான் அவரை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். நாம் சரியாக இந்நேரத்திலும் மிகவும் அதிகமாக அவரை நேசிக்க வேண்டு மென்று நான் அறிவேன், நான் ஒரே இரவில் அதில் மிக அதிக மானவற்றை (உங்களிடம்) தள்ள முயற்சி செய்கிறேன். நீங்கள் பாருங்கள்? நாம் எந்த நேரத்தில் அழைக்கப்படப் போகிறோம் என்பது தெரியாது... அப்போது, நல்லது, நான் எந்த சமயத்தில் அழைக்கப்படப் போகிறேன் என்பது எனக்குத் தெரியாது என்று நான் நினைக்கிறேன். நம்மில் எவருக்குமே அது தெரியாது. எனவே நம்மால் செய்யக் கூடும் போது, நம்மால் இயன்றதை நன்றாகச் செய்வோம். அது சரியே. 33.என்னுடைய தாயார் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்... நான் ஒருபோதும் என்னுடைய ஜீவியத்தில் நடனத்திற்குச் சென்றதே கிடையாது. ஆனால் ஒருதடவை சபையில் ஆடிய ஒரு - ஒரு பரிசுத்த நடனத்தைக் குறித்து மாத்திரமே கேள்விப்பட்டுள்ளேன். நான் ஒருபோதும் அதை மறக்கவே மாட்டேன். நாங்கள் இன்னும் ஒரு பாப்டிஸ்ட் சபையில் இருந்த போது, நான் எப்போதுமே என்னுடைய இருதயத்தில் ஒருவிதமான குற்றம் கண்டுபிடிக்கிற வனாக இருந்தேன். நான் அதை சத்தமாகக் கூறமாட்டேன், ஏனெனில் நான் - நான் அதைச் செய்வதற்கு பயந்திருந்தேன். தேவன் செய்கிற எதுவும்... நான் அதைக் கண்ட போது, அது காண்பதற்கு ஒருவிதமான விநோதமாக இருக்கிறதே என்று நான் எப்போதுமே நினைத்துண்டு, பெந்தெகோஸ்தே ஜனங்க ளுடன் முதலாவது அறிமுகமானபோது, அவர்கள் நடனமாடு வதைக் கண்டேன், உங்களுக்குத் தெரியும், சுற்றி சுற்றி நடன மாடுதல். நான், 'இப்பொழுது, அது வேதாகமத்தில் இல்லையென்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் எதை - எதைக் குறித்து நடனமாடுகின்றனர்?' என்று எண்ணினேன். அதன்பிறகு, ஒரு இரவில், தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷத்தின் பேரில் ஒரு விளக்க வரைபடத்தைக் கொண்டு போதித்துக் கொண்டிருந்தேன். அது புதுவருட இரவு நேரமாக இருந்தது. நான் நடுஇரவு மட்டுமாக வரைபடத்திலிருந்து போதித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு கரும்பலகையைப் போன்ற ஒரு விளக்க வரைபடமாக இல்லை, நான் போதித்துக் கொண்டிருந் தேன். அங்கே கொஞ்சம் பெந்தெகோஸ்தே ஜனங்கள் லூயிவில் லிலிருந்து வந்திருந்தனர். ஓ, அவர்களில் சில சகோதரிகளும் இருந்தார்கள். ஒரு சகோதரி அங்கேயுள்ள ஒரு சபையின் மேய்ப் பராக இருந்தாள், அவளிடம் ஒரு... அவர்கள் ஆடைகளை தேய்த்து வெளுப்பதற்காக பயன்படுத்தப்படும் சொரசொரப்பான பலகைகளையும், தையல் வேலையின் போது விரலுக்குப் பாதுகாப் பாக அதன் நுனியில் அணிந்து கொள்ளப்படும் சிறிய உலோகத் தாலான விரல் கவசங்களையும், மற்றும் - மற்றும் கூச்சல் போடு வதற்கான எல்லா விதமான காரியங்களையும் வைத்திருந்தனர். மேலும் - மேலும் அவர்களெல்லாரும் ஏதோவொரு வகையில் ஒரே சிந்தையாயிருந்தனர். அது என்னவென்று எனக்குத் தெரி யாது, அவர்கள்... அவள் பியானோ இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கினாள், அங்கிருந்த இந்த எல்லா சிறு பெண்களும் இந்த உலோகத்தாலான விரல் கவசங்களை அந்த சொரசொரப் பான பலகைகளிலும் காரியங்களிலும் அடிக்க வேண்டியிருந்தது. அவர்கள் - அவர்கள் அங்கே வானத்தில் ஒரு சந்திப்பு இருக்கப்போகிறது, இனிமையோடே விடைபெறுகிறேன், என்ற பாடலைப் பாடிக் கொண்டிருந்தனர். அல்லது ஏதோவொரு... நல்லது, சிறிய பெண் மேய்ப்பரான, பியானோவை வாசித்துக் கொண்டிருந்த அந்த சிறு பெண், ஓ, அவள் ஒரு சாக்குக்கட்டியைப் (chalk) போல வெள்ளையாக மாறினாள். அவள் அப்படியே இவ்விதமாக அதை வாசிக்கத் தொடங்கினாள், நான் - நான் என்னுடைய ஜீவியத்திலேயே அதைப் போன்று வாசிக்கிற எதையும் ஒருபோதும் கண்டதே யில்லை. நான், 'இப்பொழுது, என்ன இது?' என்று எண்ணி னேன். மேலும் அதன்பிறகு, அந்த சொரசொரப்பான பலகையின் மேல் ஒருத்தி, அதே காரியத்தைச் செய்ய வேண்டியிருந்தது. பிறகு இங்கே, இரண்டு அல்லது மூன்று பேர் எழுந்து நின்றனர். இளம்பொன்னிற தலைமுடியுடைய ஒருத்தி தரையில் நடனமாட வேண்டியிருந்தது. நான், 'ஓ, என்னே' என்று எண்ணினேன். தரையில் மேலும் கீழுமாக அவளால் இயன்ற வரை கடின மாக, அவ்விதமாக நடனமாடிக் கொண்டிருந்தாள், அவள் ஏறக் குறைய பதினாறு, பதினெட்டு வயதுடைய சிறு பெண்ணாக இருந்தாள். நான் அப்படியே ஒரு வாலிபனாக இருந்தேன். மேலும் நான்... 'இப்பொழுது, அது ஏதோவொன்றாக இல்லையா? இங்கே என்னுடைய சபையிலே அது நடக்கிறது. நான் அதை எவ்வாறு அகற்றாமலிருப்பேன்? பாருங்கள்?' அவ்விதமாக அவளைக் கவனித்து, நான், 'அவர்கள் எதற்காக அதைச் செய்கின்றனர்? அவர்கள் ஏன் அதை செய்ய வேண்டும்? அவர்கள் தங்களுடைய இசையை இசைத்து, தொடர்ந்து அதைச் செய்து, அதை இவ்விதமாக ஏன் தனியே விட்டு விட முடியவில்லை?' என்று எண்ணினேன். நான், 'நல்லது, அது பயங்கரமாக உள்ளதே' என்று எண்ணினேன். 44.நான், 'இப்பொழுது, நடனமாடுதலைப் போன்ற அப்படிப் பட்ட காரியம் வேதாகமத்தில் உள்ளதா?' என்று நினைக்க வேண்டியிருந்தது. தாவீது உடன்படிக்கைப் பெட்டி வந்து கொண் டிருந்ததைக் கண்ட போது, அந்த உடன்படிக்கைப் பெட்டியைச் சுற்றி நடனமாடினதை ஞாபகப்படுத்திக் கொண்டேன். பாருங்கள்? அவன் கர்த்தருக்கு முன்பாக நடனமாடினான். கர்த்தர், 'இவன் என்னுடைய இருதயத்திற்கு ஏற்ற மனுஷன்' என்றார். நான், 'நல்லது, இப்பொழுது, அது... அவர்... அவன் எதற்காக நடனமாடினான்?' என்று நினைத்தேன். நல்லது, அவர்கள் ஒரு வெற்றியைக் கொண்டிருந்தனர். மிரியாம் - அவர்கள் செங்கடலைக் கடந்த போது, மோசே ஆவியில் பாடினான், மிரியாம் தம்புருவை எடுத்து அடிக்கத் தொடங்கினாள், அவர்கள் கடற்கரையினூடாகச் சென்று, எல்லா இஸ்ரவேல் குமாரத்திகளும் ஆவியில் நடனமாடினர். பாருங்கள்? அவர்கள் வெற்றி பெற்ற போது, நடனமாடினதை நான் கண் டேன். நான் நினைத்தேன் - 'நல்லது, நான் போதுமான வெற்றி யைப் பெற்றிருக்காமல் இருக்கலாம்' என்று நினைக்க வேண் டியிருந்தது. பாருங்கள்? நான் அதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். மேலும் உங்களுக்குத் தெரியும், நான் என் னுடைய காலை தட்டிக் கொண்டே அதற்கு ஆதரவு தெரிவித்த பிறகு, நான் அதை அறியும் முன்பே, நானும் அந்தச் சிறு பெண்ணுடன் அந்த நடைபாதையில் நடனமாடிக் கொண்டிருந் தேன். 55.ஓ, நான் அப்போது அடையாளம் இடப்பட்டேன். இன்னும் அந்த ஜனங்களுடைய முகத்தின் மேல் உணர்ச்சி வெளிப் பாட்டைக் காண முடிந்தது. அவர்களுடைய மேய்ப்பர் தரையில் இந்த - அந்த சிறு பெண்ணுடன் சுற்றி சுற்றி நடனமாடிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். நானும் கூட அங்கே வெளியில் இருந்தேன். நான் என்னுடைய ஜீவியத்திலேயே ஒருபோதும் தரை யில் நடனமாடியதே கிடையாது. மேலும்... ஆனால் நான் நினைத் தது தவறு என்பதை ஒப்புக் கொண்டு, 'அவள் மேலிருந்தது இது தான்' என்று கூற வேண்டியிருந்தது. ஆனால் அது ஒரு சபையின் தரைப்பகுதியாக இருந்தது. எனவே நாம்... உங்களுக்குத் தெரியும், பிசாசுகள் பெற்றிருப்பதெல்லாம், தேவன் உண்மையான காரியத்தைப் பெற்றிருந்த பிறகு, அவன் - அவன் - அவன் அதை காப்பியடிக்கிறான். அது சரியே. அது மிகவும் சரியே. சாத்தானால் சிருஷ்டிக்க முடியாது. அவன் சிருஷ் டித்த காரியங்களை தாறுமாறாக்குகிறான். உங்களுக்குத் தெரி யுமா? எனவே அவனால் சிருஷ்டிக்க முடியாது; அவன் ஒரு சிருஷ்டிகன் அல்ல; அவன் தாறுமாறாக்கும் ஒருவன். அநீதி என்பது என்ன? நீதி தாறுமாறாக்கப்படுதல் தான். பாருங்கள்? ஒரு மனிதன் ஒரு மனைவியை பெற்றுக் கொள் வதோ, அவளுக்கு ஒரு - ஒரு புருஷனாக இருப்பதோ, குடும்ப ஐக்கியமோ சட்டரீதியானதாகும். ஆனால் அதே ஸ்திரீ (ஆண்), வேறொரு ஸ்திரீயுடன் அதே விதமாக நடந்து கொண்டால், அது அவனைக் கடிந்து கொண்டு அவனுடைய ஆத்துமாவை தூரமாக அனுப்பி விடுகிறது. பாருங்கள்? அது தவறானது. அது என்ன? நீதி தாறுமாறாக்கப்படுதல். பாருங்கள்? மேலும் அது ஒரு... சத்தியமே எப்போதும் சரியாக உள்ளது. ஒரு பொய் என்பது என்ன? உண்மை தாறுமாறாக்கப்பட்டு (பாருங்கள்?) ஒரு பொய்யைப் பிறப்பிக்கிறது. எனவே அவ்வித மாகத்தான எல்லா பாவமும் இருக்கிறது, அது நீதி தாறு மாறாக்கப்படுதல். 66.எனவே நான்... என்னுடைய தாயார் சொன்னதைக் கேட்டேன், அவர்கள் வழக்கமாக வயதானவர்களுக்கான நடனங்களுக்குப் போவார்கள், அவர்களும் தகப்பனாரும், அப்படிப்பட்ட வகையினரோடு போவார்கள்... பாருங்கள், அவர்கள், அவர்கள் வயதான பிடில் வாசிப்பவரைக் கொண்டிருந்தனர், அவர் அந்த மூலையில் வந்து நின்று பிடில் வாசிப்பார், கென்டக்கி ஜனங்க ளாகிய அவர்கள் - அப்பாவிடம் எந்த பணமும் இல்லாதிருந்தது, உங்களுக்குத் தெரியும், உங்களுடைய பாக்கெட்டுகளில் குலுக்கும்போது சலசலவென்று ஒலியெழுப்புவதற்கு உங்களிடம் கொஞ்சம் பணம் இருக்க வேண்டுமென்று ஊகிக்கிறேன், அவர் வெளியே சிறு பீப்பாய் அண்டை சென்று கொஞ்சம் ஆணி களைப் பெற்று, அவைகளை தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக் கொள்வதை கண்டிருக்கிறேன், உங்களுக்குத் தெரியும், அவரும் அம்மாவும் சுற்றி சுற்றி நடனமாடுவார்கள். அவர்கள் பரிசுகள் வாங்கியிருக்கிறார்கள். அவள் இவ்விதமாகத் தன்னுடைய கீழ்ச் சட்டையை (skirt) இழுத்து விடுவதை என்னால் காண முடி கிறது, உங்களுக்குத் தெரியும், அந்த துடிப்பான நடனத்தைக் குறித்து உங்களுக்குத் தெரியும், இதே போன்று ஒருவர் மற்ற வரோடு சுற்றி சுற்றி ஆடுதல். நான் அப்பாவைப் பார்த்திருக் கிறேன். நான், 'அது - அது மோசமான தகப்பன்; அவைகள் ஆணிகள், அது பணமல்ல. நீங்கள் பாருங்கள்?' என்று நினைத் தேன். அவரிடம் எந்த பணமும் இல்லையென்று எனக்குத் தெரியும்; அவர் தன்னுடைய பாக்கெட்டில் கொஞ்சம் ஆணிகளை வைத்திருந்தார், அது இவ்விதமாக மேலும் கீழுமாக குலுங்கி ஒலியெழுப்பிக் கொண்டிருந்தது.' பாருங்கள்? ஏறத்தாழ பகல் வெளிச்சம் வரும் வரையில் அவர்கள் அதை சரியாக செய்து கொண்டிருப்பார்கள். கொஞ்சம் ஜனங்கள் அங்கிருந்து வீட்டிற்குப் போய் விடுவார்கள்... ஓ, பழைய கென்டக்கி ஜனங்கள் சுற்றிச் சுற்றி வந்து, ஒரு வீட்டிலிருந்து வேறொரு வீடு வரை நடனங் களைக் கொண்டிருப்பார்கள். பிறகு, அவர்கள் காலையில் தங்க ளுடைய காலணிகளைக் கரங்களில் பொதிந்து வைத்துக்கொண்டு வீட்டிற்குப் போவார்கள், ஏனெனில் அவர்களுடைய கால் நடனமாடினதின் காரணமாக மிகவும் புண்ணாகி இருக்கும். நல்லது, நீங்கள் அதை பிசாசுக்காகச் செய்யக்கூடுமானால், ஏன் உங்களால் பொறுத்திருக்க முடியவில்லை, நாம் முழு இரவும் பிரசங்கித்து, அப்படியே தேவனைத் துதித்து, ஆவிக்குள்ளாகிப் பார்ப்போம், நிச்சயமாக. அது - அது நித்தியமான பிரிவினைக்காக இருக்குமானால், நித்திய ஜீவனைக் குறித்து என்ன? நாம்...நாம் இதை அதிகமாக பாராட்டக் கூடும், நாம் பாராட்ட வேண்டியதைக் காட்டிலும் அதிகமாக, நிச்சயமாக. ஆனால் சாத்தான் இதன் பேரில் துரிதமாக நம்மைக் களைப்படையச் செய்வான், அல்லது 'நாம் மிகவும் களைப்பபாயிருந்தோம்' என்று நம்மிடம் கூறுவான். ஆனால் அதன் காரணமாக களைப்படைந்தவராக என்னிடம் வந்து, நீங்கள் என்னுடன் பயங்கரமான நேரத்தைக் கொண்டிருந்தீர்கள் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். 77.நான் வயிற்றுக் கோளாறிலிருந்து சுகமடைந்தது எனக்கு ஞாபகம் வருகிறது. அவன் - சாத்தான், 'நல்லது, உன்னால் நன்றாக சாப்பிட முடியாது' என்றான். 'ஏனெனில், மருத்துவர், 'நீ சாப்பிடுவாயானால் மரித்து விடுவாய். உன்னுடைய வயிறு புண்ணாயுள்ளது, அது ஒரு பெரிய படுமோசமான அல்சர்' என்று கூறியுள்ளார்' என்றான். ஆனால் கர்த்தரோ, அவர் என்னை சுகமாக்கி விட்டதாக கூறினார். எனவே நான் வேறு யாரோ ஒருவருடைய வார்த் தைக்குச் செவி கொடுக்க வேண்டியிருந்தது, இந்நிலையில், நான் -நான் தேவனுடைய வார்த்தைக்குச் செவி கொடுத்தேன். ஓ, அவ்வாறு அது என்னை சாகடித்துக் கொல்வது போன் றிருக்கும். நான் அப்படியே... வெந்நீர் என்னுடைய வாயிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கும், எனவே, இரண்டு அல்லது மூன்று நாட்கள் என்னுடைய வயிற்றை இவ்விதமாகப் பிடித்துக் கொண்டே சுற்றிச் சுற்றி போய்க் கொண்டிருப்பேன். 'திரு. பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?' என்று கேட்டார். நான் இவ்விதமாக சீற்றத்தோடு (tamping away), 'ஓ, நான் அருமையாக உணருகிறேன்' என்றேன். யாரோ ஒருவர், 'நீ பொய் சொல்லுகிறாய்' என்றார். நான் பொய் சொல்லவில்லை, நான் அறிக்கை செய்து கொண்டிருந்தேன். அறிக்கை செய்தல் என்பது 'அதே காரியத் தையே திரும்பச் சொல்லுதல்.' அவருடைய தழும்புகளால் நான் குணமானேன். எனவே அது... அது அதைச் செய்கிறது. பாருங் கள்? நான் அறிக்கை செய்து கொண்டிருந்தேன். எனவே, சாத்தான் என்னிடம் கூறினான், 'நீ நிந்தையை வருவிக்கிறாய்' என்றான். 88.நான், 'இப்பொழுது, இங்கே பார், பையனே. நான் சாட்சி கூறுவதைக் கேட்டு நீ சந்தோஷப்படுவாயானால், அது நடப்பதை எதிர்நோக்கி இதேயிடத்தில் தங்கியிரு. ஆனால் உனக்கு கேட்க பிடிக்கவில்லையெனில், நீ அப்பாலே போ, அதுவே நல்லது, ஏனெ னில் நான் - நான் எப்படியாயினும் சாட்சிகூறத்தான் போகிறேன்' என்றேன். எனவே அது தான் இது. நீங்கள் எந்தப் பக்கம் நிலைத்து நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவன் அறியும்படி நீங்கள் செய்ய வேண்டும், பிறகு அசையாமல் இருங்கள், அப்போது நிலைத்து நிற்கிறீர்கள். அந்தவிதமாகத்தான நாம் எப் போதுமே செய்ய வேண்டும், நாம் சரியென்று அறியும் இடத்திற்கு வர வேண்டும், பிறகு அதில் விசுவாசம் கொண்டிருக்க வேண் டும். நீங்கள் சரியாக இல்லையென்றால், உங்களுக்கு விசுவாசம் இருக்க முடியாது. இப்பொழுது அவனிடம் வெற்று வீம்பு பேச்சு பேச முயற்சிக்க வேண்டாம். உங்களுடைய வீம்பு பேச்சுக்களை அவன் எடுத்துக் கொள்ள மாட்டான். பாருங்கள்? அவனிடம் வீண்பேச்சு பேச வேண்டாம். ஆனால் நீங்கள் உண்மையாகவே விசுவாசிக்கும்போது, நீங்கள் வீண்பேச்சு பேச மாட்டீர்கள். ஏதோ வொன்று ஏற்கனவே உங்களுக்கு சாட்சி கொடுக்கும், பிறகு நீங்கள் - அதன்பிறகு நீங்கள் சரியாக இருக்கிறீர்கள். எனக்குக் கவலையில்லை, யாருமே உங்கள் மேல் ஒரு போதும் கைகளை வைக்காமல் இருக்கலாம். நீங்கள் ஒருபோதும் எதையும் கேட்காமல் இருக்கலாம்; ஆனால் அது தேவனுடைய வார்த்தை என்றும் அது உங்களுக்கான தேவ சித்தம் என்றும் உங்களுடைய இருதயத்தில் அதை உறுதிப்படுத்தும் ஏதோ வொன்று இருக்கும் காலம் வரை, தேவையானது அவ்வளவுதான். அநேக நேரங்களில், இந்த வரங்களும் காரியங்களும் சற்று உற்சாகப்படுத்துகின்றன. 99.இன்றிரவு எனக்கு முன்பாக இங்கே உட்கார்ந்து கொண் டிருக்கும் ஒரு பாப்டிஸ்ட் போதகரை நான் கவனித்துக் கொண் டிருக்கிறேன். நான் தவறாக இல்லையெனில், இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பது கென்டக்கியிலுள்ள சோமர்செட்டிலிருந்து வந் திருக்கும் திரு. டால்டன் அவர்களா? அது அவர்தான் என்று எண்ணினேன். நான் சகோதரன் எட் டால்டன் அவர்களை நினைவுகூருகிறேன். ஓ, என்னே. ஒரு பாப்டிஸ்ட்... அவர் மேலே வந்து... ஆனால் அவர் விசுவாசித்தவராய் சபைக்கு வந்து, பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, திரும்பிக் கீழே போய் விட்டார். ஏனெனில் எப்போதும் போல அவரைச் சுற்றியிருந்த அனைவரும் அவரைக் கீழடக்கி வைத்தனர். எனவே, அதன் பிறகு, நாம் இப்பொழுது எந்த நேரமும் சம்பவிப்பதற்காக எதிர் நோக்கியிருக்கும் காரியத்தை பரிசுத்த ஆவியானவர் விளக்கி கூறின போது, அது சபையில் சேர்த்துக் கொள்ளப்படப் போகிற வேறொரு வரமாகும்... மேலும் அது ஒரு அற்புதமான காரிய மாகும். நம்முடைய மதரீதியான செய்தித்தாள்களில் அதைக் குறித் தும், அணில்களைக் குறித்தும், மற்றவைகளைக் குறித்தும் வந்த கட்டுரைகளை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் - அநேகமாக நாம் வாசித்திருக்கிறோம். மேலும் சகோதரன் டால்டனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். நல்லது, நான் எண்ணுகிறேன், எத் தனை? சுமார் எட்டு பிள்ளைகள், அது தான் என்று எண்ணு கிறேன்...? ஒன்பது பிள்ளைகள், ஒன்பது பிள்ளைகள், மற்றும் 13க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள், அவர்கள் எப்படி யிருப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும், ஒரு விதமான... ஒரு ஏழையான தகப்பனாரும் தாயாரும் - அவர்கள் எவ்வளவு கடினமாக ஜெபித்தனர், தேவன் அவர்களுடைய பிள்ளைகளை இரட்சித்தார்... 1010.ஒரு நாள் கூடாரத்தில், பரிசுத்த ஆவியானவர் ஒரு ஸ்திரீயிடம் பேசினதை அவர் கண்டிருந்தார், பரிசுத்த ஆவியா னவர் அவளிடம், 'இப்பொழுதே நீ விரும்பும் எதையும் கேள். அதை உனக்குக் கொடுக்கும்படி தேவன் என்னிடம் கூறினார்' என்றார். 'நான் என்ன கேட்கலாம்?' என்றாள். நான், 'நல்லது, இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு ஊனமுற்ற சகோதரி உனக்குண்டு, அவள் பிறந்ததிலிருந்து ஊனமுற்றிருக்கிறாள்' என்றேன். இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதர் அங்கிருந்தார், அவர் தான் பாங்ஸ் உட்ஸ், அவர் என்னுடன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அந்த ஸ்திரீயினுடைய பெயர் திருமதி. ரைட். நான், 'உனக்கு வயதான தகப்பனாரும் தாயாரும் இருக்கிறார்கள்; அங்கிருக்கும் அந்த சிறிய அற்பத்தனமாக பண்ணையில் வருடத்திற்கு 200 டாலர் களையும் விட குறைவான வருமானத்தில் ஜீவித்துக் கொண் டிருக்கும் ஒரு விதவையாக நீ இருக்கிறாய்' என்றேன். நான், 'சகோதரி ஹாட்டி, நீ கேட்பதற்காக அநேக காரியங்கள் உள் ளன' என்றேன், ஆனால் நான், 'அந்த அணில்களைக் குறித்து என்னிடம் கூறின அதே தேவன் - நான் பேசிய போது, அந்த அணில்கள் அங்கே சரியாக நின்று கொண்டிந்தன' என்றேன். ஏழு தடவைகள் அவ்வாறு செய்யப்பட்ட போது, அவைகள் சரியாக அங்கேயே நின்று கொண்டிருந்தன, அங்கே நீங்கள் நோக்கி, அதைப் பார்க்கிறீர்கள், ஒன்று சுவரின் மேல் இருப்பது கூடாத காரியமாக இருந்த போது, அது ஏதோவொன்றை உறுதிபடுத்தினது. நான், 'நீ விரும்புகிற எதை கேட்டாலும் அது உன்னுடைய தாகும் என்று அவர் என்னிடம் கூறுகிறார்' என்றேன். அவர், 'அதை என்னிடம் சொல்லும்படி நீ கேள்' என்றார். அவள், 'நல்லது, நான் என்ன சொல்ல வேண்டும்?' என்றாள். நான், 'நீ விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேள்; அது சரியாக இங்கேயே உனக்கு அருளப்படும். அது அவ்வாறு இல்லையென்றால், தவறான ஏதோவொன்றை நான் - நான் உன்னிடம் கூறியிருக்கிறேன்' என்றேன். அவள், 'நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, என்ன கேட்க வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை' என்றாள். அவள் சொன்னாள்... 13 முதல் 19 வயதுக்குட்பட்ட இரண்டு பையன்கள் அவளுக்கு இருந்தார்கள். ஓடுகாலிகளைக் குறித்துப் பேசுகிறீர் கள், அவர்கள் அவ்வாறு தான் இருந்தார்கள், அவர்கள் எல்லா நேரமும் அவளுக்கு இருதய வேதனையைக் கொடுத்துக் கொண் டிருந்தார்கள், பரிதாபமான விதவை தாயார். எனவே அவளுடைய கணவன், நான் அவளை, அவளுடைய புருஷனோடு விவாகம் பண்ணி வைத்தேன். மேலும் அவர்கள்... அவளுடைய புருஷன் ஒரு இழுவை இயந்திரத்தில் கொல்லப்பட்டான். அந்தப் பையன்கள் காட்டுமிராண்டித்தனமாகிப் போயிருந்தனர். அவள், 'நல்லது, என்னுடைய இரண்டு பையன்களின் இரட்சிப்பு எனக்கு வேண் டும்' என்றாள். நான், 'நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அந்த இரண்டு பையன்களையும் உனக்களிக்கிறேன்' என்றேன். அவர்களிரு வரும் அவளுடைய மடியில் விழுந்து கிறிஸ்துவிடம் வந்தனர். இப்பொழுது, இன்றிரவு சகோதரன் பாங்ஸ் உட்ஸ் இக்கட்டிடத்தில் எங்கோ உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அது சம்பவித்ததைக் காண அவர் அங்கேயிருந்தார். இரண்டு பையன்களுமே அருமையானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சபை யில் எல்லா நேரமும் கால்கழுவுதலிலும், இராப்போஜனத்திலும் பங்கு கொள்கின்றனர், நாங்கள் கால்கழுவும்போது, கால்கழுவு பவர் - நாங்கள் எங்களுடைய கரங்களை அவர்கள் மேல் வைத்து ஜெபம் பண்ணுகிறோம். அந்த சிறிய பையனுக்கு சுமார் 14 வயதிருக்கும், அன்றொரு இரவில் எங்களுடைய மேய்ப்பரான சகோதரன் நெவில் அவர்கள் தம்முடைய கரங்களை அவன் மேல் வைத்து அவனுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். அழ கான சிறு பையன்... 1111.எனவே சகோதரன் எட் டால்டன் அது சம்பவித்ததைக் கண்டிருந்தார்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார். அவர் வெளியே வந்து, சுற்றுமுற்றும் திரும்பி னார், பரிசுத்த ஆவியானவர், 'எட்டுடைய பிள்ளைகளுக்காகப் பேசு' என்றார். நான், 'சகோதரன் டால்டன், சீக்கிரமாகப் பரிபூரணமாக வெளிப்படும் என்று நாம் எதிர்நோக்கியிருக்கிற அதே வரத்தி னாலே பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறுகிறார், நான் உம்முடைய பிள்ளைகளை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்களிக் கிறேன்' என்றேன். அவர் வீட்டிற்குச சென்ற போது, அவருடைய மகளும் மகனும் ஏற்கனவே தங்களுடைய இருதயங்களைக் கிறிஸ்துவுக்குக் கொடுத்திருந்தனர். (தேசத்தில் நான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு சில மைல்கள் தூரத்தில் இருக்கிறார்.) உம்முடைய ஒவ்வொரு பிள்ளைகளும் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டுள்ளனர் என்று நினைக்கிறேன்...?... அது சரியா, சகோதரன் டால்டன்? அவர்களில் யாராவது உம்மோடு இருக்கிறார்களா? ஒரு மகள் இருக்கிறாள். அவளும் சரியாக அப்போதே இரட்சிக்கப்பட்டாளா? மூத்த மகள் அடுத்த நாள் காலையில் இரட்சிக்கப்பட்டாள். அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரும் இப்பொழுது இரட்சிக்கப்பட்டுள்ளனர். பரிசுத்த ஆவி யானவர் எப்படியாக... தேவன் எதையாவது கூறும் போது, அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ளுகிறார். பாருங்கள்? 1212.இப்பொழுது, அந்தப் பிள்ளைகளை என்னால் எவ்வாறு இரட்சிக்க முடிந்திருக்கும்? பாருங்கள்? அது - அது முடியாத காரியம். அது உங்களுடைய சொந்த வார்த்தைகளாக இல்லை யென்றால், அது உங்களுடைய சொந்த எண்ணமாக இல்லை யென்றால், அது - அது தான் எப்போதுமே உங்களை ஊக்கு வித்துக் கொண்டிருப்பதாகும். மேலும் அது தேவனாக இருக்கு மானால், அது தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. பாருங் கள்? அந்த விதமாகத்தான் இரவு நேரத்தில் இங்கே நடக்கும் கூட்டங்களும் உள்ளன, அந்தக் காரியங்கள் சம்பவிப்பதை நீங்கள் காணும் போது, அது நானல்ல. என்னால் அதைச் செய்ய இயலாது. அது - அது - அதைச் செய்வது தேவனாகும். மேலும் நீங்கள் அப்படியே அதை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவு தான், வெறுமனே - வெறுமனே அதை விசுவாசியுங்கள். இப்பொழுது, நல்லது, பில்லி, இது பெரும்பாலும் ஜெப வரிசையை அழைக்கும் நேரமாக உள்ளது. நான் சற்று மிகவும் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டேன். ஆனால் உங்க ளுக்குத் தெரியும், நான் - நான் இங்கே சிகாகோவைச் சுற்றி லுமுள்ள எல்லா ஜனங்களையும் சந்திக்க ஏற்பாடு செய்ய விரும் புகிறேன். மேலும் இங்கே இரவில் பாடுகிற இந்த சகோதரன் மெல்வின் -அந்தப் பையன் பாடுவதைக் கேட்க நான் எவ்வளவாக விரும்புகிறேன்! நான் இங்கிருந்து செல்வதற்கு முன்பு, இந்த இரவுகளில் ஒன்றில், 'என்னை நினைவுகூரும்' என்ற பாடலை அவன் பாடுவதைக் கேட்க நான் - நான் விரும்புகிறேன். பிறகு, கிறிஸ்தவ வியாபார புருஷர்களின் கூட்டத்தில் பாடுகிற ஒரு கறுப்பின சகோதரி உண்டு. ஓ, என்னே. அவள் பாடுகிற, 'கப்பலின் சத்தம் கேட்கிறது' என்ற பாடலை நீங்கள் - நீங்கள் கேட்க வேண்டும். நான் என்னுடைய மனைவியிடம் கூறினேன்; அவள் இன் றிரவு அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்; நான் அவளிடம் கூறினேன், 'கப்பலின் சத்தம் கேட்கிறது' என்ற பாடலை அந்தச் சீமாட்டி பாடுவதையும், என்னை நினைவுகூரும், கண்ணீர் கீழே விழும்போது. என்றப் பாடலை சகோதரன் மெல்வின் பாடுவதையும் கேட்கும்படி அவள் வருகிறாள் என்று நம்புகிறேன். ஓ, என்னே. நாம் இதைப் பெற்றுக் கொண்டோம் என்று நிச்சயமாக நம்புகிறேன். அன்றொரு காலை வேளையில் அந்தக் கூட்டத்திற்கு ஒரு சகோதரன் வந்திருந்தார், அவர் இங்கு எங்கோ பின்னால் உட் கார்ந்து கொண்டிருக்கிறார். நான் அவருடைய... குலுக்கினேன். அவர் இங்கே இருக்கிறார், அவரும் அவருடைய மனைவியும். என்னே, பாடல் பாடுவதைக் குறித்துப் பேசுகிறீர்கள். நீங்கள் மகிமையில் பிரவேசிக்கும்போது, நான் - நான் வாஞ்சிக்கிறேன்... நான் எப்போதுமே பாடுவதற்கு விரும்பினேன். இன்னும் சரியாகச் சொன்னால், நான் எந்த நேரமும் பிரசங்கிப்பதைக் காட்டிலும் பாடிக்கொண்டிருப்பேன். எனவே நான் - நான் மிகவும் நன்றாகப்பாடுவதை நேசிக்கிறேன். எனவே நான் எப்போதும், 'பூமியிலுள்ள மகத்தான பாடகர்கள் அனைவரும் மகிமையில் உள்ள மகத்தான பெரிய மலைப்பிரதேசத்தில் ஒன்றாகக் கூடி, அவர்கள் எவ்வாறு ஜெயங் கொண்டார்கள் என்னும் கதையைக் குறித்துப் பாடிக் கொண்டிருப்பார்கள். ஜீவநதியைக் கடந்து மறுகரையில் நான் உட்கார்ந்து அவர்கள் பாடுவதைக் கேட்க விரும்புகிறேன்' என்று கூறினேன். எனவே சிகாகோ ஜனங்களாகிய நீங்கள் அனை வரும் அங்கே என்னை சந்திக்கும்படி உங்களை இப்பொழுது அழைக்க விரும்புகிறேன், நாம் உட்கார்ந்து அவர்கள் பாடுவதைக் கேட்போம், எனவே நாம் எந்த... கொண்டிருக்க மாட்டோம். நாம் துரிதப்பட வேண்டியுள்ளது, பிள்ளைகள் தீங்கையோ அல்லது எதையுமோ அனுபவிக்கப் போகிறார்களா என்று பாருங்கள். அவர் கள் அங்கே நம்முடன் இருப்பார்கள், தீங்கு செய்யவோ அல்லது அழிக்கவோ அங்கு எதுவுமே இருக்காது. மேலும் நமக்கு அப்போது நிறைய நேரம் இருக்கும். நாம் நீண்ட காலம் பேசலாம், பேசுவதற்கு நிறைய நேரம் உண்டாயிருக்கும். 1313.இப்பொழுது, நான் குறிப்பிட விரும்புகிற அநேக வேதவாக்கியங்கள் என்னிடம் உள்ளன. நான் இங்கே சிலவற்றை எழுதி வைத்துள்ளேன், இங்கே சில பக்கங்களில் எழுதி வைத் துள்ளேன். நான் இன்றிரவு ஒரு பாடத்திற்காக பரிசுத்த லூக்கா 8:50ல் காணும் ஒரு வேதவசனத்தை முதலாவது வாசித்து தொடங்க விரும்புகிறேன். இன்றிரவு என்னுடைய பாடமானது சிறிது நேரத்திற்கு முன்பு நான் உள்ளே வரும்போது, அவர்கள் பாடிய - நாம் அடிக்கடி பாடும் பாடலாகிய (theme song), 'நம்பிடுவாய் (Only Believe)' என்பதாய் இருக்கிறது. பரிசுத்த லூக்கா 8ம் அதிகாரம் 50வது வசனம். இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள் ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். நாம் ஜெபத்திற்காக சிறிது நேரம் நம்முடைய தலைகளை வணங்குவோம். கிருபையுள்ள தேவனே, உம்முடைய குமாரனா கிய கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து மீண்டும் கொண்டு வந்தவரே, இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிற்பாடு அவரை எங்களுக்கு அருளினவரே. நாங்கள் பகலுக்குப்பின் பக லாக, இரவுக்குப்பின் இரவாக அவருடைய சபையாகிய காணக் கூடிய சரீரத்தில் அவருடைய வார்த்தைகளை நிறைவேற்றும்படி கிரியை செய்து கொண்டிருக்கும் அவருடைய காணக் கூடாத சரீரத்தில் அவரைக் காண்கிறோம். அன்றொரு இரவில் நாங்கள் பேசியபடி, 'நீர் சரியான வேளையில் இருக்கிறவர். ஒவ்வொன்றும் அப்படியே சரியாக வந்து சம்பவிக்கிறது.' தேவனுடைய மகத் தான காலக் கடிகாரமானது (சரியான) நொடிப்பொழுதில் 'டிக்' 'டிக்' என்று ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு இன்றிரவு, அந்தக் கடைசி நடுஇரவின் கண நேரத்திற்கு மணி அடிப்பதற்கு ஆயத்தமாகும் போது, ஓ, மகத்தான யேகோவா தேவனே, எங்கள் மேல் இரக்கமாயிரும். 1414.இன்றிரவு நான் எண்ணுகிறபடி, இங்கே எனக்கு முன் பாக உம்முடைய இரத்தத்தால் விலைகொடுத்து வாங்கப்பட்ட வர்களைப் பிடித்து வைத்திருக்க, அடுத்த 30 அல்லது 40 நிமிடங்களுக்கு அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வர நான் என்ன சொல்ல வேண்டும், ஓ தேவனே? ஆயத்தப் படுத்தியிருக்கும் இந்த சில வார்த்தைகள் உம்முடைய அபி ஷேகம் இல்லாவிட்டால் போதுமானதல்ல, கர்த்தாவே. எனவே இன்றிரவு இந்தப் பாடம் சம்பந்தமான வார்த்தைகளை நீர் அபிஷேகம் பண்ண வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் தங்களுடைய இளைப்பாறும் ஸ்தலத்தைக் கண்டடை வார்களாக. இயேசு வரும் அந்த மணி வேளைக்காக ஆயத்த மானவர்களாக இருக்க எங்களுக்கு என்ன தேவையோ அதை எங்களுக்கு அருளும். ஏனெனில் தேவனே, சிறிது நேரத்திற்கு முன்பு, என்னுடைய கண்களைத் திறந்து, கிறிஸ்தவ வியாபார புருஷர்களுடைய அந்த புஸ்தகம் எனக்கு முன்பாக இங்கே இருப்பதைக் கவனித்தேன், கர்த்தாவே, எங்கள் விலையேறப்பெற்ற சகோதரன் டாமி நிக்கல்ஸ் அவர்கள் நீர் அங்கே திரைக்கு அப்பால் என்னைக் காணும்படி அனுமதித்த அந்த தரிசனம் அடங்கிய ஒலிநாடா அல்லது அது என்னவாக இருந்தாலும் அதிலிருந்து மொழிபெ யர்த்திருக்கிறார். ஓ தேவனே, நான், 'நான் மாத்திரம் பின்னால் போகக்கூடுமானால்... நான் நம்பும்படி செய்தேன்; நான் ஜனங் களிடம் வேண்டிக் கொண்டேன். ஓ, கர்த்தாவே, அவர்கள் அதை இழந்து விடவே கூடாது' என்றேன். அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையே எனக்காகவும் என்னுடைய பிள்ளை களுக்காகவும், தங்களுடைய ஜீவியத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ள ஜனங்கள் இங்கேயிருக்கிறார்கள். தேவனே, இன் றிரவு எப்படியாவது வேறு ஏதோவொன்று சொல்லப்பட வேண்டும், அது - அது இன்றிரவு எங்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டவராக நாங்கள் கிறிஸ்துவைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் இரட்சக ராகவும், எங்கள் ஒவ்வொருவருக்கும் சுகமளிப்பவராகவும், வரப் போகிற எங்கள் இராஜாவாகவும் இருப்பாராக. அந்த நம்பிக்கை யானது இங்கே எங்கள் இருதயங்களுக்குள் செல்லட்டும். வியா தியே இல்லாத அத்தேசத்தில் நாங்கள் அவருடன் நித்தியமாக ஜீவிப்போமாக. நான் அந்த ஸ்திரீகளைக் குறித்து எண்ணிப்பார்க்கக் கூடும், அவர்கள் எப்படியாக ஒரே தடவையில் அடையாளம் கண்டு கொண்டனர். இங்கே 90 வயதுடைய வயதான ஸ்திரீகளாக இருக்கின்றனர், அங்கே அவர்கள் அழகானவர்களாகவும், வாலிப ஸ்திரீகளாகவும் இருந்தனர். இங்கே பூமியில் நரைத்த தலையை உடையவர்களாக இருக்கும் அம்மனிதர்கள், அங்கே வாலிபர் களாகவும் நித்தியத்துக்கான தங்களுடைய வாலிப பருவத்திலும் இருந்தனர். தேவனே, எங்களால் அதை இழந்து போகும்படி விட்டுக்கொடுக்க முடியாது. கர்த்தாவே, இன்றிரவு அதை அரு ளும், ஒவ்வொரு நபரும் இன்றிரவு புதிய தாக்கத்தை பெற்றி ருக்கட்டும். பரிசுத்தவான்களை ஆசீர்வதித்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தும், நாங்கள் இந்த பாடத்தோடு கூட எங்களை ஒப்புக் கொடுக்கிறோம், உம்முடைய மகிமைக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். ஆமென். 1515.இயேசு அப்பொழுதுதான் ஒரு மகத்தான எழுப்புதல் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் எப்போதுமே பிதாவுக்கடுத்தவைகளில் இருந்தார். நான் - நான் அதை நேசிக் கிறேன். நாம்... நான், நானே, எனக்கு அதிக நேரம் கிடைத்தது, நான் - நான் அந்த நேரத்தையெல்லாம் முட்டாள்தனமாக பயன்படுத்தியிருக்கிறேன் என்று நான் - நான் எண்ணுகிறேன். மேலும் நாமெல்லாருமே அவ்விதமாக உணருகிறோம். நாம் ஏதோவொரு இடத்திற்குப் போய் ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு மிகவும் இறுக்கமான நிலையில் இருக்கிறோம். ஆனால் இயேசு எப்போதுமே பிதாவுக்கடுத்தவைகளில் இருந் தார் என்பதை நாம் கண்டுகொண்டுள்ளோம். நான் அதை நேசிக் கிறேன். நாமும் அவ்விதமாகத்தான் இருக்க வேண்டும். நாம் நம்முடைய நேரத்தை ஒன்றும் செய்யாமல் வீணாக ஒரு போதும் கழிக்கக் கூடாது. நமக்கு எவ்வளவு நேரம் கிடைத்தாலும் அதைக் கட்டாயம் செலவழிக்க வேண்டும், நேரத்தை வீணாக் காமல் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள் (conserve), இழந்த நேரத்தை மீண்டும் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் (redeem it). ஏனெனில் காலம் விலையேறப்பெற்றது. இயேசுவுக்காக விளம்பரம் செய்யத் தருணம் கிடைக்கும் ஒவ்வொரு தடவையும் அதைச் செய்யுங்கள். தேவனுக்காக விளம்பரம் செய்ய வேண்டிய ஒவ்வொரு தடவையும் அதைச் செய்யுங்கள். சபைக்காகவும் ஜனங்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஏதாவது செய்யுங்கள். அநேக ஜனங்கள் - நாம் இந்தக் காரியங்களை எவ்வாறு அறிகிறோமென்றால், யாராவது நம்மிடம் அவைகளை கூறுவதன் மூலமே. 1616.இயேசு தாம் இருந்த தேசமாகிய கலிலேயாவை விட்டு புறப்பட்டு, ஒரு எழுப்பதலுக்காக கதரேனருடைய நாட்டுக்கு போகும்படி சமுத்திரத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தார், அவர் அங்கு போகும்படி வழிநடத்தப்படுவதை உணர்ந்தார் என் பதில் சந்தேகமில்லை. கடலைக்கடந்து கதரேனருடைய நாட்டிற்குப் போகும்படி பிதாவனாவர் அவரை வழிநடத்தியிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அங்கே ஒரேயொரு நபர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டான் என்ற விவரம் நம் அனைவருக்கும் தெரியும்; அது கதரேனருடைய தேசத்திலிருந்த ஒரு பைத்தியக்காரன். அவன் வயல்வெளிகளிலும், பிரேத கல்லறைகளிலும் தங்கியிருந் தான். அவன் பைத்தியம் பிடித்தவனாயிருந்தான். அவர்கள் அவனை சங்கிலிகளால் கட்டி வைத்திருந்தனர், பிசாசினுடைய வல்லமையானது அந்த சங்கிலிகளை உடைத்துப்போட முடிந்தது, மேலும் - மேலும்... நான் சுற்றிலுமுள்ள பைத்தியம் பிடித்தவர் களுக்கான மருத்துவமனைகளுக்கு செல்லும்போது, அசுத்த ஆவிகளின் வல்லமையால் பீடிக்கப்பட்ட ஒரு நபரைக் கவனித்து, அவர்கள் எவ்வளவு பலமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று அடிக்கடி நினைத்ததுண்டு. அவர்கள் சிலசமயங்களில் போலீஸ் காரர்களையும் பிடித்து அடித்து விடுவார்கள். ஃபிளாரிடாவில் ஒரு இரவில் நடந்ததை நினைவுகூருங்கள், 120 பவுண்டுக்கு மேல் எடையில்லாத ஒரு - ஒரு மனிதன் உங்களுடைய பிள்ளையை நீங்கள் அடிப்பது போல அவ்வளவு எளிதாக ஐந்து போலீஸ்காரர்களை முரட்டுத்தனமாக அடித்து விட்டான். அதன்பிறகு, அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப் போன போது, அங்கே வெறி பிடித்த நிலை எதுவுமே இல்லை. அவனால் எவ்வளவு கூடுமோ அவ்வளவாக சாதுவாக மாறியிருந் தான். ஆனால் அது ஒரு அசுத்த ஆவியாக இருந்தது. நான், 'அசுத்த ஆவியால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதன் சங் கிலிகளை உடைக்கக்கூடுமானால், அவன் தேவனுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்து, தேவனுடைய வல்லமையானது அதைப்போன்று அவனை ஆட்கொள்ளுமானால், அவனால் என்ன செய்யக்கூடும்?' என்று எண்ணினேன். பிசாசு அவனை தன்னுடைய கட்டுப்பாட்டில் முழுவதுமாக வைத்திருப்பது போல, தேவனுடைய வல்லமையால் அவன் மிகவுமாக அபிஷேகம் பண் ணப்படக் கூடுமானால், அவன் ஒவ்வொரு ஊனமுற்ற காலையும் நேராக்கி, மகத்தான காரியங்களைச் செய்ய முடியும். 1717.அவன் - அவன் கூட இயேசுவிடம், 'நீர் யாரென்று எங்களுக்குத் தெரியும், நீர் தேவனுடைய பரிசுத்தர். எங்களுடைய நேரம் வருவதற்கு முன்பே எங்களை ஏன் வேதனைப்படுத்த வந்தீர்?' என்று அறிக்கையிடும் அளவுக்கு, அந்த பிசாசு அம் மனிதனை முழுவதுமாக தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? பாருங்கள்? அந்தப் பிசாசு அவனுடைய நாவை உபயோகப்படுத்தும் அளவுக்கு அவன் பிசாசுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புவித்திருந்தான். நான் அதை விரும்புகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். இது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தவில்லையென்று நம்புகிறேன், ஆனால் தேவன் நம்முடைய நாவையும் கூட உப யோகப்படுத்தி, வேறு பாஷைகளில் பேசவும், சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணவும், சுவிஷேத்தை பாடவும், நாம் காணும் தரிசனங்களையும் தேவனுடைய இரகசியங்களையும் குறித்துப் பேசவும் செய்கிற அளவுக்கு நாம் தேவனுக்கு முழுவதுமாக ஒப்பு விக்க முடியும், நாம் அப்படியே தேவனுடைய வல்லமைக்கு முழு வதுமாக ஒப்புவித்தால். அவ்வளவு தான். பிசாசு ஒரு மனி தனைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழாகக் கொண்டு அதைச் செய்யக் கூடுமானால், தேவன் ஒரு மனிதனைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழாக கொண்டு வந்து அவரால் என்ன செய்யக் கூடும்! பாருங்கள்? எனவே இந்த பைத்தியக்காரன்... இயேசு கடலைக் கடந்து கொண்டிருந்த போது, அவர் தேவனுக்காக ஒரு மகத்தான ஜெயத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாக, ஒரு மகத்தான பாதையில் அவர் இருந்தார் என்பதை பிசாசு அறிந்து கொண்டான். அந்த இரவு நேரத்தில் அங்கு வீசிய புயலைக் கொண்டு அவரை மூழ்கடித்து விட வேண்டு மென்று அவன் முயற்சித்தான்... ஆனால் தேவன் தம்மை அனுப் பியிருந்தார் என்பதை இயேசு அறிந்திருந்தார், ஏனெனில் என்ன செய்ய வேண்டுமென்று தேவன் அவரை வழிநடத்தினாரோ அதை மாத்திரமே அவர் செய்தார். 1818.சகோதரர்களே, அதைப்போன்ற ஒரு சாட்சியை நாங்கள் கொண்டிருந்தால், அது அருமையாக இருக்காதா? 'தேவனுக்குப் பிரியமானதை மாத்திரமே நான் செய்கிறேன்.' அது அற்புதமாக இருக்காதா? ஏனோக்கு 500 வருடங்கள் தேவனுடன் நடந்து, 'அவன் தேவனுக்குப் பிரியமானவன்' என்ற சாட்சியை உடையவனாய் இருந்தது போன்று. அவன் மரிக்க வேண்டியிருக்க வில்லை, அப்படியே மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான். எனவே பிறகு, ஒரு பிற்பகல் வேளையில், அவன் சஞ்சரித் துக் கொண்டிருக்கும்போது, அவன் அப்படியே நடக்க ஆரம்பித்து, 'நல்லது, நான் போதுமான காலம் பூமியில் இருந்து விட்டேன், நான் சற்று மேலே நடக்கப் போகிறேன்' என்று நினைத்தான். விசுவாசத்தினாலே, அவன் (நடக்க) ஆரம்பித்து, 'நல்லது, நான் இங்கே போதுமான காலம் இருந்து விட்டேன், எனவே இங்கே யிருப்பதைக் குறித்து ஒருவிதமாக களைப்படைந்துள்ளேன். நான் பால்வெளியை அடைந்து, அப்படியே மேலே நடந்து, அந்தக் கதவைத் தட்டும் அளவுக்கு நான் மேலே உலாவப் போகிறேன் என்று நினைக்கிறேன்' என்று எண்ணினான். எனவே அவன் அதைத்தான் செய்தான். பாருங்கள்? விசுவாசத்தினாலே அவன் அதைச் செய்தான். வேதாகமம் அவ்வாறு கூறுகிறது. பாருங்கள்? அவன் இங்கே தங்கியிருப்பதைக் குறித்து களைப்படைந்திருந் தான். அவன், 'நல்லது, தேவனே, நான் அப்படியே மேலே வீட் டிற்கு நடந்து போகப் போகிறேன்' என்றான். அவன் காற்று மண் டலத்தின் வழியாக நடந்து மேலே போய் விட்டான். அவன் அதை விசுவாசத்தினாலே செய்தான். அவன் அதைச் செய்ததாக வேதா கமம் கூறுகிறது. எனவே, ஓ, நான் - நான்... மரணமானது வந்து என்னுடைய கதவில் தட்டிக் கொண்டிருப்பதை நான் உணரும் போது, நான் - நான் அம்மாதிரியான விசுவாசத்தைக் கொண்டிருக்க விரும்பு கிறேன், நீங்கள் அவ்வாறு விரும்பவில்லையா? 'நல்லது, பழைய உலகத்தில் அதிக காலம் இருந்து விட்டேன். நான் இப்பொழுது உன்னிடமிருந்து தூரமாக நடக்கப் போகிறேன்' என்று கூறு வோம். அப்படியே நடக்கத் தொடங்குவோம். அப்படியே மேலே நடந்து, சந்திரனையும் நட்சத்திரங்களையும் கடந்து, பால்வெளி வீதியை அடைந்து, அந்த வானாதி வான மண்டலங்களுக்குள் (sphere's and sphere's) போய், அதையும் தாண்டி, மகிமைக்குள் போகிறோம். அது சரியே. 1919.மேலும் அதன்பிறகு, தேவனுடைய ஊழியக்காரன் தேவ னுடைய சித்தத்தில் இருக்கும் காலம் வரை பிசாசு அவனை அழிக்க முடியாது என்பதை நாம் கண்டு கொள்கிறோம். எனவே அவர்... அந்த இரவு வேளையில் அவர் தூக்கத்தை விட்டு எழுந்தார், எல்லா பிசாசுகளும் மிகவும் கோபம் கொண்டு, அவரை சமுத்திரத்தில் மூழ்கடித்து கொன்று போட வேண்டு மென்று முயற்சித்த வேளையில், அவர் எழுந்து, 'நீங்கள் ஏன் இப்படி பயப்பட்டீர்கள்? நான் தேவசித்தம் இல்லாத எதையாவது செய்துள்ளேனா என்பதை சிந்தித்துப் பாருங்கள்? நீங்கள் ஏன் இப்படி இதைக்குறித்து பயப்பட்டீர்கள்? பாருங்கள்? எது எப்படி யானாலும் நீங்கள் எதைக் குறித்து கவலைப்பட்டீர்கள்? நீங்கள் அனைவரும் ஏன் மனச்சோர்வடைந்துள்ளீர்கள்?' என்றார். சகோதரர்களே, இன்றிரவும் அவர் அதே காரியத்தைத்தான் கூறுவார் என்று நான் எண்ணுகிறேன். 'நீங்கள் எதைக் குறித்து இப்படி பயப்பட்டீர்கள்?' பாருங்கள்? 'என்ன காரியம், நீங்கள் என்னிடம் நம்பிக்கை வைக்க பயப்படுகிறீர்களா?' அவர், 'இரையாதே, அமைதலாயிரு' என்றார். காற்றும் கடலும் அவருக்குக் கீழ்படிந்தன, அவர்கள் கடலைக் கடந்தார் கள். ஓ, எவ்வளவு அழகாயுள்ளது. அவர் மறுகரையை அடைந்தார், இந்த பைத்தியக்காரன் அவரைச் சந்தித்தான், அவன் அவரை சந்தித்த போது, அவரைத் துண்டு துண்டாக கிழித்துப் போடும்படி, வரப்போகிறான். அப்போது மற்ற பன்னிரெண்டு பேரோடு, அங்கு நடந்து வந்து கொண்டிருந்த அவர் ஒரு மனித னைக் காட்டிலும் சிறிது மேலானவராக இருந்தார் என்பதை பிசாசு கண்டு கொண்டான். 2020.பிறகு, அவர் தேவனுடைய குமாரன் என்றும், அவன் - எதிர்காலத்தில் இருக்கப்போகும் அவனுடைய வேதனைகளைக் குறித்தும் அவன் அறிக்கை செய்த போது, இயேசு, 'பேசாமல் அவனை விட்டுப் போ' என்று சொன்னார். லேகியோன் பிசாசு கள் பிடித்திருந்த அம்மனிதனை அவர் விடுதலையாக்கினார். அந்தப் பிசாசுகள் போய், அவைகள்... போய் சேர்ந்தன. அவைகளுக்கு ஏதாவது சரீரம் கிடைக்கவில்லையென்றால், அவைகள் - அவைகள் உதவியற்ற நிலையில் காணப்படுகின் றன. எனவே அவைகள் சென்று ஒரு பன்றிக்கூட்டத்திற்குள் புகுந்தன, இரண்டாயிரம் பன்றிகளும் போய் கடலில் அமிழ்ந்து மாண்டன. உங்களுக்குத் தெரியுமா? இயேசு ஒரு எழுப்புதலைத் தொடங்க வந்திருந்தார், ஆனால் அந்த ஜனங்கள் இரண்டாயிரம் பன்றிகளை அதற்கு விலையாகப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டனர், அவர்கள் அந்த எழுப்புதலை விரும்பவில்லை. எனவே அதற்கு எது விலையாகப் போகிறதாயிருந்தாலும், அவர் கள் அதனுடன் எதையும் செய்ய விரும்பவில்லை. எனவே இன் றும் ஏறக்குறைய அதே விதமாகத்தான் உள்ளது, உங்களுக்குத் தெரியும். நீங்கள் சில மணிநேர தூக்கத்தையோ அல்லது - அல்லது வேறு ஏதோவொன்றையோ விலையாக கொடுத்தாலும், ஜனங்கள் அதனுடன் எதையும் செய்ய விரும்புவதில்லை என்று உங்களுக்குத் தெரியும். எனவே அவர்கள் சொன்னார்கள்... நல்லது, அவர்கள் - அவர்கள்... எழுப்புதலைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அப்பட் டணத்து ஜனங்கள் வெளியே வந்து, 'எங்கள் நாட்டை விட்டுப் போ. நாங்கள் ஒருபோதும்... நீ இங்கேயிருக்க நாங்கள் விரும்ப வில்லை. வெளியே போ. நாங்கள்...' என்றனர். 2121.மேலும் உங்களுக்குத் தெரியும், இயேசு அந்த மனிதனை நோக்கிப் பார்த்து அவன் புத்தி தெளிவடைந்தவனாக வஸ்திரந் தரித்து இருந்ததைப் பார்த்தார்... உங்களுக்குத் தெரியும், நான் எப்போதுமே அதை எண்ணிப் பார்ப்பேன், நான் - நான் அதை தொடங்காமல் இருப்பது நல்லது. நீங்கள் அம்மனிதனைப் பார்ப் பீர்களானால், அவன் இயேசுவை சந்தித்த போது, வஸ்திரந் தரிக்கத் தொடங்கினான். நாம் அவரை அறிந்துள்ளதாக உரிமை கோரிக் கொண்டு, எல்லா நேரமும் ஆடைகளைக் களைந்து விடுகிறோமே, அது எப்படி? எனவே அங்கே... அது ஒரு... அவர்கள், 'அதைப்போன்ற அப்படிப்பட்ட காரியங்களை பிரசங்கிப்பது எங்களுக்கு கடினமாக உள்ளது' என்கிறீர்கள். ஆனால் எனக்குத் தெரியாது. வேதாகமத்தின்படி, அந்த மனிதன் பைத்தியம் பிடித்த நிலையில் நிர்வாணமாயிருந்தான். இந்நிலை யில் அவன் இயேசுவைக் கண்டு கொண்ட போது, அவன் போய் மீண்டும் வஸ்திரந்தரித்தான். எனவே - எனவே நாம் அதைக்கண்டு கொள்கிறோம்... 2222.நான் பரலோகத்திற்குப் போகும் போது, நான் அந்த மனிதனைக் காண விரும்புகிறேன் என்று நான் அடிக்கடி வியந்ததுண்டு. நான் - நான் அங்கு போக விரும்புகிறேன். அவன் இயேசுவைப் பின்தொடர அவர் அனுமதிக்கவில்லை. அவர், 'நீ திரும்பிப் போய் உனக்குச் சம்பவித்ததை அங்கேயுள்ள ஜனங்களுக்குக் காண்பி (அறிவி)' என்றார். பன்றிகளை வளர்த் துக் கொண்டிருந்த அத்தேசத்தில் அதன்பிறகு அவனுடைய சாட்சி என்னவிதமாக செல்வாக்கு பெற்றிருந்தது என்று நான் சற்று வியப்படைகிறேன். அவனுடைய சாட்சிக்கு அங்கே என்ன செல்வாக்கு இருந்தது என்று நான் - நான் சற்றே வியப்படை கிறேன். ஆனால் அவர்கள் அவரை விரும்பவில்லை. எனவே நான் ஒரு காரியத்தைச் சொல்லுவேன். நீங்கள் அவரை விரும்ப வில்லையென்றால், அவர் தாமாகவே உங்களோடு பேசி சலிப் படையச் செய்ய மாட்டார். இல்லை, இல்லை. அவர் தம்மைத் தாமே உங்கள் மேல் திணிக்க மாட்டார். அவர் ஒருபோதும் அவ் வாறு செய்ததில்லை. அவர் தட்டுகிறார். நீங்கள் உள்ளே இருக் கிறீர்கள். வாசலைத் திறக்க வேண்டியது நீங்களே. ஆனால் அவர் தட்டுவார். அவர் உங்களுக்குத் தருணத்தைக் கொடுப்பார். 2323.இந்நிலையில், பிறகு, ஓ, அவர்கள், 'நாங்கள் உம்மை விரும்பவில்லை. உன்னால் எத்தனை பேரை விடுவிக்கக் கூடுமானாலும் எனக்குக் கவலையில்லை, இங்கே உன்னை அனுப்பினவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், என்னவாக இருந்தாலும் கவலையில்லை. தேவன் உன்னை இங்கே அனுப்பியிருந்தால், அதைக் குறித்து என்ன, இங்கே சுற்றிலும் நடந்து கொண்டிருக்கும் அப்படிப்பட்ட எந்த காரியத்தையும் நாங்கள் சற்றும் விரும்ப வில்லை, எங்களுடைய... நீ எங்கள் ஜனங்களை முழுவதுமாக குழப்பமடையச் செய்துள்ளாய். எனவே உனக்குச் சொந்தமான இடத்திற்கு திரும்பிப் போய் விடு' என்றனர். அவர், 'சரி' என்றார். அவர் திரும்பி போய் படகை அடைந்தார். அது ஏறக்குறைய காலை பத்து மணியாக இருக்க வேண் டும். நம்முடைய சகோதரன் யவீரு, அவன் - அவன் ஒரு விசுவாசியாக இருந்தான். அவன் - அவன் உண்மையில் ஒரு விசுவாசியாக இருந்தான், ஆனால் அவன் ஒருவிதமான இரகசிய விசுவாசியாயிருந்தான். உங்களுக்குத் தெரியும், இங்கேயுள்ள இந்த மெதொடிஸ்ட், பாப்டிஸ்ட் மற்றும் பிரஸ்பிடேரியன் சபை களில் அப்படிப்பட்ட அநேகரை நாம் பெற்றிருக்கிறோம். அவர்கள் உண்மையாகவே இந்த பெந்தெகோஸ்தே செய்தியை விசுவாசிக் கின்றனர். அவர்கள் விசுவாசிக்கின்றனர். ஆனால் அவர்களு டைய சபையின் காரணமாக அதை அவர்களால் செய்ய முடிய வில்லை. இந்நிலையில் யவீரு கூறினான்... அவன் ஒரு இரகசிய விசுவாசியாக இருந்தான்; வெளிப்படையாக அவன் ஒரு கூட்டம் அவிசுவாசிகளோடு தன்னை இணைத்துக் கொண்டிருந்தான். எனவே, இன்றிரவு அநேக நல்ல மனிதர்கள் அவ்விதமாகவே உள்ளனர்: அவிசுவாசிகளோடு இணைத்துக் கொள்ளுதல். 'அந்நிய நுகத்திலே (அவிசுவாசிகளோடு) பிணைக்கப்படாதிருப்பீர் களாக. உங்களை அவிசுவாசிகளோடு பிணைத்துக் கொள்ள வேண்டாம். அவிசுவாசிகள் மத்தியிலிருந்து வெளியே வந்து, உங்களைப் பிரித்துக் கொள்ளுங்கள்' என்று வேதமாகமம் கூறுகிறது, 'அவர்களுடைய அசுத்தமானதைத் தொடாதிருங்கள். (அப்பொழுது) நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்தி களுமாயிருப்பீர்கள்' என்று தேவன் உரைக்கிறார். 2424.எனவே யவீரு இன்றுள்ள அநேகரைப் போன்று ஒரு அமைப்பில் தன்னைப் பிணைத்துக் கொண்டிருந்தான், அவன் எளிதாக அதை விட்டு வெளியே வர முடியவில்லை, ஏனெனில் அவனுக்கு ஒரு உயர்ந்த பெயர் இருந்தது. ஒருவேளை டாக்டர்.யவீரு என்று அவனை அழைத்திருப்பார்கள். பாருங்கள்? அதற்குப் பின்னால், ஒருவேளை அவன் டாக்டர் என்ற மகத்தான பெயரைக் கொண்டிருந்தான். அவன் ஒரு ஆசாரியனாயிருந்தான். அவன் - அவன் ஒரு மகத்தான ஜெப ஆலயத்தின் மேய்ப்பராக இருந்தான். ஆனால் அவனுடைய இருதயத்தில் அவன் நாச ரேத்தூர் இயேசுவைப் பின்பற்றினான், அவன் அந்த அற்புதங் களைக் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டிற்குச் சென்று வேதவாக்கியங்களை ஆராய்ந்து படித்தான். அவன், 'அது மிகவும் சரியே...' என்று கூறினான். அவன் அந்நாளில், சீமோன் வரும்போது அங்கே நின்று கொண்டிருந்தான் என்று நாம் நினைக்கிறோம். யோவான் பிரசங் கிப்பதைக் கேட்பதற்காக அவன் சென்றான், அவன் அதைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்தான், அவன் இயேசுவை அவர்க ளுக்கு அறிவித்ததை அவன் கேள்விப்பட்டான், இந்த வெளிச்ச மானது அங்கே இறங்கி வந்து, அவர் (இயேசுவின்) மேல் அமர்ந் ததை கண்டிருந்தான். அதே வெளிச்சம் அவர் மேல் இருந்ததை நாம் கண்டிருக்கிறோம். அவர் அந்த வயதான செம்படவனைப் பார்த்து, 'ஏன், உன்னுடைய பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்' என்று கூறினார். உங்களுக்குத் தெரியும், ஒருவேளை அவனுடைய தகப்பனார் இந்த மனிதனுடைய ஜெப ஆலயத்தில் ஒரு அங்கத்தினராக இருந்திருக்க வேண்டும். அவன், 'அந்த மனிதருக்கு அவனைத் தெரியாது என்பதை நான் அறிவேன்' என்றான். நான் வீட்டிற்குப் போய் வேதவாக் கியத்தை கவனமாக ஆராய்ந்து பார்த்து, அது மேசியாவின் அடையாளம் தான் என்பதைக் கண்டுகொண்டேன். பிறகு, நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, நான் - நான் மறுகரையில் ஆசாரியர்களோடும் என் சகோதரர்களோடும் நின்று அவர் என்ன கூறுகிறார் என்று என்னால் கேட்கக் கூடுமா என்று பார்க்கும்படி கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சகோதரர்கள், 'நாம் பின்னால் தள்ளப்படுவோமானால், நாம் என்ன செய்யப் போகி றோம்?' என்றார்கள். பிலிப்பு வந்து நாத்தான்வேலைப் அழைத்து வந்தபோது, அது... இயேசு அங்கு நின்று, அவன் யாரென்றும், அவன் அவனை எங்கு கண்டுபிடித்தான் என்பதையும், அதைப்போன்ற மற்றவைகளையும் நாத்தான்வேலிடம் கூறினார். நாங்கள் நாத்தான்வேலைக் கண்டோம், அவன் ஒருவேளை போதகராக ஆகும் படி படித்துக் கொண்டிருப்பான், அவன், 'ஏன், ரபி, நீர் தேவ னுடைய குமாரன், இஸ்ரவேலின் இராஜா' என்றான். அவர், 'நான் அதை உன்னிடம் சொன்னதால் நீ விசுவாசிக் கிறாயா?' என்று கேட்டார். 2525.இதுதவிர, ஒருவேளை, கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீ பேசுவதைக் கேட்கும்படியாக அவர் அங்கே வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தார், மேலும் - மேலும் பர்த்திமேயு குருடன் அங்கே வெளியிலிருந்து, 'இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கிரங் கும்' என்று கூப்பிட்ட போது, அந்நேரத்தில் அந்த வாசலண்டை நின்றார். அவன் அவரைத் தொட முடியவில்லை. நீங்கள் அங்கு போவீர்களானால்... நீங்கள் அந்த இடத்தில் எப்பொழுதாவது இருந்தீர்களானால், பர்திமேயு இயேசுவைக் கூப்பிட்ட போது, அவன் இருந்த இடத்தையும், இயேசு இருந்த இடத்தையும் அவர்கள் குறித்து வைத்துள்ளனர், ஓ, என்னே. அந்த எல்லாக் கூட்டத்தினரும், 'நீ மரித்தோரை உயிரோடு எழுப்புவதாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள். நாங்கள் இங்கே கல்லறைத் தோட்டம் முழுவதும் மரித்தோரைப் பெற்றி ருக்கிறோம். நீ வந்து, அவர்களில் சிலரை உயிரோடெழுப்பி னால், நாங்கள் உன்னை விசுவாசிப்போம்' என்று ஏளனமாக கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? அவர் எல்லா ருடைய சத்தத்தையும் எப்போதுமே எப்படி கேட்க முடிந்தது... ஆனால் அவனுடைய விசுவாசம் அவரைத் தொட்டது. இவ்விதமாக மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்த குள்ள சகேயுவைப் போல, நான் அதைக் குறித்து கிறிஸ்தவ வியாபார புருஷர்களிடத்தில் கூறினேன், அவன், 'இப்பொழுது, அவர் - அவர் சகல காரியங்களையும் அறிந்தவர் என்று ரெபேக்கா என்னிடம் கூறினாள்... தேவன் அவர் வழியாகப் பேசினார், அவர் மேசியா தான். எனவே இந்தக் கொப்புகளை எல்லாம் என்னை சுற்றிலும் இழுத்து விடுவேன், நான் இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதை அவர் ஒருபோதும் அறியமாட்டார்' என்றான். இந்நிலையில் இயேசு மரத்தின் கீழே வந்து நின்ற போது, மேலே நோக்கிப்பார்த்து, 'சகேயுவே, கிழே இறங்கி வா. உன்னுடனே உன் வீட்டிற்கு வருகிறேன்' என்றார்... 2626.அவன் ஒருவேளை அந்தக் காலை வேளையில் அதைப் பார்க்கும்படியாக அங்கே இருந்திருக்கலாம். எனினும் வேதவாக்கி யங்கள் வழியாக அவர் மேசியா தான் என்று அவன் விசுவாசித் தான். ஆனால் அவனால் அதை அறிக்கை செய்ய முடியவில்லை, ஏனெனில் கதரேனருடைய நாட்டின் ஊழியக்கார சங்கம், 'அங்கேயுள்ள அந்த கலிலேயா தீர்க்கதரிசியினுடைய எழுப்புதல்களில் ஒன்றிலாவது யாராவது எப்பொழுதாவது கலந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினால், அந்த மணிநேரமே அவனை சபையிலிருந்து நாங்கள் வெளியே தள்ளி விடுவோம்' என்று கூறியிருந்தனர். எனவே நல்லது, அவன் மேய்ப்பனாக இருந்த போதிலும். அவனுக்கு பெரிய சபைக் கூட்டத்தாரும், அருமையான ஒருகூட்ட ஜனங்களும் இருந்தனர். அவன் கர்த்தரை நேசித்ததை அறிந்திருந்தான். ஆனால் அவனுடைய இருதயத்தின் ஆழத்தில், அங்கே ஏதோவொன்று கூடுதலாக சேர்க்கப்பட வேண்டியிருந்ததை அவன் அறிந்திருந்தான். ஓ, சகேயுவே, நீ இன்றிரவு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாய் என்று நம்பு கிறேன், இது முடியும் வரை நீ எழுந்து போய் விட வேண்டாம். பாருங்கள்? சற்று ஒரு நிமிடம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். அவன் அதை விசுவாசித்தவனாக அங்கே வெளியில் இருந் தான், அவன் ஒருவேளை மாறுவேடமிட்டு, அவனுடைய முகத் தின் மேல் முகத்திரை அல்லது ஏதோவொன்றை போட்டுக் கொண்டு, (எனவே அவன் டாக்டர் பட்டம் பெற்றவன் என்றோ அல்லது டாக்டர்.யவீரு என்றோ அறியப்படமாட்டான், உங்களுக் குத் தெரியும் அல்லது...), அந்தக் கூட்டங்களில் ஒன்றிற்குப் போய், அதைக் கேட்ட போது, அவன் வந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், இரவு முழுவதும் படித்துக் கொண்டிருந்தான். அவன் அந்தக் கூட்டத்தின் மத்தியில் அறியப்பட சற்றும் விரும்ப வில்லை. இருப்பினும், அவன் அங்கே உட்கார்ந்திருந்தான். அவன் இதைக் கவனித்து படித்தான்; இருப்பினும் அவனால் அதை வெளிப்படுத்த முடியவில்லை, அவரை பகிரங்கமாக அறிக் கையிட முடியவில்லை, எனெனில் அவனுடைய ஊழியக்கார சங்கத்தினையும், அவனுடைய சகோதரர்களோடுள்ள ஐக்கியத்தையும் விட்டு விட வேண்டியிருந்தது. அதன் காரணமாகத் தான் கதரேனருடைய தேசத்தில் இயேசுவிடம் ஒன்றாக ஓடி வந்த அவர்கள் அனைவரும் அவருடைய சொந்த தேசத்திற்கு அவ ரைத் துரத்தினார்கள். அவருடைய சொந்த தேசத்திலும், அது அதே காரியமாகத்தான் இருந்தது. கலிலேயாவின் தீர்க்கதரிசி என்று அழைக்கிற இந்த நபருடன் யாராவது தங்களை இணைத் துக் கொண்டால், ஏன் அவர்கள் சபைக்கு வெளியே தள்ளப்பட வேண்டிருந்தது. 2727.ஆனால் நம்மிடத்திலுள்ள உண்மையான நிஜமான விசுவாசத்தை வெளிக்கொண்டு வரும்படியாக தேவன் ஒரு வழியைப் பெற்றிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அதைச் செய்வதற்கு தேவன் விசித்திரமான வழிகளை வைத் திருக்கிறார். எனவே, ஒரு இரவு வேளையில் அந்தச் சிறு பெண் உள்ளே வருவதாகக் கூறுவோம், அவள்... அவனுக்கு ஏறக்கு றைய பன்னிரெண்டு வயதில் ஒரு சிறு மகள் இருந்தாள், அவன் வயது சென்றவனாக இருந்தான். அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இருந்த ஒரே பிள்ளை அவள் மாத்திரமே. அவள் சபையைச் சுற்றியிருந்த இடத்தில் கயிறால் தாவி விளையாடி விட்டோ அல்லது ஏதோவொன்றை செய்து விட்டோ ஒரு இரவு நேரத்தில் உள்ளே வந்தாள், அவள் உள்ளே வந்து, 'அப்பா, நான் மிகவும் வியாதியாயிருக்கிறேன்' என்றாள். எனவே அவளுடைய தலையை அவன் தொட்டுப் பார்த்து, 'ஆம், தேனே. நீ வியாதியாயிருக்கிறாய்' என்றான். எனவே அவன், 'தாயே, என்னவென்று நான் சொல்கிறேன். நீ அவளை படுக்கையில் படுக்க வை. நாம் சென்று மருத்துவரை அழைத்து வருவோம்' என்றான். அவன் செய்ய வேண்டிய விவேகமான காரியம் அது மாத்திரமே. எனவே அவர்கள் சென்று அருகிலுள்ள அந்த நல்ல மருத்து வரை அழைத்து வந்தனர். அவர் வந்து அவளைத் தொட்டுப் பார்த்தார். அவர், 'ஆம், அவளுக்கு பயங்கரமான காய்ச்சல் (burning with fever) உள்ளது' என்றார். எனவே அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவளுக்கு சிகிச்சையளித்தார். அவளுக்கிருந்த காய்ச்சல் மோசமாகி விட்டது தெரியவந்தது. ஓ,... அளவுக்கு காய்ச்சல் அதிகமானது. அது மிகவும் அதிக மானது என்பதை அவர் கண்டுணர்ந்து கொண்டார், மருத்துவர் அதைக் குறித்துக் கவலையடைந்தார். எனவே இந்த சிறு பெண்ணுக்கு உதவி செய்யும்படி தான் அறிந்த எல்லா மூலிகை களைக் கொண்டும், எல்லா வைத்திய முறைகளைக் கொண்டும் அவர் முயற்சி செய்தார். ஆனால் அதனுடன் எந்த நன்மையும் செய்ய அவரால் - அவரால் முடியவில்லை. அவரால் அந்தக்காய்ச்சலை சற்றும் குறைக்க இயலவில்லை. 2828.எனவே அதன்பிறகு, அவர் அநேகமாக முழு இரவும் தங்கியிருந்த பிறகு, ஒரு காலையில் ஏறக்குறைய ஒன்பது மணி வேளையில், ஏன், அந்தச் சிறு பெண்ணை சந்திக்க அவர் வந்திருந்தார். சபையிலுள்ள அன்பான ஜனங்கள் அனைவரும் அங்கு உள்ளே கூடியிருந்தனர், உடன் ஊழியம் செய்கிற மேய்ப்பர்கள் அனைவரும், மேற்பார்வையிடுகிற போதகர்களில் சிலரும், மாவட்ட மதகுருவும், அவர்கள் அனைவரும் அந்தப் பிள்ளைக் காக ஜெபத்தையும் மற்ற காரியங்களையும் ஏறெடுக்கும்படி அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தனர், உங்களுக்குத் தெரியும். எனவே, மருத்துவர் உள்ளே வருகிறார், அவர் சிறு பெண் ணின் நாடித்துடிப்பை எடுத்து பரிசோதித்துப் பார்த்தார். ஓ, காய்ச்சல் மிகவும் அதிகமாகியிருந்தது. அந்தச் சிறு பெண் இப்பொழுது தன்னுடைய சுயநினைவை இழந்திருந்தாள். எனவே முடிவு வந்து விட்டதை அவர் அறிந்தார். அவர் அதை அந்த மேய்ப்பரிடம் சொல்லுவதை வெறுத்தார், ஒருவேளை அவருக்கு சொந்தமான சபைக்கு இவர் சென்றிருப் பார். எனவே அவர் அவனை ஒரு பக்கமாக அழைத்து, 'இப்பொ ழுது, யவீரு, நான் இங்கே வெளிப்புறத்தில் வைத்து உன்னிடம் சொல்ல விரும்புகிறேன், எனவே சகோதரி அதைக் கேட்க மாட் டார்கள். உன்னுடைய ஒரே சிறு மகளான அந்த பிள்ளை மரித்துக் கொண்டிருக்கிறாள்' என்றார். 'ஓ, மருத்துவரே, உம்மால் நிச்சயமாக வேறு ஏதோவொன் றைச் செய்ய முடியும்.' 'இல்லை, யவீரு, நீ வேறொரு மருத்துவரை அழைத்து, வியாதிப்பட்ட உன் மகளுக்காக அந்த மருத்துவரின் அறிவுரை யை நாட விரும்பினால், ஏன், அது சரிதான். ஆனால் என்னு டைய மருத்துவ அறிவின்படி, பிள்ளை சரியாக இப்பொழுதே மரணத்தருவாயிலிருக்கிறாள், ஏனெனில் அவள் மரணத்தருவாயில் படுத்திருக்கிறாள். அவள் அநேகமாக இன்னும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு (கூட) உயிரோடிருக்க மாட்டாள்.' அந்த நல்ல மருத்துவர் தான் உண்மையென்று அறிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தார். 'மருத்துவரே, வேறொரு மருத்துவரை அழைக்க வேண்டும் என்று நீங்கள் என்னிடம் ஆலோசனை கூறுகிறீர்களா?' என்று கேட்டான். 'நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்' என்றார். ஆனால் அவர், 'எனக்கு வேறெந்த மருத்துவரையும் தெரி யாது. டாக்டர். லூக்கா என்று அழைக்கப்பட்ட மருத்துவர் அங்கே இருந்தார் என்று நாம் அறிவோம். ஆனால், அவர் - அவர் மனந்திரும்பி விட்டார் என்று உங்களுக்குத் தெரியும்' என்றார். 'ஓ, நீங்கள்... லூக்கா தவறான முடிவுக்கு போய் விட்டார்.' பாருங்கள்? 'அவர் கலிலேயா தீர்க்கதரிசியைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார், இல்லையா...' ஓ, அது திரும்ப அவனுடைய நினைவுக்கு வருகிறது. 'ஆம், மருத்துவரே. நல்லது, உமக்கு நன்றி. மருத்துவரே, நான் உமக்கு என்ன கடன்பட்டிருக்கிறேன்?' 'ஓ, நல்லது, நான்... அதெல்லாம் சரிதான். நீர் எனக்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை.' அவர் ஒரு அருமையான மனிதர். பாருங்கள்? 'போதகரே, நீர் துணிந்து செல்லும், நீர் அதிக பணம் சம்பாதிக்கவில்லை என்று நான் அறிவேன், எனவே அதை வெறுமனே விட்டு விடும்.' 'நல்லது, உங்களுடைய தயவுக்கு மிகவும் நன்றி.' 2929.இப்பொழுது, அவன் என்ன செய்யப்போகிறான்? அவன் வாசலிலிருந்து பின்னால் நடந்து, 'இப்பொழுது, சபையிருக்கிற இடத்திலிருக்கும் வீட்டிற்குப் போவேன். மேலும்... பிள்ளை மரணத்தருவாயில் படுத்துக்கிடக்கிறாள் என்பதை நான் என் மனைவியிடம் எப்படி சொல்லப் போகிறேன்? வர வேண்டியிருந்த உண்மையான தீர்க்கதரிசியாகிய இயேசுவினிடத்தில் நான் உண்மையாகவே விசுவாசம் கொண்டிருக்கிறேன் என்பதை அவளிடமிருந்து எல்லா நேரமும் இரகசியமாக வைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது, எப்படி நான் அங்கு செல்வேன்? அங்கே மாவட்ட மதகுருவும், மற்ற எல்லா ஊழியக்கார சங்கத்தினரும் வீட்டைச் சுற்றிலும் உட்கார்ந்திருக்கிறார்களே. என்னால் அதை எப்படி செய்யக்கூடும்? அவர் (இயேசு) எங்கிருக்கிறாரோ என்று வியக்கிறேன்?' என்றான். எனவே அவன் அறைக்குள் திரும்பிச் சென்று, வியப்படையத் தொடங்குகிறான். மேலும் உங்களுக்குத் தெரியும், நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், அவன் தன்னுடைய மனைவியை உள்ளே அழைக்கிறான். அவன், 'அன்பே, உள்ளே வந்து ஒரு நிமிடம் உட்காரு' என்றான். அவன் தன்னுடைய கரங்களை வைத்தான்... 'இப்பொழுது, நான் ஒரு காரியத்தைக் குறித்து உன்னிடம் பேச விரும்புகிறேன். முதலாவது நான் பேச விரும்புகிறது என்னவெனில், தாயே, நான் இங்கே இரவு நேரத் தில் உட்கார்ந்து, இந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எப்படியாக வேத வாக்கியங்களை வாசித்துக் கொண்டிருப்பேன் என்பது ஞாபகம் உள்ளதா?' என்றான். 'ஆம், ஆம், யவீரு. நீர் எப்படியாக இங்கே உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்தீர் என்பதை நான் - நான் - நான் அறிவேன்.' 'நான் ஒரு தடவைக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் போய் விட்டு, உள்ளே வந்து, 'நான் எஐமானின் வேலையின் நிமித்தமாக வெளியே சென்றிருந்தேன்' என்று உன்னிடம் சொல்லியிருந்தேனே.' 'ஆம். அது எல்லாவற்றையும் குறித்து எனக்கு ஞாபகம் உள்ளது.' 'நல்லது, நான் இதை உன்னிடமிருந்து தொடர்ந்து மறைத்து வந்திருக்கிறேன். ஆனால் ஒரு காரியத்தை உன்னிடம் கூற விரும்புகிறேன். நான் எங்கிருந்தேன் என்று உனக்குத் தெரி யுமா?' 'நல்லது, அன்பே, நீர் எங்கேயிருந்தீர்?' 'நான் கலிலேயா தீர்க்கதரிசியாகிய நாசரேத்தூர் இயேசு வுடைய கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தேன். நான் கலந்து கொண்டிருந்தேன்...' 'ஓ,' அவள், 'அது எனக்கு இரகசியம் அல்ல. அவருடைய (இயேசுவுடைய) செய்திகளை நீர் குறிப்பெடுத்து வைத்திருக்கும் உங்களுடைய குறிப்பேடுகளை நான் வாசித்தேன். பாரும்? நான் அறையைப் பெருக்கிய போது, குப்பை கூடை முழுவதும் அவை களால் நிரம்பியிருந்ததை நான் கண்டேன். நீர் பாரும்? நீர் வேத வாக்கியத்தினூடாக எங்கே தேடிக் கொண்டிருந்தீரோ அவை களை நான் அப்படியே வாசித்தேன்' என்றாள். 'நிச்சயமாகவா?' 'ஆம்.' 'நல்லது, நான் உன்னிடம் கூறுகிறேன். உனக்கு என்ன வென்று தெரியுமா? அவர் மேசியா தான் என்று நான் உண் மையாகவே விசுவாசிக்கிறேன்.' 'ஏன்,' அவள், 'அன்பே, நீர் இப்பொழுது அதை அறிக்கை செய்ய ஆயத்தமா? நான் ஆரம்பத்திலிருந்தே அதை விசுவாசிக் கிறேன்' என்றாள். இப்பொழுது, அவன் ஆயத்தமானான். இப்பொழுது அவளிடம் அவனால் கூற முடியும், என்ன... 'உனக்கு என்னவென்று தெரியுமா? தேனே, மருத்துவர் இப்பொழுது தான் என்னிடம் ஒரு காரியத்தைக் கூறினார்' என்றான். 'என்ன? நம்முடைய மகள் சுகமடையப் போகிறாளா?' 'இல்லை, அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்.' 'ஓ, யவீரு, ஓ, ஓ, நிச்சயமாக அப்படியிருக்காது...' 3030.'ஆம், ஆம். அவள் - அவள் - அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் நாசரேத்தூர் இயேசு எங்கேயிருக்கி றாரோ என்று வியப்படைகிறேன்? அவர் - அவர் சில தினங்களுக்கு முன்பு கடலைக் கடந்து சென்றது உனக்குத் தெரியும். அவர் தூரமாகச் சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறாரோ என்று எனக்கு - எனக்கு வியப்பாயுள்ளது. நம்மால் அவரை மாத்திரம் கண்டுபிடிக்க முடியுமானால். நல்லது, நல்லது, நாம் நம்முடைய விசுவாசத்தை நன்றாக அறிக்கை செய்து, போக வேண்டும்.' நல்லது, அவன் எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் வெளியே நடந்து சென்றான்... 'நல்லது, நான் ஒன்றை அறிவிக்க வேண் டியுள்ளது. பன்னிரெண்டு வயதான என்னுடைய ஒரே மகள் மரித்துக் கொண்டிருக்கிறாள் என்று மருத்துவர் சற்று முன்பு தான் என்னிடம் கூறினார்' என்றான். அவ்வாறு அவன் அவர்களிடம் கூறினான், அவர்கள் அனைவரும் புலம்பி அழத் தொடங்கினர். அவன், 'இப்பொழுது, பொறுங்கள். அது நம்முடைய கடைசி நம்பிக்கையல்ல. சற்று காத்திருங்கள்' என்றான். ஓ, மாவட்ட மதகுருவும், பிஷப்பும், அவர்கள் அனைவரும் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த போது, அவனு டைய முகம் சிவந்து போனதை நான் உணருகிறேன், உங்களுக்குத் தெரியும். அவன் என்னச் செய்யப் போகிறான்? ஆனால், 'நமக்கு வேறொரு நம்பிக்கை உண்டு.' பிஷப் எழுந்து, 'ஆ, நீர் வேறொரு மருத்துவரின் யோசனை யைக் கேட்க விரும்புகிறீரா?' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 'நல்லது, அதுவல்ல, அது சரியானதல்ல. ஆனால் ஏதோ வொன்று எனக்குள்ளது...' அவனுடைய இருதயமானது மிக வேகமாக அடிக்கத் தொடங்கியது, உங்களுக்குத் தெரியும். உன்னால் அதைக் கூற முடியுமா? அவன் கொஞ்சம் திக்குமுக் காடிப் போனான். அவனுடைய மனைவி, 'தொடர்ந்து அவர்களிடம் சொல்லுங் கள், அவர்களிடம் சொல்லுங்கள், அவர்களிடம் சொல்லுங்கள்' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 'நல்லது (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய தொண்டையைச் சரி செய்யும்படி ஒரு சத்தமெழுப்புகிறார் - ஆசி), சகோதரர்களே, இப்பொழுது இது உங்களை சிறிது உணர்ச்சிவசப்படச் செய்யலாம் என்பதை அறிவேன். ஆம், ஆனால் இயேசு கிறிஸ்துவே தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். கலிலேயா தீர்க்கதரிசி தான் மேசியா என்று நான் - நான் விசுவாசிக் கிறேன். நான்...' ஏன், பிஷப்பும், மாவட்ட மதகுருவும், எல்லா கௌரவம் வாய்ந்தவர்களும் எழுந்து, 'ஏன், யவீரு, என்னே, லூக்காவும் மற்றவர்களும் போனதைப் போன்று நீ போகிறாய் என்று கூற விரும்பவில்லை அல்லவா?' என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. 'ஆம், நான் அவரை விசுவாசிக்கிறேன். நான் நிச்சயமாகவே அவரை விசுவாசிக்கிறேன்.' 3131.ஏன்? ஏன்? ஏன்? அவனுக்கு ஒரு தேவை இருந்தது, அப்படிப்பட்ட ஒரு வழியில் உங்களை வைக்க தேவன் ஒரு வழி யைப் பெற்றிருக்கிறார், எப்படியாவது அவளைச் சரியாக வெளியே கொண்டு வர, அந்த விசுவாசத்துடன் நீங்கள் வெளியே வரும்படி அவர் செய்வார். ஆம், ஐயா. இப்பொழுது, அவன், 'அவர் எங்கிருக்கிறார் என்று யாருக் காவது தெரியுமா?' என்று கூறுவதை என்னால் கேட்க முடி கிறது. ஒரு சிறு பையன், 'ஆம், நான் - நான் அன்றொரு நாள் வியாதியாயிருந்து, மருத்துவர் லூக்கா அவர்களைக் காணச் சென்றேன். லூக்கா அவரோடு (இயேசுவோடு) இருந்தார், அவர் -அவர் கதரேனருடைய நாட்டில் இருந்தார், மேலும் அவர்கள்... அவர் இன்று உள்ளே வந்து கொண்டிருக்கிறார் என்று தபால் கொண்டு செல்லும் ஒரு வேலையாள் மூலம் கேள்விப்பட்டேன். அவர்கள் இன்று காலையில் ஒருவேளை தேசத்திலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் இருக்கிறார்கள் என்று ஊகிக்கிறேன்' என்றான். யவீரு தன்னுடைய ஆசாரிய தொப்பியை எடுத்து அதை அணிந்து கொண்டும், தன்னுடைய மேலாடையை உடுத்திக் கொண்டும் வெளியே புறப்பட்டுப் போக ஆரம்பிப்பதை என்னால் காண முடிகிறது. மாவட்ட மதகுரு கதவண்டை நின்று, 'இப்பொழுது, வாலிபரே, இங்கே பாரும். இப்பொழுது, நீர் நீண்ட காலமாக எங்களில் ஒருவராக இருந்து வந்துள்ளீர். இப்பொழுது, நீர் போய் அதைப் போன்ற அப்படிப்பட்டதைத் தொடங்கி, நம்முடைய சபையோரை அதிலே தொடர்பு கொள்ளச் செய்து, நம்முடைய குழுவில் அதைப் போன்ற அப்படிப்பட்ட மதவெறித்தனத்தைக் கொண்டு வரப் போவதாக இருந்தால், என்ன நடக்கப் போகிறது என்று உமக்குத் தெரியுமா? நாங்கள் உம்மை சபைக்குப் புறம்பே தள்ளி விடப்போகிறோம். நாங்கள் உம்முடைய பெயரை புஸ் கத்தை விட்டு நீக்கி விடப் போகிறோம். அவ்வளவு தான்' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 3232.நல்லது, இவ்விதமாக அது அவனுடைய சிறிய இருத யத்தை துளைத்து ஊடுவிச் செல்வதை என்னால் கேட்க முடி கிறது. அவன் பக்கத்திலிருந்த தன்னுடைய மனைவியை நோக் கிப் பார்த்தான், அவன் என்ன சொல்லப் போகிறானோ என்று எதிர் பார்த்து நின்று கொண்டிருந்தாள், மேலும் மரித்துக் கொண் டிருக்கும் சிறு மகளை நோக்கிப் பார்த்தாள். அவன், 'நீ அவளிடம் போயிரு, ஏனெனில் நான் இங்கே போகிறேன்' என்றான். அது சரியே. 'நான் என்னுடைய பாதையில் இருக் கிறேன்.' அவனுக்கு ஒரு தேவையிருந்தது, அவன் அவசர அவசரமாக போய்க் கொண்டிருந்தான். அவன் சரியாக இப்பொ ழுதே போக வேண்டும். அவர்கள், 'ஞாபகம் கொள், நீ போவாயானால், என்ன சம்பவிக்கும் என்று உனக்குத் தெரியும். எங்களுடைய அறிவிப் பைக் குறித்து உனக்குத் தெரியும்' என்று கூறினார்கள். 'ஆம். அதைக் குறித்த எல்லாமும் எனக்குத் தெரியும். ஆனால் இங்கே மரித்துக் கொண்டிருக்கிற ஒரு பிள்ளை எனக்குள்ளது. எல்லா நேரமும் என்னுடைய இருதயத்த்தில் மறைத்து வைத்திருந்த அதே காரியத்தை நான் வேதவாக்கியங்களில் ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்; நான் மாறுவேடம் போட்டுக் கொண்டு, அவருடைய கூட்டங்களில் பங்கு பெற்றிருக்கிறேன்; வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன், அவர் மேசியா தான்.' ஆமென். அதுதான் அது. ஆமென். அதுதான் வழி... இப்பொழுது, யவீரு, நீ அதற்கு வந்துகொண்டிருக்கிறாய். நீ வெளியே வந்து, எது சரியென்று அவர்களிடம் சொல்லு. உன்னு டைய விசுவாசத்தை அறிக்கை செய், அப்படியானால் நீ உன்னு டைய சரியான - சரியான பாதையில் இருக்கிறாய். அது ஒருவிதமான இருள்சூழ்ந்த காட்சியாக இருந்தது. 3333.ஓ, அவன் சொன்னான்... சபை, 'இப்பொழுது, நீ ஞாபகம் கொள். நீ அதைச் செய்தால், நல்லது, என்ன சம்பவிக் கப் போகிறது' என்று கூறினது. ஆனால் யவீருக்கு ஒரு தேவை யிருந்தது, நெருக்கடியான நிலை இருந்தது. ஆனால் சகோதரனே, அவர் மேசியாவென்றும், தேவனுடைய குமாரன் என்றும், அவர் ஜீவிக்கிறவர் என்றும், அவருடைய வல்லமையானது அப்படியே மாறாமல் உள்ளது என்று நாம் அறிக்கை செய்ய வேண்டிய ஒரு நேரம் எப்பொழுதாவது இருக்குமானால், இன்றுதான் அத்தேவையுள்ளது. இன்றே அந்த மணிநேரம். ஜனங்கள் மரித்துக் கொண்டிருக்கின்றனர். ஜனங்கள் சபைகளில் மரித் துக் கொண்டிருக்கின்றனர். ஜனங்கள்... பெந்தெகோஸ்தே சபை மரித்துக் கொண்டிருக்கிறது. அது மிகவும் சடங்காசாரமாய் போய் விட்டது. அது தேவனை விட்டு தூரமாய் போய் விட்டது. எந்த நேரமும் சற்று வெளியே நடந்து, 'நாம் மரித்துக் கொண்டிருக்கிறோம்; நாம் தேவனிடத்தில் திரும் புவோம்' என்று கூறுவோமானால். அது சரியாக இப்பொழுதே, ஏனெனில் அங்கே ஒரு தேவையுள்ளது. பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்குத் திரும்பி வாருங்கள். அங்கே அநேக மதவெறித்தனங்கள் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். நான் அதை உணர்ந்து கொள்ளுவேன். நான் அன்றொரு காலையில் ஊழியக்காரர்களின் காலை உணவுக் கூட்டத்தில் பேசினது போன்று. நீங்கள் மேய்ப்பர்களை கடினமாக குறைகூற முடியாது. ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் கள்ளத்தனமான, ஒரு கள்ள டாலர் நோட்டைக் காணும் ஒவ் வொரு தடவையும், அது ஒரு உண்மையான டாலர் நோட்டி லிருந்து செய்யப்பட்டது என்பது உலகத்திலுள்ள எதையும் போன்று நிச்சயமானதாகும். 3434.நான் ஒருபோதும் மிகவும் ஆச்சரியப்படவில்லை. ஒருசமயம் நான் சாலையில் போய்க்கொண்டிருந்து, ஒரு - ஒரு - ஒரு பெருங்கூட்டம் காகங்கள் அல்லது கறுப்பு பறவைகளைக் கண்டேன். அவைகளுக்கு மிகமோசமானவிதத்தில் திடீர் சந்தடி உண்டாகியிருந்தது. நான், 'அவைகளுடனான காரியம் என்ன?' என்று எண்ணினேன். நான் சாலையில் நடந்து சென்றேன். அங்கே... அவைகளில் சில பறவைகள் மரங்களிலும், சில பறவை கள் தந்தி கம்பங்களிலும், சில பறவைகள் வேலிகளிலும் இருந் தன. நான், 'அந்தப் பறவைகளுடனான காரியம் என்ன?' என்று நினைத்தேன். அங்கே வயலில் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் பயிரிடப் பட்டிருந்த ஒரு நிலம் இருந்தது. அந்த நிலத்திற்குச் சொந்தமான மனிதன் விடுமுறைக்காக ஃபுளோரிடாவுக்குப் போயிருந்தான். அவன் அந்த ஸ்ட்ராபெர்ரிகளை அங்கே நட்டு, அவைகளை யாரையும் பறிக்க விடவில்லை, ஏனெனில் அவன் - அவன்காண விரும்பினான்... அவன் பறவைகளுக்காக அவைகளை அங்கே பாதுகாத்து வைத்திருந்தான். அவன் பறவைகளைக் கவனித்துப் கொண்டிருப்பதை விரும்பினான். 3535.எனவே, ஒரு விடுமுறைக்காக ஃபுளோரிடாவுக்கு அவன் போயிருந்த சமயத்தில், ஏன், யாரோ ஒருவர் அங்கே வந்து, ஒரு பெரிய சோளக்கொல்லை பொம்மையை வயலில் வைத்தான். அவனே அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களைப் பறிக்க விரும்பினான், பறவைகள் அவைகளைத் தின்ன அனுமதிக்கவில்லை. பறவைகள் முழுவதுமாக உணர்ச்சிவசப்பட்டன. ஓ, என்னே, அவைகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தன. அவைகளில் சில பறவைகள் சோளக்கொல்லை பொம்மைகளை பார்த்துக்கொண்டு, கிறீச் கிறீச் என்று தொடர்ந்து ஒலியெழுப்பியவாறு ஒரு மரத்தில் உட்கார்ந்திருந்தன. சில பறவைகள் தந்திக் கம்பங்களிலும், சில பறவைகள் வேலிக்கம்பங்களிலும் அமர்ந்திருந்தன. நான், 'நல்லது இப்பொழுது, என்ன காரியம் என்று வியப்பாயுள்ளதே?' என்று நினைத்தேன். அந்தக் கிளைகளில் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காணும் படி நேர்ந்தது... இரண்டு பெரிய ஆரோக்கியமான பறவைகள் அந்தச் சோளக் கொல்லை பொம்மையின் மேல் உட்கார்ந்து கொண்டு, எவ்வளவு ஊக்கத்துடன் அவைகள் சாப்பிட முடியுமோ அப்படியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தன. 'அது அந்தக் காட் சியாக இல்லையென்றால், அது ஏதோவொன்றாக இல்லையென் றால்' என்று எண்ணினேன். இப்பொழுது, 'நல்லது, என்ன காரியம்?' என்று நினைத் தேன். நான் சற்று அருகில் நடந்து சென்று நோக்கிப்பார்த்தேன். அங்கே ஏராளமான ஸ்ட்ராபெர்ரி பழங்கள் இருந்தன. நான், 'பையனே, என்ன விஷயம்?' என்று நினைத்தேன். அந்தவித மாகத்தான் அவர்களில் சிலர் செய்கிறார்கள். அவர்களில் சிலர் அவ்விதமாகப் போகிறார்கள், இங்கே இவ்விதமாக திரும்பிப் போகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியிலோ அல்லது எதிலுமோ விசுவாசம் கொள்வதில்லை. சிலர் வந்து, 'நல்லது, நான் ஒரு நல்ல பரிசுத்தமான ஜவியத்தில் நம்பிக்கைக் கொண்டுள்ளேன், ஆனால் தெய்வீக சுகமளித்தலை நான் - நான் - நான் - நான் சற்றும் விசுவாசிப்பதில்லை' என்று கூறுகிறார்கள். ஆனால் மற்றவர்களோ, ஏறக்குறைய எல்லைக்கோட்டை அடைந்து விடு கின்றனர்; ஆனால் அவர்கள் சோளக்கொல்லை பொம்மையைக் குறித்து பயப்படுகின்றனர். ஏறக்குறைய பெந்தெகோஸ்தே அவ்விடத்தில் தான் வந்துள்ளது. நீங்கள் சோளக்கொல்லை பொம் மையைக்குறித்து பயப்படுகிறீர்கள். 3636.நல்லது, சகோதரனே, ஒரு சோளக்கொல்லை பொம்மை என்பது ஒரு சாப்பாட்டுச் சீட்டாயிருக்கிறது. ஆமென். அப்படியே சோளக்கொல்லை பொம்மைக்குப் பின்புறமாக உள்ளே வாருங்கள்; அவ்வளவுதான் நீங்கள் செய்ய வேண்டியது. எல்லாவிதமான கள்ள இஸம்களும் காரியங்களும் எழும்புவதை நீங்கள் காணு வீர்களானால்... நான் அன்றொரு இரவு, இந்த எல்லா இஸம்களும் (isms), உடனடியாக வாசம்களாக ('wasms') ஆகி விடும் என்று சொன்னபோது, எனவே அவர்கள்... அவர்கள் - அவர்கள் அதைக்குறித்து கவலைப்படுவதேயில்லை; ஆனால் தேவனுடைய வார்த்தையானது உண்மையாக இருக்கும். வானமும் பூமியும் இனிமேல் இல்லாதிருக்கும் போதும், அது இன்னும் சத்தியமா யிருக்கும். ஆம், ஐயா. அங்கே உட்கார்ந்து ஸ்ட்ராபெர்ரி பழங்களைச் சாப்பிடும் அவைகளுக்கு ஆக்கினை கிடையாது. சகோதரனே, பெரிதும் ஆரோக்கியமுமான பறவைகளாகிய அவைகள் அங்கே உட் கார்ந்து எவ்வளவு ஊக்கத்துடன் முடியுமோ அப்படியாக கொத்தி கொத்தித் (தின்று) கொண்டிருந்தன. ஏனெனில் அவைகள் சோளக்கொல்லை பொம்மையைக் குறித்துக் கவலைப்படவே யில்லை. அவைகள் - அவைகள் - அவைகள் ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதே விதமாக தின்று கொண்டிருந்தன. எனவே அதைத் தான் நாம் செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் மிக நன்றாக பேசுகிற நிலையை நீங்கள் அடைந்து, இந்தக் காரியங்களை நீங்கள் காணும்போது, சபையானது பாரம்பரியம் மிக்கதாக ஆகி, அப்பெரிய மனிதன், 'நல்லது - நல்லது, நாம் அப்படியே அவைகளை இதற்குள்ளும் அதற்குள்ளும் கொண்டு வருவோம்' என்று கூறுகிறான். சகோதரனே, நீ கவனமாயிருப்பது நல்லது, அங்கு எங்கோ ஏதோ தவறுள்ளது. அங்கே ஏதோ தவறுள்ளது. யாரோ ஒருவர் (என்னைக்) குற்றம் கண்டுபிடித்து, கேலி செய்து, சுற்றும் முற்றும் நோக்கிப் பார்க்கும்... நிலையை அடைய நான் விரும்புகிறேன். நல்லது, அதை சோதித்துப் பார்த்து அது எல்லாவற்றையும் குறித்து என்ன என்று பாருங்கள். ஆம், ஐயா. அது விருந்து சாப்பாட்டிற்கான அழைப்பு மணியாக உள்ளது. சரியாக அதற்கு பின்னால் இருப்பதைக் கவனியுங்கள். அந்த நல்ல ஆப்பிள் மரத்தின் கீழே அந்தக் கூட்டத்தினர் எப்போதும் இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 'அற்புதங்களின் நாட்கள் கடந்து போய் விட்டன' என்று கூறும் அந்தச் சிறிய கடினமான, வந்து நின்றிருக்கும், வெடுவெடுப்பான வர்களை, இவர்கள் கலைந்து போகப் பண்ணாமல் இருக்கிறார் கள். அதற்குள் கூடிவரும்படி செய்ய அங்கே எதுவுமேயில்லை. அவர்களைப் போகும்படி விட்டு விடுங்கள். 3737.ஆனால் யவீருக்கு ஒரு தேவையிருந்தது. அவனுக்கு ஒரு தேவையிருந்தது, ஏனெனில் அவனுடைய ஒரே பிள்ளை மரித்துக் கொண்டிருக்கிறாள். அது இன்றிரவும் அதே காரியமா யுள்ளது. இப்பொழுது, அவன், 'இப்பொழுது, நான் காத்திருப் பேன். நான் அநேகமாக... ஒருவேளை, நான் சிறிது நேரம் காத்திருந்தால், நிக்கோதேமுவைப் போன்று அவரைச் சந்திக்க இரவு வேளையில் போகலாம். இரவில் ஏதோவொரு நேரத்தில் நான் நழுவிப் போய் விடுவேன். நான் உங்களுக்குக் கூறுகிறேன்...' என்று சொல்ல வேண்டியதாக இருக்கவில்லை. கூறி னான், அவனுடைய மனைவியிடம் இதைப்போன்ற ஏதோவொன் றைக் கூறியிருக்கலாம். 'நல்லது, இப்பொழுது அங்கே மாவட்ட மதகுரு வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே பிஷப்பும் அமர்ந்திருக்கி றார். அங்கே எல்லா சபையாரும் மற்றவர்களும் அமர்ந்து கொண் டிருக்கிறார்கள். நான் உனக்குச் சொல்லுகிறேன். இரவு வரும் வரை நான் காத்திருப்பேன். இரவு வரும்போது, மீண்டும் என் னுடைய சிறிய முகத்திரையோடு நான் அந்தக் கூட்டத்தில் நழுவிச் சென்று விடுவேன். கூட்டம் முடிந்த பிறகு, என்னை யாரும் அறிய விடமாட்டேன்; நான் சுற்றி அந்தக் கட்டிடத்தின் பின்னால் நழுவிச்சென்று, 'கலிலேயா தீர்க்கதரிசியே, சொல்லும்; நான் உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறேன். நான் உம்மிடத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறேன். இங்கே வாரும். எனக்கு வியாதிப் பட்ட ஒரு மகள் இருக்கிறாள்' என்று கூறுவேன்.' இல்லை, சரியாக அப்பொழுதே மகள் மரித்துக் கொண்டிருந் தாள். அவன் அப்பொழுதே போக வேண்டியிருந்தது. அதுவே செயல்பட வேண்டிய நேரமாயிருந்தது. சகோதரர்களே, அதுவே செயல்படுவதற்கான நேரம். நாம் முகத்தை மேல்நோக்கி வைத்து ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமா அல்லது கீழ்நோக்கி வைத்து ஞானஸ்நானம் கொடுக்க வேண்டுமா அல்லது நாம் இந்த சபையைச் சேர்ந்திருக்க வேண்டுமா அல்லது அந்தச் சபை யைச் சேர்ந்திருக்க வேண்டுமோ என்பதைக் குறித்து வாக்கு வாதம் செய்ய இது நேரமல்ல. பரிசுத்த ஆவியானவர் சபைக்குள் வந்து, செயல்பட வேண்டிய நேரம் இதுவே. நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாகி விட்டது. அந்த மணி நேரம் இங்குள்ளது. கோட்பாடுகளைக் குறித்தும், உபதேசங்களைக் குறித்தும், அதைப்போன்ற காரியங்களைக் குறித்தும் குழப்பம் உண்டாக்குவதற்கு இது நேரமல்ல. தேவனுடைய ஆவிக்குள்ளாகி, புதிய ஒன்றுக்குச் செல்வதற்கு இதுவே நேரம். ஏனெனில் அணுகுண்டுகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன, ஏவுகணைகள் எல்லா இடங்களிலும் உள்ளன, ஸ்புட்னிக் செயற்கை கோள்களும் வானத்தில் உள்ளன. முடிவு காலத்திற்கு முன்பாக சம்பவிக்கும் என்று இயேசு கூறிய ஒவ்வொன்றும் இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் பரிசுத்த ஆவியானவர் இங்கே யிருக்கிறார், கிறிஸ்து கால அட்டவணைபடியே சரியான நேரத் தில் இருக்கிறார். ஆம். குற்றம் கண்டுபிடிப்பவர்கள் எழும்பிக் கொண்டிருக்கிறார்கள். 3838.நான் இதைக் கூறப்போகிறேன், ஏனெனில் அது... நான் ஒரு சமயத்தில் விலகியிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண் டேன். அவர்கள் அதைச் செய்தபோது, அந்த சகோதரன் அதைக் குறித்து மிகவும் எரிச்சல்பட்டார். நான்... இப்பொழுது, நான் இதைக் கூற விரும்புகிறேன், ஏனெனில் இது ஒலிநாடாவில் உள்ளது, எனவே, நம்முடைய சகோதரன் இந்த ஒலிநாடாவைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், அதை அவரால் கேட்க முடியும். அது சகோதரன் டேவிட் டூப்ளெசிஸ் அவர்களைக் குறித்ததாகும்; அவர் என்னுடைய விலையேறப்பெற்ற சகோதரனும் நண்பருமா யிருக்கிறார். அவரிடமிருந்து குறைகூறுகிறவிதமான ஒரு கடிதம் கிடைத் தது. நான் - நான் அதை வாசிக்க விரும்பவில்லை; செயலாள ரிடம் அது உள்ளது, எனவே, நான் - நான் அதை வாசிக்க விரும்பவில்லை; ஏனெனில் ஒரு ஒலிநாடாவில் அவருடைய பெயரை கூறினதை நான் திரும்பப் பெறுகிறேன். ஆனால் இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிநாடாக்கள் போய்க் கொண்டிருக்கின்றன. நான் கூறினது சரியாக இங்கேயுள்ளது. நான் கிறிஸ்துவின் வருகை சமீபமாயுள்ளது என்பதன் பேரில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தேன். சகோதரன் டேவிட் அவர்கள் பிரஸ்பிடேரியன்களோடும், மெதொடிஸ்டுகளோடும், பாப்டிஸ்டுகளோடும், அந்த மகத்தான மனிதர்களோடும் தொடர்பு வைத்திருந்தார். அது அவர்களோடுள்ள அவருடைய ஊழியமாயிருந்தது. தேவன் அவரை ஒரு ஊழியத்தோடு அனுப்பியிருக்கிறார். டேவிட் அவர்கள் ஒரு புத்திசாலியான வேத ஞானியாக வும், பண்டிதராகவும், தேவனுடைய அற்புதமான ஒரு மனிதராகவும் இருக்கிறார். அவர் கூட்டங்களில் என்னுடன் இருந்திருக்கிறார்; அவர் என் பக்கத்தில் நின்றிருக்கிறார். ஒரு சகோதரன் வேறொரு சகோதரனை நேசிக்கக் கூடியதைப் போன்று நான் அவரை நேசிக்கிறேன். அது உண்மை. ஆனால் நான் டேவிட் அவர்களைக் குறித்து என்ன கூறி னேன் என்று சபையார் எனக்கு சாட்சி கொடுப்பார்கள். நான், 'சகோதரன் டேவிட் அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும் கன்னி கையுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை அறியும்படியான உண்மைக்கு விழித்தெழும் அளவுக்கு ஆவிக்குரியவராக இருப் பதை போன்று தோன்றுகிறது' என்று சொன்னேன். பிரஸ்பி டேரியன்கள், 'நாம் தெய்வீக சுகமளிப்பவர்களிடம் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் அந்நிய பாஷையில் பேசுதலுக்குத் திரும்பிப்போக வேண்டியிருக்கிறது' என்று ஒரு சிறு அறிக்கையை எழுதுவதை கண்ட போது, பெந்தெகோஸ்தே ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கின்றனர். அவர்கள் அறிவிப்பு செய்த இடத்திலி ருந்த ஒரு துண்டிலிருந்து நீங்கள் வாசித்திருக்கிறீர்கள். 'நாம் திரும்பிச் சென்று சுகமளிக்கும் ஆராதனைகளை நடத்த வேண்டி யுள்ளது.' பில்லி கிரஹாம், 'பெந்தெகோஸ்தேவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்' என்று கூறுகிறார். சகோதரனே, உறங்கிக் கொண் டிருக்கும் கன்னிகையை எழுப்பும்படிக்கு அவர்கள் சென்று, அவள் எண்ணெய் வாங்க வந்த அதே மணி வேளையில் இயேசு வந்தார் என்பதை நீங்கள் உணருகிறீர்களா? நான், 'சகோதரன் டேவிட் அவர்கள் அதை உணர்ந்திருப் பாரோ என்று வியப்படைகிறேன்' என்றேன். 3939.பெந்தெகோஸ்தே சபை... என்று எண்ணுகிறார். அவர் கள் அன்றொரு நாள் சில கத்தோலிக்க பாதிரிமார்களோடு நின்று, பெந்தெகோஸ்தே வியாபார புருஷர்களின் காலை உணவுக் கூட்டம் அல்லது ஏதோவொன்று மற்றும் அதைப் போன்ற காரியங்களை ஆசீர்வதித்த படத்தை செய்தித்தாளில் போட்டிருந் தனர்; அது சரிதான். ஆனால் அது என்னவென்று சபையானது உண்மையிலேயே உணருகிறதா என்று நான் வியப்படைகிறேன். அது ஒரு அடையாளம். அந்த உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகை வந்து கதவைத் தட்டி, அவளால் உள்ளே போக முடியாத போது, மணவாட்டி போய் விட்டாள். நீங்கள் அதைக் கவனிக்கவில்லையா? சகோதரன் டேவிட் அவர்களைக் குறித்து நான் அதைத் தான் கூறினேன் (பாருங்கள்?), அவருடைய வேலையைக் குறித்தோ அல்லது அவருடைய வேலைக்காரரைக் குறித்தோ அல்லது அவருடைய நற்பெரைக் குறித்தோ எதுவும் கூறவில்லை. டேவிட் என்னுடைய சகோதரன், நான் அறிந்த அருமையான தேவபக்தியுள்ள மனுஷர்களில் அவரும் ஒருவர். ஆனால் வெளியேயுள்ள ஸ்தாபன உலகமானது இந்தச் செய்தியைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கும் அதே நிமிடம் தான் சரியாக அவர் வரும் வேளையாயுள்ளது என்பதை உணரும்படி யாக, அவர் - அவர் அதை எவ்வாறு அறிந்து கொள்ளாமல் இருக்கிறாரோ என்று நான் சற்றே வியப்படைந்தேன். அவர்கள் - அவர்கள் போன போது, உறங்கும் கன்னிகை தன்னுடைய விளக்கில் எந்த எண்ணெயும் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். அதைப் பெற்றுக்கொள்ளுவதற்குக் கதவைத் தட்ட அவள் வரும்போது, அதுவே சரியாக மணவாட்டி போய் விடும் நேரமாயுள்ளது, அப்போது புத்தியுள்ள கன்னிகை போய் விடு வாள். அது சரியே. அவர்கள் உள்ளே வர மாட்டார்கள். இல்லை. அந்த அமைப்புகள் உள்ளே வருவதில்லை. அவர்களுக்குத் தருணம் கிடைக்காது, இந்தச் செய்தியானது சுற்றிலும் பரவும் நேரம் சபையானது போய் விடும். எனவே அவர்கள் சரியாக இப்பொழுதே உள்ளே வர முயற்சி செய்வார்களானால், நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம்? சோதோமின் நாட்களில் நடந்தது போன்ற காரியங்களை நாம் காணும்போது, மனுஷகுமாரனின் வருகையிலும் அப்படியே நடக்கும். ஆபிரகாமும் அவனுக் குப் பிறகு அவனுடைய சந்ததிக்கும் இது கடைசி செய்தி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரியமும் சரியான நேரத்தில் இருக் கிறது என்பதை நாம் காண்கிறோம். நமக்குத் தேவையுள்ளது. இது செயல்படுவதற்கான நேரம். அது, 'நான் பள்ளிக்குச் சென்று, Ph.D., அல்லது LL.D. பட்டங்களை பெறும் மட்டுமாகக்காத்திருங்கள்' என்பதாக இல்லை. சரியாக இப்பொழுதே சுவிசே ஷத்திற்குள் வந்து, பிரசங்கம் பண்ண வேண்டும் என்பதாக அது உள்ளது. ஆம். இப்பொழுதே அங்கு செல்லுங்கள். இப்பொழுதே அம்மணி நேரம். 4040.யவீரால் நாளை வரை காத்திருக்க முடியவில்லை. அவனுடைய பிள்ளை மரித்துக் கொண்டிருந்தது. சகோதரர்களே, நாம் ஒரு புதிய அமைப்புக்காகக் காத்திருக்க முடியாது. ஏதோ வொன்று உணர்ச்சிவசப்படுதலைப் பெறும் மட்டுமாக நம்மால் காத்திருக்க முடியாது. அது ஏற்கனவே இங்குள்ளது. நாம் கிறிஸ் துவைக் காட்சியில் கொண்டு வர வேண்டும். பெந்தெகோஸ்தே சபையானது மரித்துக் கொண்டிருக்கிறது. ஆமென். அசெம் பிளிஸ், ஒருத்துவக்காரர், இருத்துவக்காரர், திரித்துவக்காரர், நான்கு சதுரக்காரர், அவர்கள் அனைவருமே மரித்துக் கொண் டிருக்கின்றனர். இந்தக் காரியங்களை விட்டுப் போய்விடுங்கள். அவையெல்லாம் சரிதான். ஆனால்... அதைக் குறித்து வம்பு பேசுவதை சற்று நிறுத்துங்கள்; நாம் கிறிஸ்துவை காட்சியில் கொண்டு வருவோம். அவ்விதமாகத்தான் யவீரு கிறிஸ்துவைக் காட்சியில் கொண்டு வர வேண்டியிருந்தது அல்லது அவனுடைய பிள்ளை மரித்து விடுவாள். அவன் மிக வேகமாகத் துரிதப்பட வேண்டி யிருந்தது. அவன் விரைந்து செயல்பாட்டிற்குள் வர வேண்டி யிருந்தது. ஓ, நான் அதை நேசிக்கிறேன். செயல்பாட்டிற்குள் வாருங்கள். ஓ, இன்றிரவு சரியாக இங்கேயிருக்கும் இந்தக் குழு, மெதொடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தெ கோஸ்தேயினர், ஒருத்துவக்காரர், இருத்துவக்காரர், திரித்துவக் காரர் ஆகிய நீங்கள் அனைவரும் விரைந்து செயல்பாட்டிற்குள் வருவீர்களானால், உங்களுடைய பாரம்பரியங்களையும் பகைமை எண்ணங்களையும் ஒரு பக்கமாக தள்ளி விட்டு, கிறிஸ்துவைக் காட்சியில் கொண்டு வாருங்கள். உங்களுடைய இருதயத்தைத் திறவுங்கள். அவர் இங்கேயிருக்கிறார். ஆமென். அவருடைய படகு சிறிது முன்பு தான் கரை வந்து சேர்ந்திருந்தது. (அல்லே லூயா.) அவர் காட்சியில் இருக்கிறார். யாரோ ஒருவர், 'ஆம், விசுவாசம் கேள்வியினால் வருகிறது' என்றார். 'ஆம், அவர் இப்பொழுது அங்கே கப்பல் துறையினுள்ளே வந்து கொண்டிருக்கிறார். அந்த சபையிருந்த மலைக்கு சற்று கீழே அது இருக்கிறது. அவர் இப்பொழுது அங்கே உள்ளே வந்து கொண்டிருக்கிறார்' என்கிறான். நல்லது, அவன் இங்கே போகிறான். அவன் தன்னுடைய சிறு தொப்பியைப் பிடித்துக் கொள்கிறான், மேலும்... 'அவர்கள் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை.' 4141.'சரி, யவீரு, இந்த நாட்களில் ஒன்றில் நீ வருத்தமடையப் போகிறாய். நீ அடி ஆழத்தில் குதித்துக் கொண்டிருக்கிறாய் என் பது உனக்குத் தெரியும்' என்று கூறுகிறான். அவன் அடி ஆழத் தைக் குறித்தோ அல்லது அவன் என்னவாக முடியப்போகிறான் என்றோ கவலைப்படவில்லை. அவனுடைய இருதயம் அவனிடம் கூறினதை அவன் அறிந்திருந்தான். இன்றிரவு இங்கேயிருக்கும் எந்த ஒரு நபரிடமும் என்ன செய்ய வேண்டுமென்று அந்நபரின் இருதயம் கூறும், அப்படிக்கூறாத எந்தவொரு நபரும் இங் கில்லை, உங்களுடைய இருதயம் கூறினதை நீங்கள் செய்வீர் களானால், நீங்கள் அநேகமாக இந்தப் பீடத்தில் இருப்பீர்கள். சரி. இங்கே ஒரு போதகரும் இல்லை, என்ன செய்ய வேண்டுமென்று உங்களுடைய இருதயம் கூறுவதை நீங்கள் செய்தால், நம்முடைய தவறுகளை நாம் அறிக்கை செய்திருப்போம். அது சரியே. நீங்கள் அறிக்கை செய்யும் போது, என்னுடைய... 'கிறிஸ்துவைக் காட்சி யில் கொண்டு வர கரங்களையும் இருதயங்களையும் மனுஷர் களுடன் ஒன்று சேர்க்க நான் ஆயத்தமாயிருக்கிறேன்.' அது தான் பிரதான காரியம். பிள்ளைகள் மரித்துக் கொண்டிருக் கிறார்கள். இங்கேயிருக்கும் இச்சிறு புஸ்தகம் அத்தரிசனத்தை அதனுள் வைத்திருக்கிறது. நான் அங்கே நோக்கிப் பார்த்த போது, அவர்கள்... நான் அதைச் செய்தேன். நான் வாசலுக்கு நடந்து வந்த போது, நான் ஒரு பெந்தெகோஸ்தே ஒருத்துவக் காரரா என்றோ அல்லது ஒரு திரித்துவக்காரரா என்றோ அல்லது ஒரு ஐந்துதுவக்காரரா என்றோ என்னிடம் கேட்கவில்லை. இருந்த ஒரே காரியம் என்னவெனில், நான் உள்ளே வரும்படி அவர் அனுமதித்தார், ஏனெனில் நான் கிறிஸ்துவை நேசித்தேன், என்னுடைய இருதயத்தில் அன்பைக் கொண்டிருந்தேன். சகோ தரர்களே, இப்பொழுது அதுதான் காரியம். 4242.யவீரு துரிதப்பட வேண்டியிருந்தது. அவனுடைய பிள்ளை மரித்துக் கொண்டிருந்தது. தேவனுடைய பிள்ளை மரித்துக் கொண்டிருக்கிறது; சபை மரித்துக் கொண்டிருக்கிறது. நாம் எதையாவது செய்தாக வேண்டும். நீங்கள் ஒருவேளை அதை மனோதத்துவ வசீகரணம் என்று அழைக்கலாம். நீங்கள் ஒரு வேளை அதை பிசாசு என்று அழைக்கலாம். நீங்கள்... நீங்கள் அதை என்னவாக அழைத்தீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில், அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசித்தால், சகோதரனே, உங்களுடைய சபை சம்மந்தமான தொப்பியை மூலையில் வைத்து விட்டு, ஏதோ வொன்றை கூறிக் கொண்டு, தாமதமின்றி அலுவலில் ஈடுபடத் துவங்குங்கள். அது சரியே. சபை மரித்துக் கொண்டிருக்கிறது. கிறிஸ்து காட்சியில் வருவது நமக்கு அவசியமாயுள்ளது: (இதுவே) செயல்பட வேண்டிய நேரம். நான் அதைப் போன்று உணரும்போது அல்ல, நான் அடுத்த தனிப்பட்ட கொள்கையை எடுத்துக் கொள்ளும்போது அல்ல. ஆனால் அவன் ஜனங்களைக் காட்சியில் கொண்டு வர வேண் டியிருந்தது, ஏனெனில் அல்லது இயேசுவைக் காட்சியில் கொண்டு வர வேண்டியிருந்தது. மற்ற எல்லாமும் தோல்வியடைந் திருந்தது. நான் உங்களிடம் ஒரு காரியத்தைக் கேட்க விரும்புகிறேன். பெந்தெகோஸ்தே சபையானது தானாகவே உடைந்து, ஏறக்கு றைய முப்பது வித்தியாசமான அமைப்புகளாக இருக்கும் காரணத்தால் இன்றிரவு அது மிகச் சிறந்ததாக இருக்கிறதா? அல்லது அது தொடங்கும் போது இருந்தது போல? பாருங்கள்? சற்று அதைக் கேட்டுப் பாருங்கள். நாம் தொடர்ந்து மோசமாகி மோசமாகிக் கொண்டே போகிறோம். நம்முடைய பெந்தெ கோஸ்தே சபைகளிலுள்ள ஸ்திரீகளும் மனிதர்களும் இன்னும் கூடுதலாக பரிசுத்தவான்களைப் போலிருந்து ஜெபிக்கிறார்களா? என்னிடம் கூறுங்கள், அவர்கள் பட்டணத்தில் ஏதோவொரு இடத் தில் முழு இரவும் ஜெபக்கூட்டங்களைத் தொடர்ந்து நடத்து கின்றனர், (ஆனாலும்) பட்டணத்தில் செய்யப்படும் பாவங்கள், அவர்கள் வழக்கமாக செய்யப்படுவது போன்றே உள்ளதே. நம்மி டத்தில் ஏதாகிலும் சிறந்தது உள்ளதா? நாம் மோசமாகிக் கொண்டிருக்கிறோம். ஓ, நம்முடைய கட்டிடங்கள் மிகவும் அழகாயுள்ளன. ஓ, நாம் மற்ற சபைகளைக் காட்டிலும் கூடுதலான உயர்ந்த தகுதியைப் பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்களைப் போன்று இருக்க விரும் புகிறீர்களா? நான் இயேசுவைப் போன்று இருக்க விரும்புகிறேன். அதேவிதமாகவே ஒவ்வொரு மனிதனும் கிறிஸ்துவைப் போல இருக்க விரும்ப வேண்டும். நாம் அவரைக் காட்சியில் கொண்டு வருவோம். பாருங்கள்? மேலும் நாம்... சபைகள் மரித்துக் கொண்டிருக்கின்றன. எனவே நாம் ஏதாவதொன்றைச் செய்தாக வேண்டும். நாம் துரிதப்பட வேண்டியுள்ளது. நாம் அதைச் செய்ய வேண்டியதேயில்லை... நாம் அதைச் செய்வதற்கு ஆயிரமாண்டு அரசாட்சி வரையில் காத்திருக்க வேண்டியதில்லை. நாம் அதைச் செய்யப் போகிறோமென்றால், அதை இப்பொழுதே செய்ய வேண் டும், அல்லது அது மரிக்கப் போகிறது. ஏதோவொன்று சம்பவிக் கப் போகிறது. 4343.இங்கே அவன் போகிறான். எனக்குக் கவலையில்லை. அவனுடைய முகம் சிவந்திருந்தது. சகோதரனே, அவன் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும், 'நான் மேலான நிலையில் இருக்கிறேன், எல்லா நேரமும் மேலான நிலையில் இருக்கிறேன்' என்று எண்ணினான். ஒரு முறை அதைத் தொடங்கி என்ன சம்பவிக்கிறது என்று பாருங்கள். நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெனில், அவன் அந்த மலையின் பக்கமாக கீழே நோக்கிப்பார்க்க நேர்ந்தது, என்ன சம்பவித்துக் கொண்டிருந்தது? அவன் அறிந்திருந்த ஒரு சிறு பெண் மலையின் மேல் உட்கார்ந்திருந்தாள், ஒருவேளை அவள் அவனுடைய சொந்த சபையைச் சேர்ந்தவளாயிருக்கலாம். அவன் அதைக் குறித்து அவளிடம் பேசியிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அவள் வெளிப்படை யாக பேசியிருந்தாள், அவள் ஒருமுறை இவ்விதமாக ஏதோ வொன்றை சொல்லியிருக்கலாம்: 'யவீரு, என்னவென்று உமக்குத் தெரியுமா? அங்கேயிருக்கும் அந்தத் தீர்க்கதரிசி ஒரு தேவ மனிதர் என்று நான் விசுவாசிக்கிறேன்.' 'இப்பொழுது, நல்லது, சகோதரியே. நான்... நீ அதைக் குறித்து எவ்வாறு - எவ்வாறு உணருகிறாய்?' ஏனெனில் அவள் சில மாவட்ட மனிதர்களுடைய தூண்டில் இரையாக இருப்பாளா இல்லையா என்று அறியும்படியாக அவன் கவனித்து வந்தான், உங்களுக்குத் தெரியும். எனவே, 'நல்லது, நீ அவர் பேசுவதை எப்பொழுதாவது கேட் டதுண்டா?' என்றான். 'ஓ, ஆம், நான் எப்போதாவது அவர் பேசுவதைக் கேட்ப துண்டு.' 'ஏன், நான் ஒருபோதும் அவர் பேசுவதைக் கேட்டதேயில்லை, ஆனால் நான் அவரைக் குறித்து கேள்விப்பட்டுள்ளேன்.' எனவே விசுவாசம் கேள்வியினால் வருகிறது. 'என்னவென்று உமக்குச் சொல்லுகிறேன். யாரோ ஒருவர் என்னை ஒரு படகில் வைத்து கடலைக் கடந்து எங்காவது ஓரிடத்திற்கு அல்லது அவர் இருக் கும் இடத்திற்கு அழைத்துப் போகக் கூடுமானால், நான் அவ ரைத் தொட மாத்திரம் செய்வேனானால், நான் சுகமடைவேன்.' 4444.பரிதாபமான, நீண்டு ஒடுங்கிய தோற்றத்துடனும், வெளி ரிய முகத்துடனும் அவள் இங்கே வருகிறாள். அவள் கரை பக்கமாக வந்து கொண்டிருக்கிறாள். அவள் தள்ளாடியவாறு, ஏதோவொன்றைப் பிடித்திருப்பதைப் பாருங்கள். மேலும் அங்கி ருந்த அவர்கள் அனைவரும், 'காலை வணக்கம், சங்கை அவர் களே. எப்படியிருக்கிறீர்கள், டாக்டர்? உம்மை இங்கே கொண் டிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. ரபி, உம்மை மீண்டும் கொண்டிருப் பதில் மகிழ்ச்சி' என்று கூறுகின்றனர். (சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய தொண்டையை சரிசெய்வது போன்ற சத்தத்தை எழுப்புகிறார் - ஆசிரியர்.) ஒருவர் மற்றவரைப் பார்க்கின்றனர், உங்களுக்குத் தெரியும். யவீரு அங்கே நின்று கொண்டிருந்தான்... வழக்கமான ஒருவித புறக்கணித்துத் தள்ளப்பட்ட நிலை, உங்களுக்குத் தெரி யும்... உங்களுக்குத் தெரியும், அவர் மேல் விசுவாசம் கொண் டிருந்த அநேக ஜனங்கள் அங்கிருந்தனர், எனவே அவன் அவர் கள் கூறுவதைக் கவனிக்க வேண்டியிருந்தது, உங்களுக்குத் தெரியும். எனவே அவன் திரும்பி வருகிறான், இந்த சிறு பெண் (வந்த) பிறகு, அவன்... அவள், 'அன்புள்ள ஐயா, நான் அவரிடம் (இயேசுவிடம்) பேச விரும்பும் அளவுக்கு அங்கே அதைத் தாண்டிப் போகும்படி நீர் எனக்கு உதவி செய்வீரா?' என்றாள். 'ஓ, நீங்கள் அதற்குக் கவனம் செலுத்த வேண்டாம். நாம் அப்படியே இங்கே நின்று கொண்டிருக்கிறோம். நாம்... அவனைக் கண்ணியில் சிக்க வைக்க நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இந்தக்காலையில் நாம் அவனுக்கு ஒரு கண்ணி வைத்துள்ளோம்; நாம் உண்மையாகவே இக்காலையில் அவனைப் பிடிக்கப் போகிறோம். நீங்கள் சற்றுக் கவனியுங்கள் (பாருங்கள்?) நாம்... அந்தக் கார ணத்தினால் தான் நாம், 'ஹலோ, அங்கேயிருக்கும் டாக்டர், ஹலோ, ரபி அவர்களே' என்று அவனை அழைத்துக் கொண் டிருக்கிறோம்.' 'பாருங்கள்? நாம் அவனுக்கு ஒரு கண்ணி வைத்துள்ளோம்; நாம் அவனை இக்காலையில் தலைகீழாக்கப் போகிறோம்.' எனவே இந்த... ஏனெனில் இருதயத்தின் இரகசியங்களை அவன் அறிகிறான் என்று அவர்கள் கூறுகின்றனர். நாம் அது எல்லா வற்றையும் அவனுக்காக ஏற்பாடு செய்துள்ளோம்.' அன்றொரு இரவில், யாரோ ஒருவர் எனக்காக வைத்திருந்தது போல, பரிசுத்த ஆவியானவர் இறங்கிவந்த போது, அது தோல்விய டைந்தது. அதை நீங்கள் கவனித்தீர்களா இல்லையாவென்று எனக்குத் தெரியாது, ஆனால் அது நிச்சயமாக செய்யப்பட்டது - அந்த இளைஞனுக்கு அது ஒரு பெரும் தடுமாற்றமாக இருந்தது. 4545.பிறகு, நீங்கள் அறிகிற முதலாவது காரியம் என்னவெ னில், அவர் நடந்து வருவதாக அவர்கள் வந்து கூறினார்கள். அவளால் அவரை நெருங்க முடியவில்லை. எனவே அவள் தன்னுடைய கரங்களையும் முழங்கால்களையும் ஊன்றி, அவள் அங்கு அடைவது வரையில், இவ்விதமாக அவர்களுடைய கால்களுக்கிடையே ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அவள் அந்த (வஸ் திரத்தின்) ஓரத்தைத் தொடுவதை யவீரு ஒருவேளை அங்கே நின்று கவனித்துக் கொண்டிருக்கலாம். கொஞ்சம் மகிழ்ச்சியான பார்வை அவளுடைய முகத்தில் வருகிறது. அவள் அங்கே பின்னால் சென்றாள். யவீரு நின்று அதைக் கவனித்துக் கொண்டிருந்தான், உங்க ளுக்குத் தெரியும்: கவனித்துக் கொண்டிருந்தல். 'நான் அவளைப் பார்த்திருக்கிறேன், மேலும் அவளை எனக்குத் தெரியும். அவள் அங்கே அதனூடாகச் சென்று அவருடைய வஸ்தி ரத்தைத் தொட்டாள். இப்பொழுது, அவள் அங்கே பின்னால் போய் விட்டாள். அவள் மகிழ்ச்சியாயிருப்பது போன்று காணப்படு கிறாள். அவள் அதைப் போன்று காணப்படுகிறாள்... அவளால் அவரை மாத்திரம் தொடக்கூடுமானால், அது சம்பவிக்கும் என்று அவள் ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறாள்: அவள் சுகமடைந் திருக்கிறாள். நீண்ட காலத்திற்கு முன்பே மருத்துவர்கள் அவளைக் கைவிட்டு விட்டனர் என்பதை நான் அறிவேன். அவ ளுக்கு ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு தொடங்கியது முதற் கொண்டே, அவளுக்கு உதிர ஊறல் இருந்தது, அவள் ஆண் டாண்டு காலமாக அதைக் கொண்டிருந்தாள். எனவே, அந்த பரிதாபமான ஸ்திரீக்காக நான் வருந்தினேன். அவளுடைய புருஷன் குதிரைகளையும் எல்லாவற்றையும் விற்று, மருத்துவக் கட்டணத்தைச் செலுத்தினான், அவள் எப்பொழுதும் விட மோச மான நிலையில் இருந்தாள். அவள்... அந்த பரிதாபமான ஸ்திரீக்காக நான் வருந்துகிறேன்' என்றான். இயேசு நின்று சுற்றுமுற்றும் பார்த்து, '(சகோதரன் பிரன்ஹாம் தம்முடைய தொண்டையைச் சரிசெய்வது போன்ற ஒரு சத்தத்தை எழுப்புகிறார் - ஆசிரியர்.) என்னைத் தொட்டது யார்?' என்றார். அவன், 'ஏன்' என்றான், அப்போஸ்தலர்கள், 'என், எல்லா ரும் உம்மைத் தொடுகின்றனரே. ஏன்? ரபி, நீர் அதைப்போன்ற அப்படிப்பட்ட காரியத்தை ஏன் கூறுகிறீர்?' என்றனர். அல்லது - அல்லது 'ஆண்டவரே?' அவள்... அவர், 'ஆனால் நான் - நான் பலவீனமடைந்திருக்கிறேன். ஏதோவொன்று என்னை விட்டுப் புறப்பட்டுப் போனதை நான் - நான் உணர்ந்தேன், ஒரு வல்லமை என்னை விட்டுப் புறப்பட்டதை உணர்ந்தேன்' என்றார். அவர் சுற்றுமுற்றும் நோக்கி அந்த ஸ்திரீ யைப் பார்த்து, அவளுடைய உதிர ஊறல் நின்று போயிற்று என்று அவளிடம் கூறினார். அது வயதான யவீருவிற்கு உற்சாகத்தைக் கொடுப்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன், நீங்கள் அவ்வாறு எண்ணவில் லையா? அவன் உடனே இங்கே சீக்கிரமாக ஓடி வந்து, 'ஆண்ட வரே, என்னுடைய சிறு மகள் இப்பொழுது மரண அவஸ்தைப் படுகிறாள். ஆண்டவரே...?... போதகரே' என்றான். ஓ, ஆம், அவர் சரியாகத்தான் இருக்கிறார். இப்பொழுது அவர் வெறிபடித்தவர் அல்ல. ஓ, இல்லை, உ-ஊ. அவனுக்கு அவரைக் குறித்த தேவையிருந்தது. 4646.நீங்கள் விரும்புகிற எதுவாகவும் நீங்கள் இதை அழைக்க லாம், ஆனால் இந்த நாட்களில் ஒன்றில் நீங்கள் படுக்கையில் விழும்போது, அது வித்தியாசமாக இருக்கும். அது சரியே. அந்த நேரத்தில் அது பித்துபிடித்த ஜனங்களாகிய ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்களாக இருக்காது. அது சரியே. 'ஓ, ரபி, போதகரே, என் ஆண்டவரே, என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், நீர் சற்று வந்து, அவள் மேல் கைகளை வைத்தால், அவள் - அவள் சுகமடைவாள். யாவும் சரியாகி விடும். மருத்துவர் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் அங்கிருந்து போயிருக்கிறார். ரபி, நான் - நான் - நான் - நான் யாவற்றையும் விட்டு விட்டேன். நான் - நான், அவர்கள் சபையையும் யாவற்றையும் விட்டு என்னை உதைத்து வெளியே தள்ளப் போகின்றனர். ஆனால் நான் - நான் - நான் எப்போதுமே உம்முடைய விசுவாசியாக இருந்திருக்கிறேன். ஆனால் நான் அதை அறிக்கை செய்ய வேண்டிய அளவுக்கு ஏதோவொன்றைக் கற்றுக்கொண்டேன் என்று நான் உம்மிடம் கூறுகிறேன். எனவே நான் இங்கேயிருக்கிறேன். என்னுடைய மகள் மரிக்கப் போகி றாள். நீர் சற்று வந்து அவள் மேல் கரங்களை வைத்தால், அவள் மரிக்க மாட்டாள். அவள் பிழைத்துக் கொள்வாள்.' இயேசு, 'நான் வருகிறேன். ஆம், நான் உன்னோடு வருகி றேன்' என்றார். 4747.அவர் அவ்விதமாக அவனுடன் (போகத்) தொடங்கினார். ஆசாரியன், 'என்னவென்று கேட்டீர்களா, அது யாரென்று கேட் டீர்களா? நல்லது, அது டாக்டர். யவீரு தான். என்னே, அவரை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதைக் குறித்து என்ன... சபையார் அவனை உதைத்து வெளியே தள்ள மாட்டார்களா? ஓ, இப்பொழுது அவனிடம் அது உள்ளது. சகோ தரனே, அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் நிச்ச யமாக அவன் மேல் பிரச்சனையைக் கொண்டு வருவார்கள். சகோதரர்களே, நாமெல்லாரும் மேலே சென்று, பிரதான ஆசாரியன் என்ன சொல்லப் போகிறான் என்றும் அவர்கள் என்ன செய்யப் போகின்றனர் என்றும் அவர்கள் எவ்வாறு அவனை சபையை விட்டுத் தள்ளி வைக்கப் போகிறார்கள் என்றும் காண் போம்' என்று கூறுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. யவீரு கவலைப்படவேயில்லை. அவனுடைய மகள் மரித்துக் கொண்டிருந்தாள். அவன் - அவன் இயேசுவின் மேல் கவ னத்தை வைத்திருந்தான்; அவன் கவலைப்பட்டதெல்லாம் அதைக் குறித்து தான். நீங்கள் அவர் மேல் கவனம் செலுத்தும் காலம் வரை, என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது, வேறெதுவும் எந்த வித்தியாசத்தை ஏற்படுத்தும்? அவன் அவ்விதமாக நடந்து போய்க் கொண்டிருந்தான், மேலும், அவன் போகையில், நகர்ந்து போய்க்கொண்டிருந்தான், உங்களுக்குத் தெரியும். அந்த சிறு பெண் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள், ஏனெனில் அவளுடைய உதிரப் போக்கு நின்றிருந்தது. 4848.அதன் பிறகு, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவெனில், இங்கே ஒரு மனிதன் மலையின் மேல் வருகி றான், அவன் உரத்த சத்தத்தோடு, 'அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். அதைக் குறித்து அக்கறை கொள்ள வேண்டாம்' என்றான். பிறகு நள்ளிரவு காற்று அடித்து, இடி விழுகிறது (ஓ, என்னே.) 'சொல் யவீரு, அங்கே போக வேண்டாமென்று நான் உன்னிடம் கூறினேனே. பார்? இங்கே மதகுருவும் அவர்கள் அனைவரும் வருகிறார்கள். உன்னுடைய மகள் ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்கு முன்பே மரித்து விட்டாள். 'அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டன' என்று நான் உன்னிடம் சொன்னேனே' என்றான். ஓ, என்னே. அந்த நள்ளிரவு நேர காற்று வீசுகிறது, உங்க ளுக்குத் தெரியும்... அவனுடைய இருதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. அவன், 'ஓ, ஓ, ஓ. அவர் வந்து என்னுடைய கரத்தை - அவருடைய கரங்களை... வைத்தால் என்று நான் அவரிடம் கூறினேன்' என்று நினைத்தான். இப்பொழுது, அவன் இயேசுவின் கரங்களில் விசுவாசம் வைத்திருந்தான். அது... அவன் ஒரு யூதன். இப்பொழுது, அது வித்தியாசமாக இருந்தது, பேதுரு - அவர் (இயேசு) அந்த இரவு நேரத்தில் தண்ணீரின் மேல் நடந்து கொண்டிருந்த போது, இயேசு நடந்து வருவதை அவன் கண்ட போது, அது ஒரு ஆவே சம் என்று நினைத்தான். அவன், 'ஆண்டவரே, அது நீரேயா னால், நான் வரக்கட்டளையிடும்' என்றான். வார்த்தையானது, 'வா' என்பதாக இருந்தது. அது சரியே. அது சரியே. அவன் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாளில், இராமுழுவதும் வலை போட்டும் ஒரு மீனும் அகப்படவில்லை. அவர் அவனிடம், 'சீமோனே, பிரசங்கம் செய்வதற்காக உன்னுடைய படகை ஒரு நிமிடம் நான் கடன் வாங்கலாமா?' என்று கேட்டார். 'ஆம்.' நல்லது, அவர் சிறிது நேரம் அதிலிருந்து கொண்டு பிரசங்கம் பண்ணினார். 'இப்பொழுது, ஆழத்திலே தள்ளிக்கொண்டு போய் மீன்பிடிக் கும்படி (வலைகளைப்) போடுங்கள்' என்றார். பாருங்கள்? அவன், 'ஆண்டவரே, நீர் உம்முடைய கரங்களைத் தண்ணீ ரின் மேல் வைப்பீரானால், உம்மால் மீனை அங்கே வைக்க முடியும் என்று நான் - நான் - நான் விசுவாசிக்கிறேன். இரா முழுவதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை' என்றான். 'இல்லை, இல்லை.' 'ஆண்டவரே, இராமுழுவதும் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப் படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலை யைப் போடுகிறேன்.' அது தான் அது. 'உம்முடைய வார்த்தை யின்படியே நான் வலையைப் போடுகிறேன்.' 4949.(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... 'ஸீலோவாம் குளத்தில் போய் கழுவு.' இப்பொழுது, அவனுடைய விசுவாசம் எதனோடு தொடர்பு கொண்டது? அவன் குளத்தைக் கண்டு பிடித்த உடனே. பாருங்கள்? அவனால் கூடுமானால்... 'நல்லது, அனுப்பப்பட்டவன் ('ஸீலோவாம்' என்பதற்கு 'அனுப்பப்பட்டவன்' என்று அர்த்தம் - மொழிபெயர்ப்பாளர்.) என்ற குளத்திற்கு போகும் வழி எது? அது எந்த வழி? அந்தக் குளத்தை அடைய யாராவது எனக்கு உதவி செய்யுங்கள்.' 'ஓ, நீ அந்தக் குளத்தில் என்ன செய்ய விரும்புகிறாய்?' 'அது எந்த வித்தியாசத்தையும் எற்படுத்தாது, அந்தக் குழத்தை அடைய எனக்கு உதவி செய்யுங்கள், ஏனெனில் நான் அந்தக் குளத்தில் போய் சேரும் போது, அறிந்து கொள்வேன்.' 'யாரோ ஒருவர் அந்தக் கூட்டத்திற்குப் போக எனக்கு உதவி செய்கிறார்.' 'நல்லது, நீ எங்கே போகிறாய்...' நான் எதைக் குறிப்பிடு கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். 'உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாதா... நீ அந்தக் கூட்டத்தினரிடம் போக மாட்டாய், அப்படித்தானே?' 'நல்லது, அங்கே போக எனக்கு உதவி செய்யுங்கள். நான் அறிய விரும்புவது அவ்வளவுதான். என்னை அங்கே கொண்டு போங்கள்.' ஆமென். நான் அதை விரும்புகிறேன். ஆம், ஐயா. வேதாகமத்தின்படியாக ஜீவிக்கிறவர்களை நான் காணக் கூடிய இடத்திலும், கிறிஸ்து ஜனங்களில் ஜீவித்துக் கொண்டிருப்பதை நான் காணக்கூடிய இடத்திலுமுள்ள அந்த ஒரு கூட்டம் ஜனங்களிடம் என்னை அழைத்துக் கொண்டு செல்லுங்கள். அந்த ஜனங்கள் மத்தியில் என்னை அழைத்துச் செல்லுங்கள். அனுப்பப்பட்டவன் என்கிற குளத்திற்கு செல்ல எனக்கு உதவி செய்யுங்கள்.' 5050.அவர்கள், 'நல்லது, நீ இங்கே இருக்கிறாய்...' என்று சொன்ன உடனே. ஏதோவொரு தயவுள்ள சீமாட்டி அல்லது வேறு யாரோ ஒருவர் அருகில் வந்து, அவளுடைய - அவளுடைய - அவளு டைய கரத்தில் அவனைப் பிடித்து, குளத்தண்டை அவனை அழைத்துச் சென்று, 'வயதான மனிதனே, இதுதான் அந்தக் குளம், ஏன் இக்குளத்திற்கு வந்தாய்' என்றாள். 'ஓ, நான் கழுவினால், நான் காண்பேன் என்று என்னிடம் கூறின தேவனுடைய வார்த்தையை நான் கொண்டுள்ளேன்.' ஓ, என்னே. ஓ, அவனுடைய பார்வை அவனுக்குக் கிடைத்தது. அப் போது அவன் களிகூர்ந்தபடியே திரும்பி வந்தான். அது அவனுக்கான குளமாக இருந்தது. ஆனால் மரியாள் அந்தக் காலை வேளையில், கிணற்றில் கொஞ்சம் தண்ணீர் எடுப்பதற்காக போக வேண்டியிருந்தது. அங்கே ஒரு பெரிய பிரகாசமான வெளிச்சம் நின்றுகொண்டிருந் ததை அவள் அங்கே நின்றவாறு நோக்கிப் பார்த்தாள். அவள் அந்த வெளிச்சத்தைக் கவனித்துப் பார்த்தாள். அதில் காபிரியேல் என்று சொல்லப்பட்ட தூதன் மறைந்திருந்தான். அவன், 'பரிசுத்த ஆவியானவர் உன் மேல் நிழலிடப் போகிறார், எந்த மனிதனையும் அறியாமலேயே நீ ஒரு குமாரனைப் பெறுவாய்' என்றான். அவள், 'இதோ நான் ஆண்டவருக்கு அடிமை. உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது' என்றாள். அவள் விரும் பியது அவ்வளவுதான். அவள்... அவள், 'பொறுத்திரும், இப்பொழுது நான் நிழலிடப்படும்போது, நான் ஜீவனை உணர்ந்தால், அப்போது நான் சென்று சாட்சி கொடுப்பேன். எனக்கு ஏறக் குறைய நான்கு மாதங்கள் இருக்கும் போது, அப்போது அதெல்லாம் சரியாக இருக்குமா? அல்லது நான் அதைக் குறித்து எப்போது சாட்சி கூற வேண்டும்?' என்று கூறவில்லை. அவள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவள் அவருடைய வார்த்தையைக் கொண்டிருந்தாள், அது அவளுக்கு நன்கு போது மானதாக இருந்தது. அவள் சரியாக அப்பொழுதே சாட்சி கூறத் தொடங்கினாள். 5151.நான் உங்களுக்கு அவருடைய வார்த்தையை கொடுத் துக் கொண்டிருக்கிறேன். 'அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்.' ஆமென். பரிசுத்த ஆவியைப் பெற்றிராத உங்களுக்கு நான் அவரு டைய வார்த்தையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். குற்றம் கண்டுபிடிப்பவர்கள் சூழ்ந்து நிற்கையில், பேதுரு பெந்தெ கோஸ்தே நாளில், 'நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ் நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங் கள் பிள்ளைகளுக்கும் உண்டாயிருக்கிறது' என்றான். 'நல்லது, 'அந்த நாட்கள் கடந்து விட்டன' என்று பிஷப்பும், மதகுருவும், மாவட்ட மனிதனும், மேய்ப்பரும் என்னிடம் கூறி னார்கள்.' அவர்கள் என்ன கூறினார்கள் என்பதைக் குறித்து எனக்குக் கவலையில்லை; வேதாகமம், 'வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கிற யாவருக்கும் உண்டாயிருக்கிறது' என்று கூறுகிறது. அது அவருடைய வார்த்தையாகும்; அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பினார். அது தான் அதை எடுத்துக் கொள்ளுகிறது, அவருடைய வார்த்தை. ஆனால் யவீரு அவருடைய கரங்களை விரும்பினான். தேவன் ஒரு நல்ல தேவன் என்று நான் நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். அவர் - அவர் ஏதோவொரு வழியில் அதை உள்ளே கொண்டு வர பொறுப்பெடுத்துக் கொள்ளுகிறார். அநேக சீஷர்கள் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார் என்ற வார்த்தையைக் கேட்ட உடனே, 'தேவனுக்கு துதிகள், அது அருமையானது' என்று சொல்லி, விசுவாசித்தனர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் தோமா, 'அவருடைய கைகளில் ஆணிகளினா லுண்டான அந்தக் காயத்திலே என் விரல்களை இட வேண்டும். நான் - நான் அதை உணர வேண்டும். நான் - நான் நானே அதைப் பார்க்க வேண்டும். கூட்டங்களில் மற்றவர்கள் மேல் அது கிரியை செய்வதை நான் கண்டிருக்கிறேன், ஆனால் அது என் மேலும் கிரியை செய்ய வேண்டும்' என்றான். ஓ, தோமாவுக்கு அநேக பிள்ளைகள் இருக்கிறார்கள், ஆனால் அவன்... ஆனால் தேவன் ஒரு நல்ல தேவனாயிருக்கிறார். அவர் - அவர் எப்படியாயினும் எல்லா பக்கங்களிலும் கிரியை செய்கிறார். அவர், 'தோமாவே, இங்கே வா. என்மேல் கரத்தை வை' என்றார். இப்பொழுது, அது உன் மேலும் கிரியை செய்கிறது. 'தோமாவே, நீ அதை விசுவாசிக்கிறாயா?' என்றார். 'ஓ, ஆம், இப்பொழுது நீர் என்னுடைய ஆண்டவராயிருக் கிறீர். இப்பொழுது நான் அதை விசுவாசிக்கிறேன்' என்றான். அவர், 'காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்களுக்கு வரும் பலன் எவ்வளவு அதிகமாயிருக்கிறது!' என்றார். ஆமென். அவர்கள் தேவனுடைய வார்த்தையை அதற்காக எடுத்துக் கொள்கின் றனர். அவ்வளவு தான். ஆமென். 5252.பையனே. நான் சற்று என்னுடைய பாடத்திற்கு வருகி றேன். அது எங்கேயிருந்தது? நாம் அதைப் பார்ப்போம். ஓ, ஆமாம். ஆம், ஐயா. அப்படியானால் நல்லது, நாம் அவனிலிருந்து தொடங்கு வோம். இங்கே அவன் திரும்பிப் போகிறான், எல்லா குற்றம் கண்டுபிடிப்பவர்களும் வெளியே வந்து, உங்களுக்குத் தெரியும், அவர்கள், 'அங்கே அவன் உடன்சேர்ந்து போகிறான்' என்றனர். எனவே முதலாவது காரியமாக, செய்தி கொண்டு வரும் வேலையாள் வந்த போது, அவன், 'நல்லது, இனிமேல் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்' என்றான். 'அவன் - அவன்... பிள்ளை மரித்து விட்டது; அது மரித்துப் போய் விட்டது. நாங்கள் அதை வெளியில் கிடத்தி, அதன் மேல் மலர்களைப் போட்டு வைத்து, நறுமண தைலமிடப்பட்ட ஆடைகளை உடுத்தி, அதன் மேல் திரவப்பொருளை வைத்துள்ளோம். இனி முட்டாளாக் கிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, பிள்ளை மரித்து விட் டது. மருத்துவர் திரும்பி வந்தார்; நாங்கள் போய் அவரை அழைத்து வந்தோம், அது மரித்து விட்டது என்று அவர் அறி வித்துள்ளார். மரித்துப் போனவளாய் படுத்திருக்கிற அவளுடைய சரீரத்தை அவர் பெற்றுக்கொண்டார். அது குளிர்ந்து போனதாய், அறையில் மரித்தவர்களை வைக்கும் படுக்கையில் கிடத்தப்பட்டி ருக்கிறது. துக்கம் அனுசரித்து புலம்புகிற எல்லாரும் சூழ்ந்து இருக்கின்றனர், அங்கே சுற்றிலும் ஒப்பாரி வைத்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். நீர் அதைப் போன்ற ஒன்றை ஒருபோதும் கேட்டிருக்கவே மாட்டீர். எனவே...' என்றான். 5353.இயேசு அசையாமல் நடந்து கொண்டிருந்தார் (ஓ, நான் அதை நேசிக்கிறேன். சகோதரர்களே, உங்களால் அவரைக் காண முடியவில்லையா?) அது அவரை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை... யவீருடைய இருதயம் அடித்துக் கொண்டிருந்தது...?... நோக்கிப் பார்த்தான். இயேசு தம்முடைய கண்களைத் திருப்பி, 'நான் உனக்குச் சொல்லவில்லையா, 'விசுவாசமுள்ளவனாயிரு (Only believe)'' என்று கூறுவதை என்னால் காண முடிகிறது. ஓ, அதைத்தான் நான் உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் தேவனுடைய மகிமையைக் காண விரும்பினால், தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். வேறு யார் என்ன சொன்னாலும் காரியமில்லை, நீங்கள் எவ்வளவு வியாதி யாயிருக்கிறீர்கள் என்பதும் காரியமில்லை, விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். 'ஆனால், சகோதரன் பிரன்ஹாமே, நான் ஒரு சில நாட்களில் மரிக்கப் போவதாக மருத்துவர் சொன்னார்.' விசுவா சிக்க மாததிரம் செய். அவர், 'என்னுடைய பிள்ளை சுகமாக முடியாது' என்றார். ஆனால் விசுவாசிக்க மாத்திரம் செய். அவ்வளவு தான். தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்று விசுவாசிக்க மாத்திரம்செய். 5454.'சகோதரன் பிரன்ஹாமே, நான் மீண்டும் ஒருபோதும் நடக்க மாட்டேன் என்று மருத்துவர் என்னிடம் கூறினார்.' விசுவாசிக்க மாத்திரம் செய், விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். விசுவாசிக்க மாத்திரம் செய். விசுவாசிக்க மாத்திரம் செய். நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். அப்படியே விசுவாசியுங்கள். அதைக்குறித்து காரியமில்லை, அப்படியானால் அது என்னவாக இருந்தது? ஏற்கனவே மரித்து விட்டது, இப்பொழுது என்ன? விசுவாசிக்க வேண்டியது மாத்திரமே. ம்ம்! நான் இப்பொழுது பக்திபரவசப்படுகிறேன்; உண்மையா கவே நான் பக்திபரவசப்படுகிறேன். ஓ, என்னே. 'விசுவாசிக்க மாத்திரம் செய்.' 'மரித்து விட்டதா?' 'ஆம்.' ஓ, அவர் லாசருவுடைய கல்லறையண்டை வந்த சமயத்தை நான் நினைவுகூருகிறேன். 'நீர் இங்கேயிருந்தீரானால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான். ஆனால் இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார்.' அதுதான் அது. 'நான் உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாம லும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா?' என்று தேவன் கூறினார். அவள், 'ஆம், ஆண்டவரே' என்றாள். ஓ, நான் அதை விரும்புகிறேன். 'ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவ ரான கிறிஸ்து என்று விசுவாசிக்கிறேன். நீர் அபிஷேகம் பண் ணப்பட்டவர். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்.' 'அவனை எங்கே அடக்கம் பண்ணினீர்கள்?' ...?... 5555.அவர், 'நான் போய் அதைக் குறித்து என்ன செய்யக் கூடும் என்று பார்ப்பேன்' என்று கூறவில்லை. ஓ, இல்லை, ஓ, இல்லை. 'அவனை எங்கே அடக்கம் பண்ணினீர்கள்?' அவர், 'யவீரு, நல்லது, யவீரு, இந்தப்பிரச்சனைக்கு நான் காரணமானதற்காக வருந்துகிறேன். இப்பொழுது, உன்னுடைய சபை உன்னை புறம்பே தள்ளிவிட்டது, நீ உன்னுடைய சகோதரர்களுடன் தொல்லையில் அகப்பட்டிருக்கிறாய் மற்றும் அதைக் குறித்த எல்லாமும் உள்ளது. நான் - நான் அதை அறிவேன். மற்றும் ஒவ்வொன்றும் உள்ளது. யவீரு, நான் உண்மையாகவே உனக்காக வருந்துகிறேன், ஆனால், நான் கொஞ்சம் சீக்கிரமாக அங்கு சென்றடைந்திருந்தால், ஏன், அது சரியாக இருந்திருக் கலாம்; அனால், யவீரு, இந்தப் பிரச்சனைக்குக் காரணமான தற்காக நான் - நான் - நான் வருந்துகிறேன்' என்று கூற வில்லை. ஓ, இல்லை. ஓ, இல்லை. அவர், ''நீ தேவனுடைய மகிமையைக் காண விரும்பினால், விசுவாசிக்க மாத்திரம் செய்' என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?' என்று கேட்டார். ஓ, அது அவனுடைய இருதயத்திலிருந்த துயரை நீக்கினது என்று எண்ணுகிறேன், இல்லையா? அவனுடைய சிறு இருதயமானது துடிப்புகளை நிறுத்திக்கொண்டு, மீண்டும் சாதாரணமாக துடிக்கத் தொடங்கியதை நான் எண்ணிப் பார்க்கிறேன். அப்போது அவனுடைய கண்கள் மதகுருவை விட்டும், பிர தான ஆசாரியனை விட்டும், மற்ற சபையாரை விட்டும் அப்பால் சென்றது. சுற்றிலும் நடந்து வந்து, 'பையனே, அடுத்த ஆலே ôசனைக் கூட்டத்தில், நீ என்ன செய்யப் போகிறாய்? நீ என்ன செய்யப் போகிறாய்?' என்று கேட்கின்றனர். ஆனால் அவன் தன்னுடைய கண்களை இயேசுவின் மேல் பதித்திருந்தான். ஆமென். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுடைய கண்களை இயேசுவின் மேல் வையுங்கள். வேறு யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. 'அண்டை வீட்டுக்காரர் என்ன சொல்லப் போகிறார்?' அண்டை வீட்டுக்காரர் என்ன கூறுகிறார் என்பதில் எனக்கு அக்கறையில்லை. அதனுடன் செய்வதற்கு எதுவுமில்லை; அது தேவன் என்ன கூறினார் என்பதாக உள்ளது. அண்டைவீட்டுக் காரர் என்னுடைய நியாயாதிபதி அல்ல. தேவனே என்னுடைய நியாயாதிபதி. நான் பின்பற்றிக் கொண்டிருக்கிற இயேசு கிறிஸ்து வைக் கொண்டு அவர் என்னை நியாயந்தீர்ப்பார். ஆமென். வேறு யார் என்ன கூறுகிறார் என்பதில் காரியமில்லை, அது தேவன் என்ன கூறினார் என்பதாக உள்ளது, அதுதான் அதை உண்மையாகச் செய்கிறது. ஆமென். தேவன் அதைச் சொன்னார்; அது அதை சத்தியமாகச் செய்கிறது. குற்றம் கண்டுபிடிப்பவர்கள் தாங்கள் விரும்பும் எதையும் கூறலாம், ஆனால் அதை உண்மையாக செய்யும்படியாக, அது - அது தேவன் கூறுவதையே எடுத்துக்கொள்கிறது. சரி. 5656.இயேசு, 'விசுவாசிக்க மாத்திரம் செய்' என்றார். எதை விசுவாசிப்பது? இப்பொழுது, எதை விசுவாசிப்பது? அவள் மரித்து விட்டாள். சாத்தியமற்ற காரியங்களுக்காக விசுவாசியுங்கள். ஆம். நடக்க முடியாத காரியங்களுக்காக விசுவாசியுங்கள். 'ஏன், அவள் மரித்து, தைலமிடப்பட்ட பிறகு, இப்பொழுது விசுவாசிக்க வேண்டுமா?' 'நிச்சயமாக, நீ தேவனுடைய மகிமையைக் காண விரும்பி னால், வெறுமனே விசுவாசி என்று நான் உனக்குக் கூறினேன்.' 'எதை விசுவாசிக்க?' 'எதையும் விசுவாசி, என்னவாயிருந்தாலும்...' 'நீங்கள் இந்த மலையைப் பார்த்து, 'நீ பெயர்ந்து போ' என்று உன்னுடைய இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசிக்க மாத்திரம் செய்தால், நீங்கள் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.' அது சரியே. 'என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப் பான். நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத் திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு அருளப்படும்' அது சரியா? இந்த எல்லா வாக்குத்தத்தங்களும்... 'நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால், நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இதைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வீர்கள்.' இங்கேயுள்ள இந்த எல்லா வாக்குத்தத்தங்களும்... 'இயேசு கிறிஸ்து நேற்றும் இன் றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நம்முடைய மீறுதல்களினி மித்தம் அவர் காயப்பட்டு (நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார்), நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக் கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.' 5757.விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். விசுவாசிக்க மாத் திரம் செய்யுங்கள். அவர் சீக்கிரமாக வருகிறார். அவர் ஆபிரகாமை நீதிமானாக்கி, பரிசுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியினால் அவனை நிறைத்து, ஒரு குமாரனாக அவனை ஸ்தானத்தில் வைத்து, தம்முடைய பின்பாகத்தைத் திருப்பி தாம் உயிரோடிருக் கிறார் என்பதைக் காண்பித்து, சாராள் கூடாரத்தில் பேசினதைக் கூறினார். அதன் பிறகு, அவனுடைய சரீரத்தை மாற்றி, அவனை வெளியே அழைத்துச் சென்று, அவனுக்கு ஒரு குமாரனை அருளினார். அவர் ஆபிரகாமின் சந்ததியின் வழியாகவும் அதே காரியத் தைச் செய்தார், சரீர மாறுதலைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தார். நீதிமானாக்கி, பரிசுத்தப்படுத்தி, பரிசுத்த ஆவியால் நிறைத்து, ஒரு குமாரனாக ஸ்தானத்தில் பொருத்தி, இப்பொழுது நம் மத்தியில் வந்து, தாம் உயிரோடிருப்பதைக் காண்பிக்கிறார். மேலும் சரீர மாறுதலுக்காகவும், வரப்போகிற எடுத்துக்கொள்ளப் படுதலுக்காவும் (the rapture), நாம் அவரை சந்திக்கும்படியாக மேலே எடுத்துக் கொள்ளப்படுவதற்காகவும் காத்திருக்கிறோம். இங்கே அது இருக்கிறது. சரியான வேளையில் இருக்கிறோம். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அப்படியே தொடர்ந்து அணிவகுத்துச் செல்லுங்கள். தேவனுடைய மகத்தான பெரிய காலக் கடிகாரமானது அப்படியே மிகச்சரியாக 'டிக்' 'டிக்' என்று ஒலியெழுப்பி ஓடிக்கொண்டிருக்கிறது (ticking). ஓ, விசுவாசிக்கமாத்திரம் செய்வது... நிச்சயமாக. அதன்பிறகு, கடைசியாக இயேசு வீட்டை அடைந்தார். அங்கிருந்த யாவரும், 'ஓ, கர்த்தாவே, ஓ, கர்த்தாவே, நீர் ஏன் இதைச் செய்தீர்? நீர் ஏன் இதைச் செய்தீர்?' என்று உரக்க கத்திக் கொண்டிருந்தனர். இயேசு அமைதியாகவும், சந்தடியில்லாமலும் உள்ளே நடந்து வந்து, 'அமைதியாயிருங்கள். சத்தமிடாதீர்கள். சிறு பெண் மரிக்கவில்லை. அவள் நித்திரையாக மாத்திரமே இருக்கிறாள்' என்றார். அப்போது, 'அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்' என்று வேதாகமம் கூறுகிறது. அவன், 'இப்பொழுது, அவர் எந்தவிதமான ஒரு தீர்க்கதரிசி என்று உங்களுக்குத் தெரியும். அவளுடைய மரித்த சரீரம் தைலமிட்டு நம்மிடம் இருக்கும் போது, அவர், 'அவள் நித்திரையா யிருக்கிறாள்' என்று கூறுகிறாரே' என்றான். 5858.உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? மேலும் வேதா கமம், 'அவரை ஏளனம் செய்யும்படி அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்' என்று கூறுகிறது, வெட்கப்படுத்துதல் - அவ ருக்கு அவமதிப்பு உண்டாக்கும்படி அவரைப்பார்த்து நகைத்தார் கள். அவர்கள் அவருடைய வார்த்தையை நகைத்த போது, அவர் என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் அவர் களை வெளியே தள்ளினார். நாம் சரியாக அதே விதமாகவே முடிவிலும் செய்வோம். குற்றம் கண்டுபிடிப்பவர்களே, இந்நாட்க ளில் ஒன்றில் உங்களுக்கும் அதுதான் சம்பவிக்கும். நீங்கள் அவருடைய வார்த்தையைக் குறித்து நகைக்கிறீர்கள், அவருடைய கிரியைகளைக் குறித்தும் நகைக்கிறீர்கள். நீங்கள், 'அந்நிய பாஷையில் பேசி ஆவியில் நடனமாடும் அந்த ஜனங்கள் பரிசுத்த உருளையர்கள்' என்று கூறுகிறீர்கள். 'அவர்கள் ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்கள்' என்று கூறுகி றீர்கள். நீங்கள் அவருடைய வார்த்தையைப் பார்த்து நகைக்கி றீர்கள், ஏனெனில் அந்த வார்த்தையானது மாமிசமாகி இங்கே நம் மத்தியில் வாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார். அங்கே வெளியிலுள்ள போதகர்களாகிய உங்களில் சிலர் இது மனோதத்துவ முறையினால் மற்றவரின் சிந்தனைகளை அறிந்து கொள்ளுதல் என்றோ அல்லது பிசாசு என்றோ அல்லது அவ்விதமான ஏதோவொன்று என்று கூறுகிறீர்கள். ஏதோவொரு நாளில் நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் அதைக் கூறியது தவறு என ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும். அவர் அதற்காக உங்களை அவருடைய இராஜ்ஜியத்தை விட்டு புறம்பே தள்ளுவார். அது சரியே. ஜனங்கள் அவரைப்ப பார்த்து நகைக்கும்படி அவர் அனுமதிக்க மாட்டார்; அவர் மீண்டும் அவர்களை வெளியே தள்ளுவார். அவர் வீட்டினுள் சென்று, அந்த முழு கூட்டத்தையும் வேளியே தள்ளினார். நகைத்த யாவரும் வெளியே போயினர். 5959.வேதாகமம், 'நீங்கள் ஒன்றைப் பேசினால்...' என்று கூறுகிறது. இயேசு அந்நாளில் அங்கே நின்று கொண்டு, ஆவி களைப் பகுத்தறிந்து கொண்டிருந்த போது, அந்த ஆசாரியர் களின் கூட்டம், 'ஏன், அது பெயல்செபூல், குறிசொல்பவன்' என்று கூறினர். ஒரு குறிசொல்பவன் பிசாசாயிருக்கிறான் என்று எவரும் அறிவர். எனவே, அவன், 'அது பெயல்செபூல், குறிசொல்பவன்' என்றான், தேவனுடைய கிரியையை ஒரு அசுத்த ஆவியென்று அழைத்து, தொடர்ந்து குற்றம்கூறிக்கொண்டிருந்தனர். இயேசு, 'நான் அதற்காக உங்களை மன்னிக்கிறேன், ஆனால் ஒரு நாளில் பரிசுத்த ஆவியானவர் வருவார்; அப்போது அதற்கு விரோதமாக நீங்கள் ஒரு வார்த்தை பேசினால், நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவு தான். நீங்கள் இம்மையிலோ மறுமையிலோ ஒருபோதும் மன்னிக்கப்படவே மாட்டீர்கள், மேலும் நீங்கள் வெளியே தள்ளப்படுவீர்கள்' என்றார். அது எவ்வளவு ஆபத்தானதாக உள்ளது. பாருங்கள்? ஆம், ஐயா. பரிசுத்த ஆவியை தூஷித்தாலோ, அல்லது அது ஒரு அசுத்த ஆவியின் காரியம் என்று பேசினாலோ அல்லது அழைத்தாலோ அது இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் மன்னிக்கப்படாது. அவர் அவர்களை புறம்பே தள்ளுவார். இன்று என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்று பாருங்கள்? அதே காரியம் சம்பவித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் எங்கே போய் விடுகிறார்கள் என்று பாருங்கள், ஆவிக்குரிய பிரகாரமாக உலகத்திற்குள் போய்விடுகி றார்கள். எகிப்தைத் தாக்கிய கடைசி வாதை உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? எகிப்தை தாக்கிய கடைசி வாதை எதுவோ, அது புறம்பே தள்ளப்படும் சபைக்கு முன்னடையாளமாக இருந்ததா? கடைசி வாதை மரணமாக இருந்தது. பெந்தெகோஸ்தே சபை யைத் தாக்குகிற கடைசி வாதை எது? ஆவிக்குரிய மரணம். அது மற்ற உலகத்தாரைப் போன்று சரியாக பின்னால் போய்க் கொண்டிருக்கிறது: ஆவிக்குரிய மரணம். ஆனால் இரத்தமானது கதவில் பூசப்பட்ட விருத்தசேதனம் செய்யப்பட்டவர்கள், அவர் களை வழிநடத்த அக்கினிஸ்தம்பம் அவர்கள் முன்னே செல்ல, (தங்கள்) சொந்த தேசத்திற்கு அணிவகுத்துச் சென்றனர் (அது மிகவும் சரியே.) 6060.ஓ, நான் இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இருதயத்தில் விருத்தசேதனம் செய்யப்பட்டதை அறிவதற்காக நான் இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், தேவன் உலகம் எல்லாவற்றையும், மனிதர்களுடைய எல்லா பாரம்பரியங்களையும், மற்ற எல்லாவற்றையும் வெட்டி அகற்றிவிட்டார், நம்மால் இயேசு வைக் காண முடியும், அக்கினிஸ்தம்பத்தில் நின்றுகொண்டிருக் கிற அவரைக் காண முடியும், முன்னே சென்று கிரியைகளைச் செய்து, தேவன் தாம் செய்யப்போவதாக சொல்லியவற்றைய மிகச் சரியாக செய்து கொண்டிருக்கிறார், மேலும் பரிசுத்த ஆவியால் சபையை நிறைத்து, அவர் சொன்ன கிரியைகளைச் செய்து வருகிறார். நான் இன்றிரவு மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன், அது... நான் - நான் மிகவும்... அதன் காரணமாக நான் உலகத் திலேயே மகிழ்ச்சியான நபராக இருக்கிறேன், ஏனெனில் அவர் அதை வாக்குத்தத்தம் பண்ணினார். ஆம், அவர் அவர்களைப் புறம்பே தள்ளினார், ஏனெனில் அவர்கள் வார்த்தையைக் குறித்து நகைத்தனர். ஆம். அவர்கள் அனைவரையும் வெளியே போகச் செய்த பிறகு, இயேசு யாருடன் தனித்திருந்தார்? இருதயம் நொறுங்குண்டவர்களோடும் விசுவா சம் உள்ளவர்களொடும். அவர் பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துப்போனார்: விசுவாசம், நம்பிக்கை, அன்பு, அவர்களை அவரோடு அக்கட்டிடத்திற்குள் சேர்த்துக் கொண்டார், மற்றவர்களை வெளியே அனுப்பி விட்டார், அதன் பிறகு இயேசு இருதயம் நொறுங்குண்ட விசுவாசிகளோடு தனித் திருந்தார், அவர்கள் அழுது கொண்டிருந்தனர், ஏனெனில் அவர் கள் - அவர்களுடைய சிறு மகள் அங்கே மரித்தவளாய் படுத்துக் கிடந்தாள். அந்தச் சிறுமி ஒரு பிணமாகப் படுத்திருந்தாள், அவ ளைச் சுற்றிலும் மலர்கள் வைக்கப்பட்டிருந்தது. எல்லா அவிசு வாசிகளையும் அவரிடமிருந்து புறம்பே தள்ளிவிட்டார், அதைப் போன்று... 6161.ஓ, அது எவ்வளவு கடினமாக உள்ளது, அவிசுவாசம்... கடந்த இரவில், நாம் இங்கே கூட்டத்தில் உட்கார்ந்திருந்த போது, அந்த அவிசுவாசக் கீற்று இவ்விடத்தைத் திடீரென தாக்கிய போது இருந்ததைப் போல, அது அப்படியே... அது பயங்கரமாக இருந்தது. இந்த இரவுகளில் ஒன்றில், நான் கீழே சென்றடைந்து அந்த நபர்களை வருமாறு அழைக்கப் போகிறேன். அது அநேகருடைய உணர்வுகளை புண்படுத்தப் போகிறது, ஆனால் அது நன்றாக இருக்கிறது... நான் வழக்கமாக எல்லா நேரத்திலும் அதைச் செய் கிறேன், நான் அதைச் செய்தேன் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் - நான் கட்டுக்குள் வைத்திருக்கிறேன் - ஜனங்களுடைய உணர்வுகளின் காரணமாக அதை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளேன், ஏனெனில் நீங்கள் களைகளைப் பிடுங்கினால், அநேக கோதுமையையும் கூட பிடுங்கி விடுவீர்கள். பாருங்கள்? எனவே இப்பொழுது, அது இப்பொழுது கடைசி காலத்திற்கு மிகவும் சமீபமாயுள்ளது. எனவே நாம் அப்படியே தொடர்ந்து அணிவகுத்து முன் செல்வோம். ஆனால் அது - அது - அது ஜனங்களைப் பாதிக்கும் போது. அது உண்மையாகவே விசுவா சத்தைக் கொண்டிருக்க கூடாத ஜனங்களைப் பாதிக்கிறது, விசுவாசிக்க முடியாதவர்களை. பாருங்கள், அதைப் போன்றவை தொடர்ந்து சம்பவிக்கும் போது. எனவே, அங்கே நின்று கொண்டிருந்த அவருடைய விசு வாசம், நம்பிக்கை, அன்பாகிய : பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய விசுவாசமுள்ளவர்களும், உண்மையாகவே விசுவாசிக்கும் தகப்பனையும் தாயையும் தவிர மற்ற யாவற்றையும் - யாவரையும் வெளியே போகச் செய்த போது, அவர் அந்தப் பிணத்தினருகே நடந்து சென்றார். ஓ, பாருங்கள்? அவரால் அதைச் செய்ய முடிய வில்லை, அவர்கள் அனைவரும் அங்கே நின்று கொண்டு, 'ஏன், அதைக் கவனித்தீர்களா? ஒரு தீர்க்கதரிசி, அவள் நித்திரை யாயிருக்கிறாள் என்று சொல்லுகிறார். இப்பொழுது, நான் உங்க ளுக்குச் சொன்னேனே, உங்களுக்குச் சொன்னேன், உங்களுக் குச் சொன்னேன். அது எப்படியிருக்கிறது என்று பாருங்கள்? அது - அது... அதில் எதுவுமேயில்லை. அது வெறுமனே உணர்ச் சிவசப்படுதலைக் கொண்ட ஒரு பெருங்கூட்டம் ஜனங்கள் தான், அது நிச்சயமற்ற திட்டம் தான்; அங்கே அதைப் பற்றியது அவ்வ ளவுதான்' என்று கூறுகின்றனர். இயேசுவால் அதைக் குறித்து ஒரு காரியத்தையும் செய்ய முடியவில்லை; இன்றிரவும் அதைக் குறித்து ஒரு காரியத்தையும் அவரால் செய்ய முடியவில்லை. அவர் தம்முடைய சொந்த தேசத்திற்கு வந்த போது, அவர்களுடைய அவிசுவாசத்தின் கார ணமாக அவர் எதையுமே - அநேக கிரியைகளைச் செய்ய முடிய வில்லை. அவர்கள் அவ்விதமாக தொடர்ந்து செய்கின்றனர், அப் போது அவரால் அதைச் செய்ய முடியவில்லை, இன்றிரவும் அவரால் அதைச் செய்ய முடியாது. ஆனால் அவர் எப்பொழு தாவது அவர்களை ஒரு இடத்தின் உள்ளே வர விடாமல் தடுத்து, அவரால் விசுவாசிகளோடு இருக்கக்கூடுமானால்... அதன்பிறகு அவர் அங்கே படுத்திருந்த பிணத்தண்டைக்கு நடந்து வந்தார். அந்த சிறு பெண் மரித்திருந்தாள், ஒருவேளை பிணமாயிருந்த அவளின் சரீரத்திற்கு சுகந்த வர்க்கமிடப்பட்டு, கிடத்தப்பட்டிருந்தது. அவர் நடந்து சென்று அவளைக் கரத்தால் பிடித்து, அவளுடைய ஆத்துமா போயிருந்த அதோ அங்கேயுள்ள ஏதோவொரு இடத்தில் விண்வெளி உலகத்திற்குள் நோக்கிப் பார்த்து, 'சிறு பெண்ணே, எழுந்திரு' என்றார். ஜீவனுடைய பிரசன்னத்தில் மரணமானது எவ்வாறு இருக்க முடியும்? அச்சிறு பெண்ணின் நெற்றியிலிருந்த சுருக்கங்கள் - அவளுடைய மென்மையான சிறிய நெற்றியில் சுருக்கம் உண் டாகத் தொடங்கி, அவளுடைய கண்கள் திறந்தன. அவர் கரத்தைக் கொண்டு அவளைப்பிடித்து, அவளைத் தூக்கி விட்டு, 'அவளுக்குப் புசிக்க ஏதாவது கொடுங்கள். வேண்டாம், அதைக் குறித்து எதையும் கூறவேண்டாம். அவர்களை அங்கே வெளியே தனியே விட்டு விடுங்கள். அவர்களிடம் எதையும் கூற வேண் டாம்; அப்படியே - அப்படியே முன்சொல்லுங்கள். (பாருங்கள்?) அதைப் போக விடுங்கள்' என்றார். 6262.ஓ, என்னே. எல்லாம் கைகூடும். விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். அவர் என்னவாக இருந்தார்? அவர் மாமிசத்தில் இருந்த தேவனுடைய வார்த்தையாக இருந்தார். மேலும் இன்றிரவு அவர்கள் - கிறிஸ்து அங்கே உள்ளே இருப்பாரானால், அதே தேவன், அதே தேவனுடைய வார்த்தையானது உங்களுடைய மாமிசத்தில் இருக்கிறது. அவர் அதே கர்த்தராகிய இயேசுவாக இருக்கிறார்; நீங்கள் அவருடைய வஸ்திரத்தைத் தொடவோ அல்லது நீங்கள் விரும்பும் எதையும் உங்களால் செய்ய முடியும். அவர் இங்கேயிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்க மாத்திரம் செய்வீர்களானால், அவர் அதே காரியத்தை உங்களுக்கும் செய் வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் சிறிது நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். அவர்கள் ஆர்கன் இசைக்கருவியின் பக்கத்தில் சிறிது நேரம் போவார்களா என்று இங்கேயுள்ள ஆர்கன் இசைக்கருவி வாசிப்ப வரிடம் கேட்கப்போகிறேன். நீங்கள், 'விசுவாசிப்பாய் (Only Believe)' என்ற பாடலை வாசிக்க நான் விரும்புகிறேன். இப்பொழுது, தயவுசெய்து, ஒவ்வொருவரும் சுற்றுமுற்றும் போகாதீர்கள். சிறிது நேரம். அந்தவிதமாகப் பிரசங்கித்த பிறகு, அது ஒருவிதமாக கடினமான காரியமாக உள்ளது. நான் வெறு மனே ஜெபிக்க விரும்புகிறேன். அவர் என்ன செய்வார் என்ப தைப் பார்க்கவும், அவர் எனக்காக என்ன செய்வார் என்பதைக் கேட்கவும், அவர் உங்களுக்காக என்ன செய்வார் என்பதைக் கேட்கவும் நான் விரும்புகிறேன். 6363.இன்று சிறிது நேரத்திற்கு முன்பு, நான் உள்ளே வந்து, என்னுடைய மனைவியையும் அவர்களையும் மேலே அழைத்து வந்த போது, பில்லி என்னிடம் கூறினான், அவன், 'அப்பா, நான் வர சிறிது தாமதமாகி விட்டது, அசட்டையாக இருந்து விட்டேன்; நான் எந்த ஜெப அட்டைகளையும் கொடுக்கவில்லை. எனவே நீங்கள் இன்றிரவு ஏன் அவர்களுக்கு கொஞ்சம் பிரசங்கம் செய்யக் கூடாது?' என்றான். நான், 'சரி, நான் அப்படியே அதைச் செய்கிறேன்' என்றேன். எனவே நம்மிடத்தில் ஜெப அட்டைகள் இருந்தாலும் இல்லா விட்டாலும், எப்படியாகிலும் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப் போகிறோம் என்பதை நான் உணருகிறேன். பாருங்கள்? எப்படி யாயினும் நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்போம். அவர் யவீருடன் அங்கே நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. அந்த செய்தி கொண்டு வருபவன், 'அவரை வருத்தப்படுத்த வேண்டாம். அது - அது ஏற்கனவே மரித்து விட்டது. உம்முடைய பிள்ளை மரித்து விட்டாள். இன்மேல் அவரை வருத்தப்படுத்த வேண்டாம் - வேண்டாம் - வேண்டாம். எல்லா - எல்லா நம்பிக்கையும் போய்விட்டது' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. இப்பொழுது, அந்த சிறு மனிதனுடைய இரு தயம் நின்று போனது... ஒருவேளை, நான் சிறிது முன்பு, ஜெபவரிசையை நாம் கொண்டிருக்கப்போவதில்லை என்றும், வியாதியஸ்தருக்காக ஜெப அட்டைகளை கொடுக்கவில்லை என்றும் கூறின போது, உங்களு டைய இருதயமும் கூட ஒருவேளை நின்று போயிருக்கலாம். 'சகோதரன் பிரன்ஹாமே, நான் வருகிறேன்... நான் - நான் -நான் இன்றிரவு ஒரு ஜெப அட்டையைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்காக ஜெபிக்க வேண்டுமென விரும்புகி றேன்.' வெறுமனே விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நீங்கள் வெறுமனே - வெறுமனே விசுவாசிக்க மாத்திரம் செய்தால், அவ்வளவு தான். அவர் ஏற்கனவே வார்த்தையை கூறியுள்ளார்; அப் படியே விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள். நீங்கள் இங்கே மேலே வர வேண்டியதில்லை; நீங்கள் இருக்கும் இடத்திலேயே தரித்திருந்து, விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், அவர், 'விசுவாசிக்க மாத்திரம் செய்யுங்கள், எல்லாம் கைகூடும்' என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் மிகவும் பயபக்தியாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்பொழுது சற்று ஜெபியுங்கள். இங்கேயுள்ள ஒவ்வொரு வியாதிப்பட்ட நபரும், வியாதியாய் இங்கிருக்கிற ஒவ்வொரு நபரும் கிறிஸ்து உங்களிடம் வர வேண்டுமென்று விரும்பு கிறீர்கள், நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்த நான் விரும்பு கிறேன். நீங்கள் எங்கிருந்தாலும் அப்படியே உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இங்கேயுள்ள வியாதிப்பட்ட ஒரு நபர்... சரி. அப்படியே எல்லா இடங்களிலும், ஏறக்குறைய இடைவெளி இல்லாமல் நெருக்கமாக. 6464.இப்பொழுது, உங்களுடைய கரங்களைக் கீழே போடுங் கள். இப்பொழுது, அந்த சிறு பெண் என்ன செய்தாள்? அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். 'ஒரு ஜெப அட்டையைப் பெற்றுக்கொள்ள மிகவும் தாமதமாகச் சென்றாள்,' என்று நாம் கூற லாம். ஆனால் அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். அந்த சிறுமியின் ஆவி திரும்ப அவளுக்குள் வந்தது போல, அவளும் சுகத்தைப் பெற்றுக் கொண்டாள். அவர் அவள் மேல் கரங்களை வைத்தாலோ அல்லது அவள் அவரைத் தொட்டாலோ அல்லது - அல்லது... அவர்கள் இருவருமே யூதர்கள். ஆகவே அவள் அவரைத் தொட்டிருந்தாலும்... அல்லது மரித்த சிறுமி அவரைத் தொட முடியவில்லை, எனவே அவர் அந்த மரித்துப் போன சிறுமியைத் தொட வேண்டியதாயிற்று. எனவே இன்றிரவு நீங்களும் அவரைத் தொட முடியும். நம்முடைய பலவீனங்களைக் குறித்து தொடப்படக்கூடிய பிரதான ஆசாரியனாக அவர் இருக்கிறார். அங்கே சபையோரிடத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும் எனக்கு அந்நியர்களாக இருக்கிறீர்கள். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சகோதரன் எட் டால்டன் அவர்களை நான் காண்கிறேன். எனக்கு மற்ற நண்பர்களும் உண்டு என்பதை நான் அறிவேன். நான்... ஓ, டென்னஸியிலிருந்து வந்திருக்கும் சில ஜனங்கள் இங்கே மூலையில் உட்கார்ந்து - உட்கார்ந்து கொண்டிக்கிறார்கள். அந்த வாலிப ஸ்திரீ உள்ளே வரும்போது முகப்புக்கூடத்தில் வைத்து அவளைச் சந்தித்தேன். இப்பொழுது, நான் இதைக் கூறப் போகிறேன். நீங்கள் ஒரு அவிசுவாசியாக இருந்தால், நான் கட்டிடத்தினுள்ளே அல்லது கட்டிடத்தைச் சுற்றிலும் கூட தங்கியிருக்க மாட்டேன். எனெனில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன், புற்று நோய் அல் லது அப்படிப்பட்ட அசுத்த ஆவிகள் விட்டு போகுமானால்... அவைகள் ஜீவிக்கின்றன என்பது நம் அனைவருக்கும் தெரியும், ஏனெனில் நம்முடைய உயிர்களை அழிப்பதற்காக அவைகள் நமக்குள் இருக்கின்றன. வேதாகமத்தில், அந்த அசுத்த ஆவிகள் ஒரு நபரை விட்டுப் போகும்போது, அவைகள் வேறொரு நபருக்குள் சென்று விடுகின்றன (என்று எழுதப்பட்டிருப்பதை) ஞாபகம் கொள்ளுங்கள். எனவே நீங்கள் ஒரு விசுவாசியாக இல்லையென்றால், நான் இப்பொழுது அருகில் இருக்க மாட் டேன், ஏனெனில் அங்கே விசுவாசிகள் நெருங்கி இருக்கின்றனர். அந்தக் காரியங்கள் சம்பவிக்கின்றன என்பதை எவ்வளவு தடவைகள் நான் உங்களிடம் ஆர்வமுடன் வேண்டிக் கொண் டேன், என்றும் எவ்வளவு தடவைகள் நான் உங்களுக்குக் காண்பித்திருக்கிறேன் என்றும் ஞாபகம் கொள்ளுங்கள். கூட்டங் கள் முடிந்த பிறகு, பெரும்பாலும் யாராவது ஒருவர் எப்போதுமே அழைத்து அல்லது எழுதி: 'சகோதரன் பிரன்ஹாமே, நான் - நான் - நான் ஒரு அவிசுவாசி. நான் அன்றொரு நாள் சென் றேன், அந்த ஸ்திரீக்கு புற்று நோய் உள்ளதென்று நீர் அவளிடம் கூறின போது, நான், 'அது முட்டாள்தனம்' என்று கூறினேன். இப்பொழுது எனக்கும் புற்று நோய் இருப்பதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார்' என்கின்றனர். பாருங்கள், பாருங்கள்? சற்று ஞாபகம் கொள்ளுங்கள். நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத் தில் பேசுகிறேன். அது உங்களைப் பொறுத்தது. அது உங்களைப் பொறுத்தது. இப்பொழுது, வெறுமனே விசுவாசத்தைக் கொண் டிருங்கள், விசுவாசியுங்கள். 6565.பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. நித்திய கிருபையுள்ள தேவனே, நான் இன்றிரவு ஜெபிக்கிறேன், இந்த சபையோரிடத்தில் நீர்... இயேசுவே, நான் உம்மைக் குறித்து பேசுவதை உண்மையாகவே நேசிக்கிறேன். நீர் என்னுடைய - நீர் 31 வருடங்களாக என்னுடைய ஜீவியத்தில் இருந்து வருகிறீர். நான் எப்படியாக உம்மை நேசிக்கிறேன்! நான் - நான் உம்மை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்ட அந்த இரவில் நான் எவ்வளவாக மிக மகிழ்ச்சியாயிருந்தேன். நீர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கப் போகும்படி எனக்குக் கட்டளையிட்டபோது, நான் மிகவும் சந்தோ ஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். அப்போது அந்த இரவு நேரத்தில், நீர், 'போய் வியாதியஸ்தருக்காக ஜெபி' என்று என்னிடம் கூறின போது. வந்து கொண்டிருந்த அந்தத் தரிச னங்கள் ஒரு அசுத்த ஆவியென்று என்னுடைய சகோதரர்கள் என்னிடம் கூறினதுபோல அல்லவென்றும், அது நீரேயென்றும் என்னிடம் கூறினீர்; அது முழு தேசத்தையும் கலக்கினது, முழு உலகமும் ஒரு எழுப்புதலுக்குள் சென்றது. கர்த்தாவே, அது அதைச் செய்தது. உம்முடைய வார்த்தைகள் உண்மையுள்ள வைகள். பிறகு அந்நாளில் அந்த ஆற்றில், அங்கே நீர் என் மீது நின்ற போது, அங்கே ஆயிரக்கணக்கான ஜனங்கள் நின்று பார்த் துக் கொண்டிருந்த போது, சரியாக பிற்பகல் 2 மணியளவில், வெண்கலமாயிருந்த அந்த வானங்களிலிருந்து, அந்தப் பெரிய வெளிச்சமானது சுற்றிலும் மேலாக முழங்க, அந்தச் சத்தமானது, 'யோவான் ஸ்நானகன் அனுப்பப்பட்டது போல, கிறிஸ்துவின் வருகைக்கு முன்பாக இந்த செய்தியும் இரண்டாவதாக அனுப்பப் படும்' என்று உரைத்தது. கர்த்தாவே, அதே காரியம் செய்யப் பட்டதை நாங்கள் காண்கிறோம். இப்பொழுது நேரமானது போய்க் கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம். உம்முடைய வார்த் தைகள் அனைத்தும் உண்மையாயுள்ளது. இப்பொழுது, நாங்கள் இங்கே பாதையின் கடைசியில் இருக்கிறோம், இங்கே வெளியே வயல்களில் அறுவடைக்குப் பின் தானியங்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறோம் (gleaning), இந்தக் கடைசி எழுப்புதலி லிருந்து கடைசி வைக்கோலை (straw) பொறுக்கிக் கொண் டிருக்கிறோம். 6666.இப்பொழுதும், பிதாவே, இன்றிரவு, இங்கே சிகாகோ, இல்லினாய்ஸில், உலகத்தின் இந்த மகத்தான பக்கப்பாதைகளில் (crossroads) மீண்டும் ஒருமுறை நாங்கள் இருக்கிறோம். ஜனங்கள், 'ஓ, அது அசைக்கப்படக் கூடுமானால், அது அசைக்கப்படக் கூடுமானால்...' என்று கூறும்படி எப்படியாக ஏங்குகின்றனர்! ஓ தேவனே, அங்கே தெருவில் ஓடுகிற அந்த அணு மூலப்பொருள் ஒருபோதும் அதிரச் செய்யாது. அது ஒரு அணு குண்டுடன் அதிரும். ஆனால் உம்முடைய சபையானது முன்னே ஒருபோதும் இல்லாதது போல குலுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு போதும் கண்டிராத காரியங்களைக் காண்கிறது, கிறிஸ்து உலகத் தில் இருந்த முதற்கொண்டு அதற்கு பின்பாக இருந்த எந்த சபையும் கண்டிருக்கவில்லை. கர்த்தாவே, அது அசைக்கப்பட் டிருக்கிறது. உம்முடைய உண்மையான ஜனங்கள் தங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசித்திருக்கின்றனர். இப்பொழுது, வரப்போகிற மாற்றத்திற்கான வேளையாயுள்ளது, பெரும் வறட்சி, ஆவிக்குரிய வறட்சி உலகத்தைத் தாக்குகிறது, அதன்பிறகு கிறிஸ்துவின் வருகை. கர்த்தாவே, இன்றிரவு இன் னும் ஒரு தடவை நீர் அதை அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், எனவே சுவிசேஷமானது... அங்கே எங்கள் மத்தி யில் அந்நியர் இருக்கலாம். இன்றிரவு இரத்தத்தின் கீழே இல்லாமல் அதற்கு வெளியே இருக்கும் நபர் இங்கே இருப்பாரானால், தேவனே ஏதோவொன்று செய்யப்பட வேண்டும் என்று ஜெபிக்கிறேன், எம்மாவூரில் அந்நேரத்தில் நீர் செய்தது போல, நீர் இன்றிரவு எதையாவது செய்யும், உம்முடைய சிலுவை மரணத்திற்கு முன்பாக நீர் செய்தது போன்று ஜனங்களுக்கு ஒரு அடையாளத்தை நிரூபியும், நீர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த அதே இயேசுவாக இருக்கிறீர் என்றும் இன்றிரவு இங்கேயிருக்கிறீர் என்றும் அவர்கள் (காணும்படி) செய்யும். சர்வவல்லமையுள்ள தேவனாக பிரசன்னமாகியிருக்கும் கிறிஸ்துவே, அவருடைய ஆராதனைத் தொடரும்படியாக, இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற செய்தியுடன் நான் என்னையே ஒப்புக் கொடுக்கிறேன். இயேசுவின் நாமத்தில், அநேகர் ஒத்தாசை பெறட்டும், ஆமென். 6767.இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனு டைய மகிமைக்காக இங்கேயுள்ள ஒவ்வொரு ஆவியையும் என் கட்டுக்குள் கொண்டு வருகிறேன். இப்பொழுது, விசுவாசமாய் இருந்து ஜெபம்பண்ணுங்கள். வெறுமனே விசுவாசம் கொண் டிருங்கள். இப்பொழுது, நாம் இங்கே மேலே ஜெப அட்டைகளை அழைக்கப் போவதில்லை, ஏனெனில் இங்கே எந்த ஜெப அட்டை யும் நம்மிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை; சில சமயங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கலாம். எப்படியும் அது மிகவும் தாமதமாக உள்ளது. ஜெப வரிசை ஏற்படுத்தப் பட்டுள்ளது, அது வழக்கமான நேரத்தை விட அதிகமாக இருக்கும். இப்பொழுது 10 மணியாகிறது. ஆனால் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். வியாதியஸ்தராயிருந்து, நான் உங்களுக்கு அந்நியராயிருக்கிறேன் என்று அறிகிற அங்கே வெளியேயுள்ள ஜனங்களாகிய நீங்கள் அனைவரும் கிறிஸ்து பிரதான ஆசாரிய னாயிருக்கிறார் என்றும் அவர் இங்கே என்னை அனுப்பினார் என்றும் விசுவாசியுங்கள், திராட்சைச் செடி - திராட்சைக் செடி யின் கொடி என்று நான் கருதுகிறேன்... நீங்கள் அவரைத் தொடுவீர்களானால், அவர் என் மூலமாகப் பேசி, அதே கிரி யையை செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்க ளுடைய கரத்தை உயர்த்துங்கள். எனக்கு உங்களைத் தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு நன்றி. இப்பொழுது, நீங்கள் இந்த வழியாக நோக்கிப் பாருங்கள். ஒரு நோயாளியிடத்தில் அது நிரூபிக்கப்பட வேண்டியதாயுள்ளது. ஆனால் நாம் குறைந்தது அவர்களில் மூன்று பேரைக்கொண் டிருப்போம். நீங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண் டுமென்று நான் விரும்புகிறேன். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால், யாவும் கைகூடும். நான்... நீங்கள், 'சகோதரனே, எந்தப் பக்கத்திலிருந்து தொடங்கு கிறீர்கள்?' என்று கேட்கலாம். எனக்குத் தெரியாது; அவர் எந்தப் பக்கத்திலிருந்து தொடங்குகிறார் என்றும் அவர் எங்கிருந்து தொடங்குகிறார் என்றுமாக அது இருக்கிறது; அவர் போகிற விதமாக மாத்திரமே நான் போக முடியும். பாருங்கள்? நான் அப்படியே கவனிக்க வேண்டியுள்ளது, அது எங்கு தொடங்கி னாலும், நான் ஏதோவொன்றுக்காக எதிர்நோக்கிக் காத்திருக்கி றேன். அது அபிஷேகமாக உள்ளது. இப்பொழுது, இங்கே நான் இருக்கிறேன்; தேவன் அறிந்திருக்கிறார். பாருங்கள்? ஆனால் அவருடைய வார்த்தைக்கு முன்பாக, எனக்கு - எனக்கு உங்க ளைத் தெரியாது. இரண்டு அல்லது மூன்று பேரை எனக்குத் தெரியும், ஒருவர் சரியாக இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், இரண்டு பேர். அது சகோதரி டௌனிங் என்று நினைக்கிறேன், அது சரிதானே? அது சரிதான் என்று எண்ணுகிறேன். பாருங்கள்? இம்மனிதன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என் பதை அறிவேன், என் சகோதரன் டௌவும் சகோதரி டௌவும் இருவரும் அங்கே அந்த மூலையில் உட்கார்ந்து கொண்டிருக் கின்றனர். 6868.நான் அவர்களிடமிருந்து திரும்பியிருக்க முயற்சிப்பேன்... நான்... அவர் அவர்களிடமாக வருவாரானால், நான் சொல்ல வேண்டியதாயுள்ளது, ஏனெனில் என்னால் கூறக்கூடியது அவ் வளவு தான். எதுவும் சம்பவிப்பதற்கு முன்பாக எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள், அது உண்மையென்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சாத்தானே, நீ அதைக் காண்கிறாய். நீ ஒரு பொய்யன். நீங்கள், 'சகோதரன் பிரன்ஹாமே, அவன் உம்மை அவ்வித மாக சோதிக்கிறானா?' என்று கேட்கலாம். ஏன், நிச்சயமாக, அவன் நின்று, என்னை சோதிக்க முயற்சிக்கிறான். அவன் உங்களைச் சோதித்துக் கொண்டிருந்தால், அவன் இங்கேயும் அதைச் செய்து கொண்டிருக்கிறான் என்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் ஒரு மனி தன் ஒரு பிள்ளைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறான், அங்கே அடுத்ததாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது: அதனுடைய காலில் ஏதோ கோளாறு உள்ளது. அது சரியே, இல்லையா? எனக்கு உம்மைத் தெரியாது; நீர் எனக்கு ஒரு அந்நியராக இருக்கிறீர். ஆனால் திரு. ஃபார்மர் அவர்களே, தேவன் அந்தப் பிள்ளையை சுகப்படுத்தி, அதைக் குணப்படுத்தப்போகிறார் என்று நீர் விசுவா சிக்கிறீரா? நான் உமக்கு அந்நியராயிருந்தால், இவ்விதமாக உம்முடைய கரங்களை உயர்த்தும். நீர் எதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தீர் என்றும் உம்முடைய பெயரைக் குறித்தும் அதைக் குறித்த எல்லாவற்றையும் (அறியாதபடி) நான் அந்நியராயிருக் கிறேன், அப்படித்தானே? சற்று உம்முடைய கரத்தை உயர்த்தும். உம்மிடம் விண்ணப்பம் உள்ளது. இங்கே ஒரு சீமாட்டி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவ ளுக்கு கீல்வாதம் உள்ளது. அவளுடைய காதில் சிரங்கு உள் ளது. திருமதி. மெக்கில், அது சரியென்றால், உன்னுடைய காலூன்றி நில். நான் உனக்கு அந்நியனாயிருந்தால், உன்னுடைய கரத்தை அசைத்துக் காட்டு. நான் - நாம் அந்நியர்களாயிருந்தால், உன்னுடைய கரத்தை அசைத்துக் காட்டு. உன்னிடம் விண் ணப்பம் உள்ளது. வீட்டிற்குச் செல்; கிறிஸ்து உன்னை சுகமாக் குகிறார். சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக, அந்த ஜனங்களை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. நீங்கள் விசுவாசிக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ளுகிறேன். அப்படியே விசுவாசம் கோள்ளுங்கள். சந்தேகப்படாதீர்கள். 6969.பின்னால் அந்த வரிசையின் கடைசியில், பின்புறத்தை நோக்கிய வழியில், நுரையீரல் கோளாறைக் கொண்டிருக்கும் சீமாட்டி உட்கார்ந்திருக்கிறார்கள்; அவர்கள் அதைக் குறித்து கவ லைப்படுகிறார்கள். நான் அவர்களை அறிந்து கொள்ளும்படி தேவன் உதவி செய்கிறார். திருமதி. மில்லர், எழுந்து நின்று உங் களுடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குகிறார். அதுதான் நீங்களாக இருந்து, நான் உங்களுக்கு அந்நியராக இருந்தால்... திருமதி. மில்லர், உங்க ளிடம் ஜெப அட்டை உள்ளதா? உங்களிடம் இல்லையா? உங்க ளுக்கு ஒரு ஜெப அட்டை தேவையில்லை. சரி. வீட்டிற்குச் சென்று சுகமாக இருங்கள்; இயேசு கிறிஸ்து உங்களை சுகப் படுத்துகிறார். அந்த சீமாட்டி, கறுப்பின சீமாட்டி, சரியாக அவளுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், அங்கே பின்னால் என்னிடமிருந்து இந்த வழியில் இருக்கிறார்கள், அவளுக்கு ஒரு -ஒரு கட்டி உள்ளது; ஒரு அறுவை சிகிட்சைக்காக மருத்துவ மனைக்குச் செல்லும்படி உமக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்லது நீங்கள் (போக) வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். ஒரு சீமாட்டி, நான் அவளை இரண்டு வெள்ளை மனிதர்கள் மத்தியில் காண முடிகிறது, சீமாட்டியே, எழுந்து நில்லுங்கள். நான் உங்களுக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். எனக்கு உங்களைத் தெரியாது. உங்களிடம் ஜெப அட்டை உள்ளதா? உங்களுக்கு அது வேண்டாம். நான் உங்களை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் சந்தித்ததேயில்லை. நாம் ஒருவருக்கொருவர் அந்நியராயிருக்கிறோம். அது சரியென்றால், உங்களுடைய கரத்தை இவ்விதமாக அசைத்துக் காட்டுங்கள். நான் உங்களிடம் கூறினது சத்தியம் தானா? இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குகிறார். வீட்டிற்குச் சென்று, உங்களுடைய சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 7070.இங்கே பிசாசினுடைய ஆவியைக் கவனியுங்கள், அது சரியாக இங்கே வருகிறது, அந்த இருள் இந்த ஸ்திரீயின் மேல் அமருகிறது, வேறொரு கறுப்பின ஸ்திரீ இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். சீமாட்டியே, உங்களிடம் ஜெப அட்டை உள்ளதா? உங்களிடம் இல்லை. உங்களுக்கு ஒரு ஜெப அட்டை தேவையில்லை. உங்களுக்கும் கூட கட்டி உள்ளது. அது எங்கே இருக்கிறது என்று நான் உங்களிடம் கூற விரும்புகிறீர்களா? அது உங்களுடைய இடது தோளின் மேல் உள்ளது, உங்களு டைய பக்கத்தின் கீழே இடுப்பில். அது சரியே, இல்லையா? உங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். அங்கே பின்னால் அழுது கொண்டிருக்கும் திருமதி. ஹோல்ட்ஸ்மாஸ்டர், உனக்கு புற்று நோய் உள்ளதென்று எண்ணு கிறாய்; ஆனால் நீ - நீ சுகமாகப் போகிறாய். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. எழுந்து நில். எனக்கு உன்னைத் தெரியாது. நீ புற்றுநோயைக் குறித்து பயப்படுகிறாய், இல்லையா? ஆனால் அது உன்னை விட்டுப் போய் விட்டது. அது சரியாக உள்ளது. 7171.சகோதரியே, நீ எனக்கு ஒரு தயவு செய்வாயா, தேவன் உனக்கு செய்ததைச் சொல்லுவாயா? நாம் அந்நியர்களாயிருக்கிறோம், இல்லையா? திருமதி. மெக்அலிஸ்டர் என்று அழைக்கப் படுகிற உனக்கு பின்னால் இருக்கும் அந்த ஸ்திரீயின் மேல் உன் கரத்தை வை. அவளுக்கு என்னைத் தெரியாது. இன்னும் சரியாகச் சொன்னால் மெக்ஆலன். அவளுடைய தலையில் கோளாறு உள்ளது. ஆனால் அது அவளை விட்டுப் போகப் போகிறது, அவள் சுகமாகப் போகிறாள். அவள் மிக நன்றாகக் கேட்கவில்லை. சரி. திருமதி. மெக்ஆலன், இப்பொழுது அதெல் லாம் முடிந்து விட்டது, நீயும் கூட வீட்டிற்குப் போக முடியும். இயேசு கிறிஸ்து இப்பொழுது உன்னை சுகமாக்குகிறார் என்று நீ விசுவாசி. சரி. அப்படியானால் வீட்டிற்குச் சென்று, சுகமடைவாய். இப்பொழுது, அவர் இயேசு கிறிஸ்து என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள். காட்சியில் எழும்ப இதுவே வேளை. உங்க ளுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்க இதுவே தருணம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது அவரை உங்கள் சுகமளிப்பவராக எத்தனை பேர் ஏற்றுக்கொள்ளுகிறீர்கள்? அவர் கட்டிடத்தில் முன்னும் பின்னுமாக, உள்ளேயும் வெளியேயுமாக, முன்னோக்கியும் பின்னோக்கியுமாக கடந்து சென்று கொண்டிருக்கிறார், அதை விசுவாசியுங்கள். உங்களால் கூடுமான வரை உங்களுடைய முழு காலோடும் - உங்களுடைய முழு விசுவாசத்தோடும் அதை விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் காலூன்றி நின்று, உங்களுடைய சுகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். நான் சொல்லுவது போல் சொல்லுங்கள். (சகோதரன் பிரன்ஹாம் கூறுவது போல் சபையோரும் திரும்ப கூறுகிறார்கள் -ஆசிரியர்.) கர்த்தாவே, நீர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் என்னுடைய அவிசுவாசத்தை விட்டு விடுகிறேன். நான் உம்மை என்னுடைய இரட்சகராக ஏற்றுக் கொள்ளுகிறேன். நான் உம்மை என்னுடைய சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்ளுகிறேன். என்னுடைய இராஜாவாக உம்மை ஏற்றுக் கொள்கிறேன். இப்பொழுதும் கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். இதுமுதற்கொண்டு என்னுடைய சாட்சி ஒருபோதும் எதிர்மறையாக இருக்காது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் உம்மை துதிப்பேன். இப்பொழுது, உங்களுடைய கரங்களை உயர்த்தி, அவரைத் துதியுங்கள். அதெல்லாம் முடிந்து விட்டது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்...?... மட்டும் நம்புங்கள், மட்டும் நம்புங்கள்எல்லாம் சாத்தியம்,மட்டும் நம்புங்கள்.ஏனோக்கு 500 வருடங்கள் தேவனுடன் நடந்து, 'அவன் தேவ னுக்குப் பிரியமானவன்' என்ற சாட்சியை உடையவனாய் இருந்தது போன்று. அவன் மரிக்க வேண்டியிருக்கவில்லை, அப்படியே மேலே எடுத்துக் கொள்ளப்பட்டான். எனவே பிறகு, ஒரு பிற்பகல் வேளையில், அவன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்போது, அவன் அப்படியே நடக்க ஆரம்பித்து, 'நல்லது, நான் போதுமான காலம் பூமியில் இருந்து விட்டேன், நான் சற்று மேலே நடக்கப் போகிறேன்' என்று நினைத்தான். விசுவா சத்தினாலே, அவன் (நடக்க) ஆரம்பித்து, 'நல்லது, நான் இங்கே போதுமான காலம் இருந்து விட்டேன், எனவே இங்கேயிருப்பதைக் குறித்து ஒருவிதமாக களைப்படைந்துள்ளேன். நான் பால்வெளியை அடைந்து, அப்படியே மேலே நடந்து, அந்தக் கதவைத் தட்டும் அளவுக்கு நான் மேலே உலாவப் போகிறேன் என்று நினைக்கிறேன்' என்று எண்ணினான். எனவே அவன் அதைத்தான் செய்தான். பாருங்கள்? விசுவாசத்தினாலே அவன் அதைச் செய்தான். வேதாகமம் அவ்வாறு கூறுகிறது.